எனது நூல்கள்.

வியாழன், 31 மே, 2018

ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

ஏழு தர்வாஜாக்கள் (  ஏழுபக்கம் நுழைவாயில்கள் )  உள்ள கோட்டை பிதார். நுழை வாயில்கள் மட்டுமல்ல. கோட்டையின் உள்ளேயும் ஏகப்பட்ட வாயில்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் கோட்டைகளுடன் பிதாரும் மிகச் சிறந்த கோட்டை ஆனால் மிகச் சிதைந்த கோட்டையும் கூட. பஹாமனியர்கள் ஆட்சிக்காலத்தில் பதினாறு தூண் மசூதிகளும் பல்வகையான மஹால்களும் கொண்ட இக்கோட்டையின் மிச்சத்தையும் எச்சத்தையும் பார்க்கலாம் வாங்க.

வரிசையா ஏழு வாயில்களையும், அங்கங்கே சுரங்கப்பாதைகளையும் பார்த்துக்கிட்டே போகலாம். கோட்டைகளின் காதலி நான்.  கால்வலிக்க நடந்து நடந்து நான் காதலித்த கோட்டைகளில் இதுவும் ஒன்று. :)

குல்பர்க்காவிலிருந்து ஹைதை வரும்வழியில் இருக்கிறது இக்கோட்டை. இதன் ட்ரபீசிய வடிவ மதில்கள் கொள்ளை அழகு. மதிலும் அகழியும் கொண்ட நுழைவாயில் இது.


உள்ளே வந்தாச்சு.


பாரசீக இஸ்லாமியக் கட்டிடக் கலையின் உச்சம் இக்கோட்டை. டூம்களும் டோம்களும் நிறைந்தது.
சோலாஹ் கம்பா மாஸ்க் இருக்கும் இடம். தாரகேஷ் மஹால் எல்லாம் இங்கேதான். சுற்றிலும் தோட்டம். முகல் கார்டன்.
பக்கவாட்டில் சுற்றி உள்ளே போவோம் வாங்க.
இதோ அடுத்த வாயில்.
அடுத்தும் உள்ளே ஒரு தர்வாஜா.
தலைவர் நிற்கும் தர்வாஜா :)
பக்கவாட்டு மஹல்களின் நுழைவாயில்.
அடுத்து செல்வோம் வாங்க.
இதோ இன்னும் சில வாயில்கள்.
கீழே ஒரு சுரங்கப்பாதை.
தற்போது மூடி இருக்கிறார்கள்.  இரட்டைச் சுரங்கங்கள்.
அடுத்தொரு வாயில்.
அதன்கீழ் பின்புறம் ஒரு சுரங்கப்பாதை.
தண்ணீர் செல்லும் வழியா இல்லை சுரங்கமா தெரியவில்லை.
கடைசியாக தர்பார் மண்டபம் போல் தெரிகிறது.

இதோ இன்னொரு தர்வாஜா. இதன் பெயரை அதன்லோக்கல் கைடு சொன்னார். ஆனால் மறந்துவிட்டது.


கடைசி தர்வாஜா.
கிட்டத்தில்.
வந்த வழியே திரும்புவோம்.
மறைவாய் சில வாயில்கள்.
நீளமாய் வெளிவருவோம்
நன்றி பஹாமனியர்களே. இம்மாம்பெரிய கோட்டையைக் கட்டினதுக்கு.

என்ன ஒரு அழகு. என்ன கலைநயம்.

இரண்டாம் வாயிலுக்கு திரும்பி விட்டோம்.
இது ஏதோ ஒரு பக்கவாட்டு வாயில்.
முதல் வாயிலின் உட்புறம்.

கர்நாடகாவில் அழகிய பல கோட்டைகள் உள்ளன. அதில் ஒன்றைச் சுற்றிப் பார்த்தோம். வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இக்கோட்டைகள் இன்றும் மனிதனின் விடாமுயற்சியையும், உரிமைப் போராட்டங்களையும் மண்ணின் மீதான அதீத நேசத்தையும் அதற்காக கடைசிவரை போராடியதையும் காட்டும்  ஜீவித சாட்சியங்களாக  நிற்கின்றன.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?! 

6. பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

7. ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கோட்டையின் வடிவமும், பிரம்மாண்டமும் வியப்பைத் தருகின்றன சகோதரியாரே

R Muthusamy சொன்னது…

பிதார் கோட்டை குறித்த தகவல் புகைப்படங்களுடன் இணைத்துப் பதிவு செய்தது சிறப்பு. அமைவிடம், பயணம் பற்றிய தகவல்களையும் இணைத்திருந்தால்
இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

பார்க்காத இடம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அழகான படங்கள். இடமும் பார்த்ததில்லை. அழகாக இருக்கிறது பிரம்மாண்டம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி முத்துசாமி சகோ முன் இடுகைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

நன்றி பாலா சார்

நன்றி துளசி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...