சேணம் பிடித்து
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..
திருவிழா .,
தேரோட்டம்.,
புரவி எடுப்பு..
அணிவகுப்பு முடித்து
அமைதியாய் உறைந்து
அசைவு மறந்த
ஐயனார் கோயில்
மண் குதிரையில்
ஆசையோடு அமர்ந்து..
டிஸ்கி:- இந்தக் கவிதை 10, ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது.
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..
திருவிழா .,
தேரோட்டம்.,
புரவி எடுப்பு..
அணிவகுப்பு முடித்து
அமைதியாய் உறைந்து
அசைவு மறந்த
ஐயனார் கோயில்
மண் குதிரையில்
ஆசையோடு அமர்ந்து..
டிஸ்கி:- இந்தக் கவிதை 10, ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது.
மரக்குதிரையோ மண்குதிரையோ... ஆட்டம் சுகமாகவே இருக்குது :-))
பதிலளிநீக்குசும்மான்னு சொல்ல முடியாது விஷயம் இருக்கு பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி சாந்தி :)
பதிலளிநீக்குநன்றி ஹைதர் அலி. :)