நெருப்புப்பொறி பறக்க
சந்திப்பு நிகழ்ந்தது
ஒரு எதிரியோடோ
முன்ஜென்ம விரோதியோடோ
உராய்ந்து திரிந்து
இந்த ஜென்மத்தில்
ஏன் கண்டுபிடித்தாய்
என்ற கண்டனத்தோடு.
பாலை தேசங்களில்
மண்ணைப் பதியமிட்டு
செடிகளைச் செருகி
நீரூற்றில் நனைந்து
பசியக் கிடந்தாலும்
காலூன்ற முடியாமல்
வேக்காளமும் தாக்க
கருகும் அல்லது
அணுங்கும்.
ஒவ்வொரு முறையும்
செடிகள் வருவிக்கப்பட்டு
பதியமிடப்படும்
மண்ணோடு..
மண் ஊன்ற விழைந்தாலும்
வேர்பாய முடியாத செடிகள்
வாழும்வரை பூப்பூத்து மடியும்
வெவ்வேறு இடங்களில்..
டிஸ்கி:- இந்தக் கவிதை 16 ஜுலை 2011 திண்ணையில் வெளியானது.
சந்திப்பு நிகழ்ந்தது
ஒரு எதிரியோடோ
முன்ஜென்ம விரோதியோடோ
உராய்ந்து திரிந்து
இந்த ஜென்மத்தில்
ஏன் கண்டுபிடித்தாய்
என்ற கண்டனத்தோடு.
பாலை தேசங்களில்
மண்ணைப் பதியமிட்டு
செடிகளைச் செருகி
நீரூற்றில் நனைந்து
பசியக் கிடந்தாலும்
காலூன்ற முடியாமல்
வேக்காளமும் தாக்க
கருகும் அல்லது
அணுங்கும்.
ஒவ்வொரு முறையும்
செடிகள் வருவிக்கப்பட்டு
பதியமிடப்படும்
மண்ணோடு..
மண் ஊன்ற விழைந்தாலும்
வேர்பாய முடியாத செடிகள்
வாழும்வரை பூப்பூத்து மடியும்
வெவ்வேறு இடங்களில்..
டிஸ்கி:- இந்தக் கவிதை 16 ஜுலை 2011 திண்ணையில் வெளியானது.
நம்பிக்கை ஊட்டும் வரிகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி...
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!