எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 மார்ச், 2017

ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

கொஞ்சம் கணக்குப் பார்க்கலாம் வாங்க. !

ஒவ்வொரு விசேஷத்தின் போதும் நோட்டுப் போட்டு செலவைக் 661*கணக்கெழுதி வைப்பது அந்தக்காலத்து வழக்கம். பைசா சுத்தமாக டாலி ஆகிவிடும். 662.வெண்ணலை என்ற பேச்சே கிடையாது.

பொதுவாகவே செலவுக் கணக்கெழுதி வைப்பதால் வேண்டாததை வாங்கும் பழக்கம் குறைகிறது. அநாவசிய செலவு எது எனத் தெரிந்து விடுகிறது.  வீட்டுச் செலவைக் கூட 663*ஐந்தொகை 664* பேரேடு போட்டு எழுதி வைப்பார்கள் சிலர்.

வருடத்துக்கு 665* உப்பு புளி வாங்குவது முதல் கொண்டு துணி மணி , நகை நட்டு, சொந்த 666.*அனுவல் செலவுகள், அன்றாட செலவுகள், கோயில் செலவுகள், திருப்பணிகள், அன்னதானம் செய்வது, படைப்பு, பூசை, பொங்கல், காவடி, மகேசுவர பூஜை, தானம் கொடுப்பது, கொடுக்கல் வாங்கல், அடுத்தவர் வீட்டு அனுவலில் 667*முறை கொடுத்தது கொண்டது, நோய் நொடிச் செலவு, பிரயாணச் செலவு, மளிகை, சந்தை, கரண்ட், தண்ணீர், பால், வேலைக்காரர் சம்பளம்,அவ்வளவும் 668*புள்ளி விவரத்தோடு நோட்டுப் புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கும்.

முன்பு 669*ஓலைகளில் குறித்து வைப்பார்கள். அது 670*நாற்பது பக்க நோட்டாக மாறி விட்டது. இப்போது மடிக்கணினி. ஆனால் யாரும் அதிகம் புள்ளி விவரத்தோடு எழுதி வைப்பதில்லை.

இடம், வீடு, மனை, வண்டி வாங்கிய/விற்ற விபரங்களும்  தனித்தனி நோட்டுகளில் வரவு செலவுக் கணக்குகளாக எழுதி வைக்கப்பட்டிருக்கும்.! கையிருப்பு, வங்கி இருப்பு, சொத்து விபரம் அனைத்தும் மனப்பாடமாக சொல்லக்கூடிய மனிதர்கள் இப்போது இல்லை. எல்லாம் கணினி மயம். 671*கோயில் இடத்தை லீசுக்கு எடுத்து வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதுண்டு. அந்த நோட்டுகளும் இதில் இருக்கும்.

வீட்டில் ஏகப்பட்ட அனுவல்களில் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகங்கள் இருந்தன. அவற்றை அம்மா ஒருநாள் 672*கைப்பொட்டியில் இருந்து கொண்டுவந்து கொடுத்தார்கள். நமக்கு ப்லாக் போஸ்ட் ஆச்சே. மேலும் ஆவணப் படுத்தலாம் என்று வைத்திருந்தேன்.

673*பேரேடு என்பது அளவில் பெரிய நோட்டாக இருக்கும். அதில் பற்று வரவு இருக்கும். 674*ஐந்தொகை என்பதும் பெரிய நோட்டுதான். இதில் வரவு செலவைப் பிரித்துத் தனித்தனியாக 675*ஹெட்டர் போட்டு எழுதி இருப்பார்கள். இது இரண்டும் இதில் நான் பகிரவில்லை. இதிலிருப்பது எல்லாம் அனுவலில் வைத்த சாமான்கள், அதற்கு ஆன செலவுக் கணக்குகள் மட்டுமே.  

திருமணம் மட்டுமல்ல, குடிபுகுதல், மார்கழி திருவாதிரைப் புதுமை, 676.*காப்புக்கட்டுப் புதுமை, சூள்பிடி, தீர்த்தம் குடித்தது, மருந்து குடித்தது, தீர்த்தமாடப் போனது, விளையாட்டுப் பொட்டி வேவு, பிள்ளை பிறந்தது, சமைந்தது, கேதம் என நல்லது கெட்டது அனைத்திற்கும் கணக்கு வழக்கு உண்டு. அதே போல் திருமணம் போன்ற ஒவ்வொரு விசேஷத்திற்கும் 677* முறைச்சிட்டை என்று ஒன்று உண்டு. கொடுத்ததுக்கெல்லாம் கணக்கு வைச்சிக்கணும். :) யார் யாருக்கு என்னென்ன கொடுத்தோம்னும் கணக்கு வைச்சிக்கணும். :)

678*திருமண சீர் சாமான் சிட்டைகள் என்றொரு நோட்டு உண்டு.பெண்ணுக்குத் தாய் வீட்டில் கொடுத்த சாமான், மாமியார் வீட்டிலிருந்து பெண்ணுக்குப் பரப்பி வைத்த சாமான், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் வைத்த சாமான், பெண் வீட்டிலிருந்து மாமியாருக்குக் கொடுத்த சாமான், 679*மருமகளை வேற வைப்பதற்குத் 680*தீஞ்சாமான்  ( தனிக்குடித்தனம் வைப்பதற்குக் 681. கொட்டிக் கொடுப்பது) கொடுப்பது, என எழுதி வைப்பார்கள்.

682* பேசி முடித்துக் கொண்டதற்கு  என நோட்டில் எழுதி மஞ்சள் தடவி வைப்பார்கள். 683*திருமணம் முடிந்து முதல் மூன்று வருடங்களுக்கு தீபாவளி, பொங்கல், பிள்ளையார் நோன்பு ஆகியவற்றுச் சீர் கொடுக்க நோட்டுகள் உண்டு.

அதே போல் என்னென்ன முறைக்கு/பண்டிகைக்கு என்னென்ன சாமான்கள் 684*பலகாரங்கள் எனவும் எழுதிக் கொள்வார்கள். இப்போது எல்லாம் பணமயம். திருமணத்தின்போதே அனைத்துக்கும் ஒரு தொகை. இல்லாவிட்டால் இருவீட்டிலுமே இது வேண்டாம், எதற்கு என்று மறுத்து விடுகிறார்கள்.


என் அத்தைகளின் திருவாதிரைப் புதுமை. இதில் இன்னொன்றையும் கவனிக்கலாம். 685* உ சிவமயம் என்றுதான் ஆரம்பிப்பார்கள். 686* உள் பக்கம் அவரவர் வணங்கும் கடவுள் துணை போட்டிருப்பார்கள். இதில் 687*அண்ணாமலையார் துணை என்று போட்டிருக்கின்றார்கள். அதே போல் வருடத்தை 688* வரு என்று சேர்த்து எழுதுவார்கள். தமிழ் மாதத்தை 689*ன்மீ என்றும் தேதியை 690* உ என்றும் எழுதுவார்கள்.

691* எழுதும் முறை. ப் - ப, - க் - க,  க் - கு சேர்ந்து வந்தால் அதைச் சேர்த்து ஓரெழுத்தாகவே எழுதுவார்கள். அதே போல் 692* புள்ளிகளை அழுத்தம் திருத்தமாக வைப்பார்கள்.

மேலும் 693* தமிழ் மொழியில்தான் எண்களை எழுதுவார்கள். க என்றால் ஒன்று. உ என்றால் இரண்டு. ங என்றால் மூன்று.
694* ரூபாய்- அணா - பைசா விபரத்தில் நோட்டில் குறிக்கப்பட்டிருக்கும். துவரம்பருப்பு 25 படியும் உளுந்தம் பருப்பு 30 படியும் 65/- ரூபாய்க்கு வாங்கி இருக்காங்க :) !

695 * வரவு, செலவு  & மிச்சம் :)
என் சின்ன அத்தையின் திருமணம் 696* கெட்டி செய்துகொண்ட விபரம்.

697* ஸ்ரீதனம்.

698*ரூபாய் 3500/- என்பது அப்போது ஒரு வராகன்.

699*வெள்ளியையும் வராகனெடையில்தான் குறிப்பிடுவார்கள்.

700* வைரமோதிரம், கைக்கெடிகாரத்தோடு, சிவப்பு ஓலைக்கொட்டான் வந்தவர்களுக்குப் பாக்குப் பணம் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.  !
701* ஸ்ரீ தெண்டாயுத பாணி துணை. இது எனது பெரியப்பத்தா திருமண வீட்டில் வைத்த வெள்ளிச் சாமான்களின் விபரம் அடங்கிய நோட்டுப் புத்தகம். !!! ஓ மை காட். ஏறக்குறைய 80 வருடத்துக்கு மேற்பட்டது !

இதில் க என்றால் ஒன்று. உ என்றால் இரண்டு. ங என்றால் மூன்று. இரண்டு இருந்தால் 702* ஜோடி என்றும் , பல பொருட்கள் கொண்டது என்றால் 703* உருப்படி இத்தனை என்றும் எழுதுவார்கள். மூடி இருந்தால் மூடியுடன் என்றும் குறிப்பிடுவார்கள். :)

இது அவர்கள் மகள், எங்கள் பெரிய அத்தை சரஸ்வதி அவர்களுக்கு வைத்தது.
704 * 1923 ஆம் வருட நோட்டு ! அதுவும் இரங்கோனில் இருந்து ஆங்கில தமிழ்  எழுத்துக்களில் ப்ரிண்ட் செய்யப்பட்டது !.
சரஸ் - பெரியத்தையின்  திருவாதிரைப் புதுமை.
அத்தையின் திருமணத்தில் வைத்த மற்ற சாமான்கள் விபரம். 705* வீட்டில், வைத்த, புஸ்தகம் என்பதை எல்லாம் சேர்த்து எழுதி இருக்காங்க பாருங்க. அதே போல் புள்ளிகள் அழுத்தம் திருத்தமாக அம்சமா இருக்கு :)
706* நில விளக்கு, விளக்கிடுகிற சட்டி, கடகால் வாளி, கொட்டான், கூஜாச் சொம்பு, கம்போஸாத் தாம்பாளம், சிலேட்டு விளக்கு, பிள்ளையார் நோம்பு அடுக்குச் சட்டி, மைசூர் அடுக்கு, மாப்பிள்ளை, பெண் சாப்பிடுகிற ப்ளேட், லோட்டா, ஐஸ் டம்ளர், நெய்ச்சட்டி என எழுத்துக்களும் பாத்திரங்களின் பேர்களும் வித்யாசம் !
707* காப்பி டவறா !, கிலுக்கி, பொங்கி மரவை, கரகச் செம்பு, சோத்துக் கரண்டி , தாளம் ஜோடி, குலம்வாழும் பிள்ளை, மூக்குப் போகணி, குழவி, கத்திரிக்காய்.
708* கொப்பி கொட்டுறது உருப்படி  13 - 1 செட்,  ஏடு எழுத்தாணி, மருந்துக்கிண்ணம், முக்காலி, உலக்கைப் பூண்.
அத்தை திருமணத்தில் செய்த நகைகள் விபரம். 109* அப்போது காசு மாலை, மாங்கா மாலை, ஒட்டியாணம், காதில் பலவித அணிகள், வைரத்தோடு, மூக்குத்தி, காப்புகள், ப்ரேஸ்லெட்டுகள், ப்ரூச்சுகள்,  கையில் வங்கிகள், காலில் கொலுசு, மூன்று அல்லது ஐந்து வைர நகைகள் என விதம் விதமாகப் போடுவார்கள்.

அப்போவெல்லாம்  710* அறுபத்துநாலு பக்க நோட்டுப் போல இருக்கு !  இந்த நோட்டில் விலை இரண்டணா ஆறு பைசா. என் அப்பாவின் காப்புக் கட்டுப் புதுமைக்கு ( முதலாம் பிறந்தநாள் விழா )  செய்த செலவுக் கணக்கு விபர நோட்டு. :)
711* கோயில் நிலத்தை லீசுக்கு எடுத்துக் கட்டி இருக்கும் கட்டிடத்தின் கணக்கு வழக்குகள். இந்த விஜயதேனு விலாஸ் இன்னும் இருக்கு !

712* என் அம்மா நான் அவர்கள் வயிற்றிலிருக்கும்போது மருந்து சாப்பிட்ட ஃபங்க்‌ஷன் கணக்கு !  :)

நடு அத்தை கலியாணத்தில் வைத்த சாமான்கள் விபரம்.
சின்ன அத்தை திருமண சீர் சாமான் விபர புஸ்தகம். !
எங்க அம்மாவுக்குக் கொடுத்தது !
713* பாக்குச் சுருள், ( பாக்கு வெட்டி ) , மிட்டாய்த் தட்டு, சாப்பாட்டு வட்டி, மரவை, படி,

714 * ஐஸ் டம்ளர், சால்ரா, சருவச் சட்டி, சாவிக்கொத்து சங்கிலியுடன், பொட்டு வைக்கிற செட், மயில் பொட்டு டப்பி, கொட்டான் இதெல்லாம் எக்ஸட்ரா. :)
715 * மாப்பிள்ளைக்கு வைத்த சாமான்கள் விபரம் !. ஃபேனை இன்ச் அளவு எடுத்துருக்காங்க ! . மிஸிபிஸி ( மிட்சுபிஷி ) டேபிள் ஃபேன், ஃபிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ, பிக்பென் டைம்பீஸ், ஸேபர்ஸ் லைஃப் டைம் பேனா, பைலட் கோல்ட் பேனா, டாக்டர் பால்பாயிண்ட் பேனா, 18 இன்ச் (!) ட்ராவல் பேக், 24 இன்ச் லெதர் சூட்கேஸ். !, ஏர் பேக், 18 இன்ச் புலிமார்க் லெதர் சூட்கேச், 12 இன்ச் ஃபைபர் சூட்கேஸ், டேபிள் லாம்ப், ஃபேன் லைட், எவரெடி லைட், ஸேவிங் ஸெட், ( லெதர்கேஸ் ), குட்டிக்குரா ஸேவிங் ஸ்டிக், நேஸட்ஸேவிங் பிளேடு பாக்கெட், கில்லட் ஸேவிங் ப்ளேடு பாக்கெட், நெகவெட்டி, ( நெயில்கட்டர் ).

ஏ யப்பா இன்னும் மிச்ச சொச்ச பக்கங்களையும் எடுக்காம விட்டேன். எப்பிடித்தான் பொறுமையா எழுதி வைச்சு எடுத்து வைச்சாங்களோ. மிடில சாமி. :)  இது மாதிரி பொறுப்பா இல்லாததாலதானோ என்னவோ எல்லாரும் நம்மள வெள்ளாட்டுப் புள்ளைல சேர்த்திடுறாங்க :)

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. கணக்கெழுதிச் செலவழிக்கலாம். 

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்  




8 கருத்துகள்:

  1. கணக்கு என்றால் இது தான் கணக்கு... மலைப்பாக இருக்கு...!

    அனைத்தும் பொக்கிசங்கள்...

    பதிலளிநீக்கு
  2. அந்தக் காலத்தில் நாங்கள் எழுதி வைத்திருந்த சில வரவு செலவு கணக்குகளை இப்போது பார்க்கும் போதுவிலை மாற்றங்கள் மலைக்க வைக்கின்றன.பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    பதிலளிநீக்கு
  3. மலைத்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி பாலாசார்.ஆம்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. Precise documentation.Full of historical info.usage of language and joint family culture makes one wonder at the leisurely pace of life.makes a wonderful read.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...