எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 ஜூன், 2010

பழைய மரத்தின் கிளைகள்

கெடிகாரத்தின் கரங்கள்
முடங்கிப் போய் அல்லது
நுடங்கிப் போய்..

அலுவலுக்கும் பள்ளிக்கும்
சென்ற பின்னர்
கடமைகளில் கனத்துக்
கிடந்த கரங்களில்
பூஞ்சிறகு முளைக்கிறது..

கண்ணுக்குத் தெரியா உலகு சென்று
எல்லோரையும் உறவாய் உணர்ந்து.,
கதைத்துக் கலாய்த்துக் கவிதை எழுதி.,

கண்கள் சோர்வுறும் வரை...
அலைந்து அனைவரும்
திரும்பும் வரை இது நீடித்து......


கேட்பதற்கென்று காதுகள் இருந்தன..
சில சமயம் முன்பு வரை..
சொல்லவும் அவர்க்கு கதைகள் இருந்தன..

எல்லாம் பழகியும் புரிந்தும்
இருக்கும் நாட்களில்..
வாய் கூட உணவு அருந்த மட்டுமே..

பேசவும் கேட்கவும் பகிரவும்
அவரவர்க்குத் தோழமைகள்..
வீடு என்பது கூடி வாழும் இடமாய்..

இருந்தாலும் பறவைகளுக்கு
இளைப்பாற.. பழைய மரத்தின்
கிளைகள்தான் சொர்க்கமாய்..

28 கருத்துகள்:

  1. //அலுவலுக்கும் பள்ளிக்கும்
    சென்ற பின்னர்
    கடமைகளில் கனத்துக்
    கிடந்த கரங்களில்
    பூஞ்சிறகு முளைக்கிறது...//

    ரசித்தேன் அழகு வரிகள் தேனக்கா...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்தான் சொர்க்கமாய்..//

    அடடடா! கவிதை சிலருக்குத்தான் கை கூடி வருகிறது, தேனம்மை, அதில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். மெருகேறி பளபளக்கும்

    பதிலளிநீக்கு
  3. //அலுவலுக்கும் பள்ளிக்கும்
    சென்ற பின்னர்
    கடமைகளில் கனத்துக்
    கிடந்த கரங்களில்
    பூஞ்சிறகு முளைக்கிறது..//

    //இருந்தாலும் பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்தான் சொர்க்கமாய்..//

    ம்ம்ம் , அழகு

    பதிலளிநீக்கு
  4. //பேசவும் கேட்கவும் பகிரவும்
    அவரவர்க்குத் தோழமைகள்..
    வீடு என்பது கூடி வாழும் இடமாய்..//

    மனிதர்கள் தனித்தனி தீவுகளாய்..வாழும்
    அவசர யுகத்தில் அழகு கவிதை...!

    பதிலளிநீக்கு
  5. நல்லாயிருக்கு அக்கா

    கெடிகாரத்தின் கரங்கள்
    முடங்கிப் போய் அல்லது
    நுடங்கிப் போய்..


    இருந்தாலும் பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்தான் சொர்க்கமாய்..

    பதிலளிநீக்கு
  6. pazhaya marame sorgamaai ungalukku irukka en vaazhththukkal. kavignar vaazhga.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கவிதைகளிலும் தேனின் சுவை இருக்கிறது ...நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  8. பேசவும் கேட்கவும் பகிரவும்
    அவரவர்க்குத் தோழமைகள்..
    வீடு என்பது கூடி வாழும் இடமாய்..

    இருந்தாலும் பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்தான் சொர்க்கமாய்..

    ..... very nice. அருமையாக இருக்கிறது, அக்கா!

    பதிலளிநீக்கு
  9. சித்ரா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  10. //கடமைகளில் கனத்துக்
    கிடந்த கரங்களில்
    பூஞ்சிறகு முளைக்கிறது..//

    அழகான உண்மை தேனக்கா.
    கவிதையும் கூட.

    பதிலளிநீக்கு
  11. //பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்//

    கூடு திரும்பும் பறவைகளின் கெச்சட்டம் மனதுக்கு இசை

    பதிலளிநீக்கு
  12. //
    இருந்தாலும் பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்தான் சொர்க்கமாய்..
    //

    மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  13. //பறவைகளுக்கு
    இளைப்பாற.. பழைய மரத்தின்
    கிளைகள்//
    அருமை

    பதிலளிநீக்கு
  14. முற்றிலும் உண்மை பழைய மரத்தின் கிளைகள்தான் சொர்க்கம்.

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  15. இளைப்பாறுங்கள் சொந்தக்கூட்டில்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  16. நன்றி புலிகேசி., கனி.,ராஜ்., ரோஹிணி., ஜெய்., தமிழ் வெங்கட்.,
    பாலா சார்., சசி., ராம்ஜி.,அமைதிச்சாரல்., அஹமத் இர்ஷாத்.,செந்தில் குமார்., மயிலு., azhagai mynthan.,சித்து .,ஜமால்.,ஹேமா., நேசன்.,ஜகதீஸ்வரன்., வேலு ., அம்பிகா.,மேனகா,., கோமதி.,ஸாதிகா.,விஜய்., முனியப்பன் சார்..

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...