எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஜூலை, 2011

சிறகு முளைக்கும் சிட்டுக்கள். பள்ளி செல்லும் பறவைகள்.



”பள்ளிக்குச் சென்றிருக்கும் பையன்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்தே மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ” எனக் கவலையுறுவது அம்மாக்களின் இயல்பு. உங்க வீட்டில் ஸ்கூலுக்கு போக ரெடியா குட்டிப் பொண்ணு அல்லது குட்டிப் பையன் இருக்கானா .. அப்ப இந்த விவரம் எல்லாம் நீங்கதான் தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுகிட்டு உங்க குட்டீஸ்கிட்டயும் சொல்லிக் கொடுக்கணும்.



முதன் முதலா வீட்டின் செல்லக் குட்டி ஸ்கூலுக்கு போக நாம முதல்ல ரெடி பண்ணனும். குழந்தை பிறந்தவுடனே ஸ்கூல் அப்ளிக்கேஷன் ஃபில் பண்ணிக் கொடுக்கணும்னு ஜோக் எல்லாம் படிச்சிருக்கலாம். ஆனா அது உண்மையாகிக்கிட்டுத்தான் வருது. நல்ல பெயர் எடுத்த பள்ளிகள்ல சேர்க்குறதுக்கு தந்தையும் தாயும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேணும். தற்காலத்துல பிறக்குற குழந்தைகள் எல்லாம் அதிகமான ஐக்யூவோட பிறக்குறாங்க. எனவே இண்டர்வியூவெல்லாம் ஜமாய்ச்சிடுவாங்க. பெற்றோரான நீங்க சொதப்பிடாம இண்டர்வியூவில நல்லா பதில் சொல்லுங்க.

முதல்ல குழந்தைகள் பள்ளிக்கு போகணும்னா கொஞ்சம் பிரிவுக்கு தயார்படுத்துங்க.. வேலைக்குப் போற அம்மாக்கள்னா குழந்தைகள் கொஞ்சம் பிரிஞ்சு பழகி இருப்பாங்க.. ஆனா வீட்டில் அல்லும் பகலும் கூடவே கட்டிக்கிட்டு இருக்கிற அம்மாக்கள் கொஞ்சம் உங்க பிள்ளைகளை அவ்வப்போது சில மணி நேரமாவது பிரிந்து அம்மா வீட்டில் அல்லது மாமியார் அல்லது உறவினரிடம் விட்டுட்டு எப்படி இருக்குறாங்கன்னு பாருங்க.. நீங்களும் கொஞ்சம் பிரிஞ்சு இருக்க கத்துக்கணும். இல்லாட்டி ஸ்கூலுக்கு போய் அவங்க அழறதுக்கு முன்னாடி நீங்க கண்ண கசக்கிக்கிட்டு நிப்பீங்க.

ரெண்டாவதா சுகாதாரம். வீட்டிலேயே ஒன் பாத்ரூம் வந்தா ., டாய்லெட் வந்தா சொல்லி விடச் சொல்ல சொல்லுங்க. அப்பதான் ஸ்கூலயும் அந்த பழக்கம் வரும். இல்லாட்டி டீச்சர் அல்லது ஆயா தினம் திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. பிள்ளைகளுக்கு நாப்கின் கட்டி விடுற பழக்கத்தை 1 1/2 வயதுக்கு மேல நிறுத்திடுங்க. உணவையும் ஊட்டியே பழக்காமல் ஒரு பவுலில் போட்டு ஸ்பூன் போட்டு சாப்பிடப் பழக்குங்க. கொஞ்சம் முதல்ல சிந்தத்தான் செய்வாங்க. அப்பதான் தேவையானதை சாப்பிடப் பழகுவாங்க.. இல்லாட்டி ஸ்கூல்ல இண்டர்வெல் பிரீயட் முடியுற வரைக்கும் பாதி லஞ்ச் கூட சாப்பிடாம முழிச்சிகிட்டு இருப்பாங்க. சீக்கிரம் சாப்பிடுன்னு குழந்தைக்கு திட்டு விழும். அல்லது யாராவது ஊட்டி விடுறேன்னு சுகாதாரமில்லாத கையோட கொடுத்துடுவாங்க.

இது பர்சனல் ஹைஜீனிக் சம்பந்தப்பட்ட விஷயம். எப்பவும் குழந்தைகள் சாப்பாட்டை மிஸ் செய்யவே கூடாது. வீட்டிலும் தேவையானதை சரியா சாப்பிடுதான்னு பாருங்க. அப்புறம் நகம் .,தலை முடி எல்லாம் அப்போ அப்போ வெட்டி விட்டுருங்க. சில பள்ளிகள்ல இதெல்லாம் பார்க்கிறாங்க. சரியா இல்லாட்டா பனிஷ்மெண்ட் கொடுக்குறாங்க. சுத்தமா இருந்தா நகத்தின் மூலமா அழுக்கும் வயித்துக்குள்ள போகாது. டைபாய்டு மற்றும் வயிற்றுப் போக்கு எனப்படும் டீஹைட்ரேஷனுக்கு இதுதான் காரணம்.

பிள்ளைகள் அணியும் சீருடை சரியா இருக்கா .. அதுனால அதுக்கு ஏதும் இன்கன்வீனியண்ட் இருக்கான்னும் பார்த்துக்குங்க. அது ட்ரெஸ் இறுக்கி வயித்து வலியாலயோ ., எதாலயோ அழும்போது கோபிக்காம மெதுவா என்ன விஷயம்னு விசாரிங்க.. அது போலத்தான் குழந்தையின் தினசரி வகுப்பு எப்பிடி நடக்குது., டீச்சர் நல்லா சொல்லித்தராங்களா., ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நல்லா பழகுறாங்களான்னு தெரிஞ்சுக்கணும். யாரும் திட்டினாங்களா., அடிச்சாங்களான்னும் கேட்டு தெரிஞ்சுக்கணும்., இப்போ பிள்ளைகள் நர்சர் ரைம்ஸ் சொல்வது போல கேட்ட எல்லா வார்த்தைகளையும் ஒப்பிக்க ஆரம்பிச்சிடும். அதுனால குழந்தைகள் முன்னாடி போடதீங்க. ஸ்கூல்லயும் பசங்க என்னென்ன வர்த்தைகள் பேசுறாங்க.. அதுல குழந்தை என்னென்ன கத்துக்குக்குதுன்னும் கவனிப்பது அவசியம்.

ஸ்கூலுக்கு ஆட்டோ அல்லது ரிக்‌ஷா ஏற்பாடு செய்தால் குழந்தைகளை அடைத்துக் கொண்டு போகாமல் இருக்கிறார்களா எனப் பாருங்கள்.. அல்லது ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸாக இருந்தாலும் டிரைவர் .,மற்றும் பொறுப்பாளர் எப்படி நடத்துகிறாகள் குழந்தையை என குழந்தையிடம் கேளுங்கள். குட் டச்., பாட் டச் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். வேறு யார் எது கொடுத்தாலும் வாங்கி உண்ணக் கூடாது என்று குழந்தையிடம் கண்டிப்பாக சொல்லுங்கள். வாகன ஓட்டிகளின் போன் நம்பர் அல்லது அவர்கள் நிறுவனத்தின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. தேவை ஏற்படின் போன் செய்தும் விசாரியுங்கள். குழந்தைக்கு முதலில் அதன் பெயர்., அம்மா அப்பா பெயர் ., வீட்டு முகவரியை சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் போன் நம்பரையும் சொல்லிக் கொடுத்து சொல்லச் சொல்லலாம்.

அதற்காக எல்லாரையும் எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டாம்.. எல்லாரும் நல்லவராகவும் இருக்கக் கூடும்.
பிள்ளைகளுக்குத் தேவையான பாட புத்தகங்களை அட்டை போடவும் அடுக்கி வைக்கவும் பழக்க வேண்டும். ஸ்கூலில் இருந்து வந்தவுடன் எல்லாவற்றையும் அங்கே அங்கே வீசாமல் ஷூ ஸ்டாண்டில் ஷூவையும் ., உடை மாற்றியபின் ட்ரெஸ்ஸையும் சாக்ஸையும் வாஷிங் கூடையிலும் போட சொல்லலாம்.

ப்ளேஸ்கூலில் விடும் சின்னப் பிள்ளைகள் என்றால் சறுக்கு விளையாட்டுகளில் விளையாடும்போது கவனமாக விளையாட சொல்ல வேண்டும். கீழே விழுந்து அடிபடுவது சகஜம்தான் என்றாலும் ., அது பெரிதாகாமல் அவ்வப்போது மருந்து தடவி பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை ஒருவரை ஒருவர் தள்ளிக் கொள்வது., அடித்துக் கொள்வது என்பது எல்லாம் உங்களுக்கு சொல்லும் படி சொல்ல வேண்டும். உடல் நிலை சரியில்லை என்றால் மாத்திரை எல்லாம் கொடுத்து கட்டாயமாக பள்ளியில் கொண்டு போய் தள்ளாமல் ஒரு சில நாளாவது லீவு போட்டு கூட இருக்க வேண்டும். பின் உடல் ஓரளவு சரியானவுடன் அனுப்பலாம்.

சாப்பாடை மிச்சம் கொண்டு வந்தால் மிரட்ட வேண்டாம். அடுத்த வேளைகளில் கலர்ஃபுல்லாக நியூட்ரிசியசாக செய்து கொடுங்கள். ஒழுங்காக சாப்பிட்டால்., படித்தால்., ஹோம் ஒர்க் செய்தால்., பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வதாக சொல்லுங்கள் பிடித்ததை வாங்கித்தருவதாகச் சொல்லுங்கள். சமர்த்தாக செய்வார்கள். நன்கு செய்யும் போது அணைத்து முத்தமிடுங்கள். குழந்தைகளுக்கு அரவணைப்பு முக்கியம்.

வீட்டுக்கு வந்தவுடன் ஹோம் ஒர்க் செய்தால் அவ்வப்போது சிறிது நேரம் கார்டூன்கள் பார்க்க அனுமதி கொடுங்கள்.. வீட்டில் அல்லும் பகலும் கார்டூன்கள் ஓடிக்கொண்டே இராமல் இவ்வாறு டைம் லிமிட்டேஷன்ஸ் இருப்பது நல்லது. எதற்கும் மிரட்டுவது ., அதட்டுவது., கத்துவது என செய்யாமல் மென்மையாக சொல்லிப் புரிய வைத்தால் ஒழுங்காக கேட்பார்கள்.

குழந்தைகள் என்றால் சிறிது சேட்டையும் சொல் பேச்சு கேளாமலும்தான் இருக்கும். நீங்கள் என்ன கூண்டுக் கிளியையா வளர்க்கிறீர்கள்.. அது குழந்தை சாமி குழந்தை... அது ஆட்டம் போடுவதைப் பார்த்து கருப்பண்ண சாமி மாதிரி கோபத்தில் கண்ணை எல்லாம் உருட்டி மிரட்டாதீர்கள். உங்களை அந்த சமயத்தில் கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கே பயமாய் இருக்கும் . எப்போதும் புன்னகையும்., சிலசமயம் லேசான கண்டிப்புமே போதும் .

சரி சரி குழந்தை ஸ்கூலுக்கு நேரமாச்சு.. ப்ரிபேர் பண்ணுங்க போங்க.. மறந்துடாம கொஞ்சம் குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸையும் வைச்சு அனுப்புங்க.. குட்டி முத்தத்தோட..


டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவளில் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது.

16 கருத்துகள்:

  1. .. நீங்களும் கொஞ்சம் பிரிஞ்சு இருக்க கத்துக்கணும். இல்லாட்டி ஸ்கூலுக்கு போய் அவங்க அழறதுக்கு முன்னாடி நீங்க கண்ண கசக்கிக்கிட்டு நிப்பீங்க./

    பிள்ளைகள் சமர்த்தா அம்மாவுக்கு தைரியம் சொல்வார்கள் சில இடங்களில் வேடிக்கையாக இருக்கும்.

    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  2. அ ழகாக எளிமையாக குழந்தைகளின் மொழியில் குழந்தைகள் பற்றிய பதிவு.

    பதிலளிநீக்கு
  3. நல்லா சொல்லியிருக்கீங்க‌ ...


    [[படித்தால்., ஹோம் ஒர்க் செய்தால்., பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வதாக சொல்லுங்கள் பிடித்ததை வாங்கித்தருவதாகச் சொல்லுங்கள் ]]

    சொன்னபடி வாங்கியும் கொடுங்க, குழந்தைகளிடம் பொய்யாக ஆசை காட்டுவதும் கூடாது ...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் உபயோகமான தகவல்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  5. புதுசா பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சிருக்கும் குழந்தைகளை வெச்சிருக்கறவங்க அவசியம் படிக்கவேண்டிய இடுகை..

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் அக்கா.
    அனைவருக்கும் பயனுள்ள ஒரு கட்டுரை.

    பதிலளிநீக்கு
  7. பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் இருக்கின்ற வீடுகளில் உள்ள எல்லா பெரியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை. மிகவும் பயனுள்ள ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
  8. அழகான, அவஸ்யமான, அருமையான, அனைத்தையும் சொல்லியிருக்கும், அட்டகாசமான பயனுள்ள பதிவு.

    புதிய பேரன் பிறந்து 85 நாட்களே ஆகியுள்ளது. என் மகனையும், மருமகளையும் படிக்கச்சொன்னேன்.

    உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சிறகு முளைக்கும் சிட்டுக்களை எப்படி பத்திரமாக இப்பரந்த உலகத்தில் பறக்க விடணுமென்பதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க தேனம்மை.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, பகிர்வுக்கு நன்றி மேடம்!

    பதிலளிநீக்கு
  11. கருப்பண்ண சாமி மாதிரி கோபத்தில் கண்ணை எல்லாம் உருட்டி மிரட்டாதீர்கள். உங்களை அந்த சமயத்தில் கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கே பயமாய் இருக்கும் . எப்போதும் புன்னகையும்., சிலசமயம் லேசான கண்டிப்புமே போதும் .

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //எப்போதும் புன்னகையும்., சிலசமயம் லேசான கண்டிப்புமே போதும் .//


    இதமா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பனும்னு பெற்றோர்களுக்கு
    பதமா சொல்லியிருக்கீங்க....

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  13. நன்றி கருன்., ராஜி., ரமேஷ்., ஜமால்., ஸாதிகா., சாரல்., குமார்., கௌதமன்., ராஜா., கோபால் சார்., ராமலெக்ஷ்மி., ரூஃபினா., ப்ரியா., ரத்னவேல் ஐயா., மாய உலகம்.,

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...