வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வாய்ப்பு..

என்னுடைய வாய்ப்பு
அவளுக்கு வழங்கப்பட்டது
நானே காரணமாயிருந்தேன்
அதன் ஒவ்வொரு அசைவுக்கும்.

அவளை சிலாகித்தேன்
அவளின் ஏக்கங்களை விவரித்தபடி.
காற்றில் கண்டம் விட்டுக்
கண்டம் செல்லும்
புரவிப்பெண்ணாக
அவள் உணரும் தருணங்களை..


ரேகைகளும் பாகைகளும்
தொடாத அவளது
ஆழிப்பேரலையான
அனுபவத்தை விவரித்தபடி.

விண்ணோக்கி நகரும்
ஊர்தியில் அவளை ஏற்றியநான்
ஏணிப்படியாயிருந்தேன்.,
மிதித்துச் செல்லட்டுமென.

ஏற்றிவிட்ட பெருமிதத்தில்
சுகித்தபடி இருந்தேன்
என்னுடைய இடத்திலேயே
என் வலியை ரசித்தபடி.

டிஸ்கி:- இந்தக் கவிதை 24, ஜூலை 2011 திண்ணையில் வெளிவந்தது.


4 கருத்துகள் :

K.T.ILANGO சொன்னது…

வலியை மென்மையாகப் படைத்தமை அருமை. ஏணியின் உவமை அழகு...

K.T.ILANGO சொன்னது…

வலியை மிகமிக மென்மையாக உணர்த்தியமை அழகு. ஏணியின் வரிகள் அருமை....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இளங்கோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...