எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 மே, 2018

பொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.

தூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திராவுக்குச் சென்று நிகழ்வில் பங்கேற்றேன்.

https://www.youtube.com/watch?v=Yzyx6NvSPwc

எந்தத் தொய்வுமில்லாமல் அடுத்தடுத்து தொடர்புடைய மிக அருமையான கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கிய தொகுப்பாளினி கௌதமி ராஜாராமுக்கும் ( முதலில் நியூஸ் ரீடராகப் பணியாற்றி உள்ளார் ) அதுதான் முதல் நிகழ்ச்சியாம். தொய்வில்லாமல் நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டு சென்றதில் அரைமணிநேரம் போனதே தெரியவில்லை.

இரண்டு மூன்று இடங்களில் சரிவர என் பதிலை நான் சொல்லவில்லை. முதலில் எல் கே ஜி, யூ கே ஜி படித்தது  காரைக்குடி அழகப்பா ப்ரிப்பரேட்டரி மாண்டிசோரி, அதன் பின் இரண்டாம் வகுப்பு வரை  செயிண்ட் ஜோசப்  மன்னார்குடி, அதன்பின் எட்டாவது வரை கணபதி விலாஸில் படித்தேன். இவற்றைச் சொல்ல விட்டுவிட்டேன். அதன்பின் தான் திரும்ப ஒன்பதாவது, பத்தாவது, ப்ளஸ் ஒன் ,  ப்ளஸ்டூ வரை செயிண்ட் ஜோசப் பள்ளி.

அதே போல் பெண்பூக்கள் நூலில் 57 பூக்கள் என்று சொல்லும் இடத்தில் 57 புஸ்தகங்கள் என்று சொல்லி இருப்பேன். :)

குழந்தை பிறந்தவுடன் சிவப்புப் பட்டுக் கயிறு கட்டுவார்கள். அதைப் பிள்ளை விடும்போது அறுப்பார்கள். என்று சொல்ல நினைத்து குழந்தை  பிறந்தவுடன் பட்டுக்கயிறு அறுப்பார்கள் என்றிருப்பேன் :)

ஓரிடத்தில் கடற்கொள்ளையர்கள் மனைவி என்பார் அந்த இடத்தில் கடத்தப்பட்டவர்கள் மனைவி என்பதை நான் சொல்லி இருக்க வேண்டும்.

முடிவாக வட்டார மொழி வழக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அழிந்துவரும் வட்டாரப் பழக்க வழக்கங்கள், மொழி, உணவு, வீடுகள், உடைகள், பழம் பெருமைகள், பெண்களின் நிலைகள் ஆகியன ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று சொல்ல நினைத்தேன். விட்டுப் போய்விட்டது. இங்கே சொல்லி விட்டேன். :)





இந்நிகழ்ச்சிக்கு என் பெயரை முன்மொழிந்த தோழி இளமதி பத்மாவுக்கும் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சாருமதி மேடம் அவர்களுக்கும், உதவியாளர் ஜெயராமுக்கும், படப்பிடிப்புக் குழுவினருக்கும். மிக மிக அருமையாகச் சரளமாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கௌதமி ராஜாராம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

என் வலைத்தள நண்பர்கள் முகநூலிலும் இருப்பதால் வலைத்தள நண்பர்களுக்கு நன்றி என்று சொல்ல விட்டுப் போய் விட்டது . நீங்கள் இல்லாமல் என் உயர்வு என்பது இல்லை. உங்கள் அனைவரின் ஊக்கமூட்டுதலுக்கும் நன்றி. 

அதே போல் சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் மணிமேகலை, கீதா இளங்கோவன், விஜயலெக்ஷ்மி ஜெயவேலு, கவிதா சொர்ணவல்லி, மடோனா ஜனனி , செல்வராணி, ஜெய கல்யாணி, கோமதி ஜெயம், நலந்தா ஜம்புலிங்கம், பீட்டர்ராஜ், வேடியப்பன்,  ஏவிசி கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம் செந்தில்வேல், பார்க் கல்லூரியின் திருமாறன் ஜெயமாறன், ஜெ ஜெ கல்லூரியின் தாளாளர் சுப்ரமணியம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

12 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி. வாழ்த்துகள். விரைவில் நிகழ்வைப் பார்த்து விட்டுக் கருத்துரை அளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உயரே உயரே போய்க் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள். பேட்டி முழுவதும் பார்த்தேன் / கேட்டேன். எங்கள் ப்ளாக்கிலும் கதை கேட்டார்கள், கொடுக்க நேரமில்லை என்று சொல்வீர்கள் என்று பார்த்தேன். ஊ...ஹூம்!

    :)))))

    உங்களுக்கு 44 வயது என்று தெரிந்து கொண்டேன்!!! பின்னணியில் மூங்கில் தோட்டம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பேச்சு.
    எழுத வரும் பேச வராது என்று அடக்கமாய் சொல்கிறீர்கள்.
    நன்றாக பேசினீர்கள்.
    பெண் பூக்கள் விவரம் அருமை.


    பதிலளிநீக்கு
  6. சிவப்பு பட்டுக் கயிறு பற்றி சொன்னது உங்கலை பாதித்த செய்தியை சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  7. முழுவதும் பார்த்தோம். கேட்டோம் சகோ/தேனு. மிக அழகாகத்தான் பேசியிருக்கிறீர்கள். அருமையாக இருந்தது. வாழ்த்துகள்! மேலும் மேலும் பல வெற்றிகளைக் குவித்திடவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராமலெக்ஷ்மி :)

    நன்றி பாலா சார்

    நன்றி ஸ்ரீராம். அஹா அனுப்பிடுறேன் சீக்கிரம். :)

    நன்றி கோமதி மேம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி மணவாளன்

    நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  9. பொதிகைத் தொலைகாட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். வாழ்ந்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...