ஏழு தர்வாஜாக்கள் ( ஏழுபக்கம் நுழைவாயில்கள் ) உள்ள கோட்டை பிதார். நுழை வாயில்கள் மட்டுமல்ல. கோட்டையின் உள்ளேயும் ஏகப்பட்ட வாயில்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் கோட்டைகளுடன் பிதாரும் மிகச் சிறந்த கோட்டை ஆனால் மிகச் சிதைந்த கோட்டையும் கூட. பஹாமனியர்கள் ஆட்சிக்காலத்தில் பதினாறு தூண் மசூதிகளும் பல்வகையான மஹால்களும் கொண்ட இக்கோட்டையின் மிச்சத்தையும் எச்சத்தையும் பார்க்கலாம் வாங்க.
வரிசையா ஏழு வாயில்களையும், அங்கங்கே சுரங்கப்பாதைகளையும் பார்த்துக்கிட்டே போகலாம். கோட்டைகளின் காதலி நான். கால்வலிக்க நடந்து நடந்து நான் காதலித்த கோட்டைகளில் இதுவும் ஒன்று. :)
குல்பர்க்காவிலிருந்து ஹைதை வரும்வழியில் இருக்கிறது இக்கோட்டை. இதன் ட்ரபீசிய வடிவ மதில்கள் கொள்ளை அழகு. மதிலும் அகழியும் கொண்ட நுழைவாயில் இது.
உள்ளே வந்தாச்சு.