ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா..
ஆமாங்க ஆமாம். இந்த அதிசயத்தை நான் பல ட்ரெயின் பிரயாணங்கள்ல பார்த்து இருக்கேன். வரும்போது நம்ம மாதிரிதான் இருப்பாங்க. ஆனால் தூங்கும்போது ட்ரெயின் நிர்ணயிச்ச சீட் அளவை விட அதிகமா அவங்க கால்கள் நீட்டிக்கிட்டு இருக்கும்.
பொதுவா நடுவில் வர பர்த்துங்கள்லதான் அதிகமா இப்பிடி இருக்கும். சைட் அப்பர்ல சில சமயம் இப்படி இருக்கும். எதுக்கும் எந்திரிக்கும்போது நாம பாத தரிசன க்யூவில நிக்கிறமோன்னு நினைக்கிற அளவுக்கு சில சமயம் இருக்கும்.
பாத்ரூம் போகணும்னு எந்திரிச்சா நாம இவங்க பாதங்கள்ல படாம ( ஒரு மரியாதைதான் காரணம்..!) ஒரு மாதிரி கம்பிங்கள்ல அடிபட்டுக்கிட்டே நெளிஞ்சு வளைஞ்சு பவ்வியமா போகணும். தூக்கத்துல கண் திறந்து பார்த்தாலும் சில சமயம் ஆங்கிலப் படங்கள் மாதிரி அரை இருட்டுல அல்லது மணிரத்னம் பட எஃபக்டுல கொஞ்சம் திகிலா இருக்கும். ”கால்கள்”னு கூட இந்த ட்ரெயின்கள்ல ஒரு த்ரில்லர் படம் எடுக்கலாம்.
இதுக்கெல்லாம் முதல் காரணம் மக்கள் தங்கள் லக்கேஜுங்களையும் தங்கள் தலைமாட்டில போட்டுட்டுப் படுக்குறதுதான். சிலர் வீட்டைப் பூட்டுற மாதிரி பூட்டு, செயின், சாவி எல்லாம் கொண்டு வந்து பூட்டிட்டுப் படுப்பாங்க. அட ஏசியில கூட அப்பிடித்தாங்க.. ஹாங் .. அது அவங்க லக்கேஜு .. காணாம திருடு போயிட்டா நீங்களா கொடுக்கப்போறீங்கன்னு கேக்குறீங்களா.. அதுவும் சரிதான்.
இதுல முக்கிய காரணம் என்னன்னா. எந்த பர்த்ல படுத்தாலும் யாரா இருந்தாலும். கைய கால நீட்டிப் படுத்தா வெளியே வரத்தான் செய்யுங்கிறது உண்மை. இந்த விஷயத்தை தமாஷா ரங்கமணிகிட்ட சொன்னதும் கோபப்பட்டாரு,”நீ என்ன சொல்றே. மீட்டர் கேஜுன்னா பரவாயில்ல. ப்ராட்கேஜு போட்டிருக்கு ரெயில்வே.. இதுதான் மாக்சிமம். இதுக்கு மேல முடியாது இதென்ன வீடா, இருக்க இடத்துல படுத்துக்க வேண்டியதுதான் ”அப்பிடின்னு. அட.. இவர் எப்ப ரயில்வேக்கு மாறினாரு..!!!
பொதுவா அஞ்சடி நாலங்குலம் இருக்க நானே சைட் அப்பர்ல படுத்துகிட்டு கையை நீட்டினா சீட்டுக்கு வெளியே தொங்கும். இதென்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சூட்டான்னு கேக்குறீங்களா.. ஒக்கேங்க. இருந்தாலும் மக்களே நீங்க உங்க லக்கேஜுங்களை எல்லாம் கொஞ்சம் பக்கவாட்டுல வைக்கக் கத்துக்கலாம்.
ப்ரயாணம் பண்றவங்களுக்கு எல்லாம் ரெயில்வே டிக்கட் புக் பண்ணும்போதே சொல்லிடலாம். லக்கேஜுங்களுக்கு சீட்ல இடமில்லைன்னு. அஞ்சடி மனுசங்களுக்கு ஒரு கம்பார்ட்மெண்ட், ஆறடி மனுஷங்களுக்கு ஒரு கம்பார்ட்மெண்டுன்னு. ஒதுக்கலாம்.
கால்களுக்குன்னு சிட்ல ஒரு ஃபோல்டிங் ஸ்டாண்ட் பொருத்தி வைக்கலாம். மத்தவங்க மேலயாவது இடிக்காம இருக்கும்.
முன்ன எல்லாம் பஸ்ல ஒரு கம்பி இருக்கும். அதுல ஒரு அளவு குறிச்சு இருப்பாங்க. அந்த அளவுக்கு மேல இருந்தா முழு டிக்கெட். அதுக்கு குறைவா இருந்தா அரை டிக்கெட். கண்டக்டர் மடியில் உக்கார வைச்சு இருக்க பிள்ளைங்கள எல்லாம் இழுத்து அளவு பார்த்து டிக்கெட் போடுவார். ஆனா பாருங்க எங்க பெரியம்மா அந்த அளவுக்கு மேல வளரல. ஆனாலும் முழு டிக்கெட் வாங்கிகிட்டு இருக்காங்க இத்தன வருஷமா ..
அது மாதிரி ரயில்வேயும். டிக்கெட் போடும்போதே மனுஷங்க அளவையும் அளந்து இப்ப வர்ற ஏசி பஸ்ஸுங்க மாதிரி நல்ல நீளமா. வாட்ட சாட்டமான ஆளுங்களுக்கெல்லாம் தனி கம்பார்ட்மெண்டே ஒதுக்கலாம். ( செகண்ட் ஏசி அப்பிடித்தான் இருக்கும்) ஆனா 4 மடங்குல்லா.. எனவே சாதாரண ஆளுங்களும் போற மாதிரி வேற மாதிரி டிசைன் பண்ணி நல்ல நீள சீட்டா(அகலம் பரவாயில்ல) போடுங்க ரயில்வேஸ்காரங்களே. கொஞ்சம் அதிகமா காசானாலும் பரவாயில்ல.
போன தரம் ரயில்வே போஸ்ட் போட்டப்ப -- ”தென்னக ரயில்வேயில் ஒரு நாற்றம் பிடித்த பயணம்” -- பலபேர் கொதறித் தள்ளிட்டாங்க. ஏன் நீங்க 900 /-- ரூபாய் கொடுத்து பஸ்ஸுல என்ன வசதிக் கொறச்சல்னானும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறீங்க . ட்ரெயினைச் சொல்ல வந்துட்டீங்கன்னு. .
இப்ப என்ன சொல்வாங்கன்னா கால மொடக்கிக்கிட்டே போவீங்க பஸ்ஸுல. ட்ரெயின்னா மட்டும் உருண்டு பொரண்டு படுக்க எல்லாம் இடம் கேக்குறீங்களான்னு... என்ன செய்யிறது பொது மக்கள் சேவையில் கொடுக்குற மகராசன் கிட்டதானே கேக்க முடியும்.
நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே ட்ரெயினின் காதலி. எனக்கு பஸ்ஸுன்னாலா அலர்ஜி. பெட்ரோல் புகை கூட.. எனவே பொதுமக்கள் அடுத்தவங்கள படுத்தாம படுத்துக்கணும். அல்லது ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம். ட்ரெயின் போற டைரக்ஷன்லயே..அப்பத்தான் கால் வளர்ந்த மனுஷங்களைப் பார்த்து பயப்படாம நாம பயணம் செய்யலாம்.

நல்ல யோசனைகள் தான். நன்றி.
பதிலளிநீக்கு//ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம்.//
பதிலளிநீக்குஅட!!.. இதே மாதிரி கம்பார்ட்மெண்ட்ல இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சீட்களை வெச்சுட்டு நடுவுல பாதை போட்டா என்னன்னு நானும் யோசிச்சதுண்டு. க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்ன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க ;-)
கஷ்ட்டம்தேன் :-)
பதிலளிநீக்குகடைசி வரி கலக்கல்! எதாவது வாய் தொறந்தா "ஏன் பஸ்ல போக வேண்டியது தானே"ன்னு கேக்கதான் செய்வாங்க :-)
அனுபவம்... எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனா இந்த ஆறடி மனிதர்களுக்கு தனி கம்பார்ட்மெண்ட், அஞ்சடி மனிதர்களுக்குத் தனிங்கற ஐடியால்லாம் வரவே இல்லையே... தேனக்காவா கொக்கா? சூப்பரா சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குதேனக்கா, இந்தப் பதிவு போடுறதுக்குன்னே, ரயில்ல போகும்போது படம் புடிச்சீங்களா என்ன? :-))))
பதிலளிநீக்கு//கால்களுக்குன்னு சிட்ல ஒரு ஃபோல்டிங் ஸ்டாண்ட் //
லக்கேஜை தலைமாட்டுல வச்சுகிட்டு படுக்கீறது பயணிகளின் தப்புதானே? அப்படியே அப்பர் பர்த்துல ஸ்டாண்ட் வச்சாலும், அதுவும் போகவர தலையில இடிக்கும். மேலும், அப்பர் பெர்த்துக்கு மட்டும் ஃபோல்டிங் ஸ்டாண்ட் வச்சா, அப்புறம், மிடில் பர்த்துக்கும் கேப்பாங்க.அப்புறம் பாதையில நடக்க முடியாது, தவண்டுதான் போவணும்!! :-))))
//ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம்.//
அப்படின்னா, பெர்த்/சீட்களின் எண்ணிக்கை குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்.
ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்றேன் போலருக்கு!! :-))))))
//நான் ... ட்ரெயினின் காதலி. எனக்கு பஸ்ஸுன்னாலா அலர்ஜி.//
மீ டூ!! ஆனா, இப்ப ட்ரெயினைப் பாத்தாலும் அலர்ஜியாகுது!!
நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி சாரல்.. //க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்..// ஹாஹா ரசித்தேன்
நன்றி ஆமீனா
நன்றி பால கணேஷ்
நன்றி ஹுசைனம்மா// ரொம்ப சீரியசா டிஸ்கஸ் பண்றேன் போல இருக்கு.. /// ஹாஹா உண்மைதான்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!