உறங்கத் தாமதமாகும்
ஒவ்வொரு இரவும்
சுமந்து வருகிறது
உழைப்பின் களைப்பை..
அலுவலகம் உறிஞ்சிச்
சுவைத்த நேரத்தை
பார்களில் அமர்ந்து
பீராக உறிஞ்சியபடி
அதிக வேலை பற்றியும்
அதிகப்படியாயோ
குறைந்தோ கிடைத்த
போனஸ் பற்றியும்
கடுகடுத்த மேலதிகாரியை
கிண்டலடித்தபடியும்
சக ஊழியனை
ஜால்ராக்காரனாகவும்
ஐஸ்துண்டங்கள்
கரைய கரைய
மனதைக் கரைத்தபடி
வண்டியில் ஏறும்போது
தூக்கமற்று முறைக்கும்
மனைவி முகம் எதிர்கொள்ள
கரைந்த கவலையெல்லாம்
திரும்ப வயிற்றைக் கலக்கியபடி.
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 25,2011 திண்ணையில் வெளியானது.
ஒவ்வொரு இரவும்
சுமந்து வருகிறது
உழைப்பின் களைப்பை..
அலுவலகம் உறிஞ்சிச்
சுவைத்த நேரத்தை
பார்களில் அமர்ந்து
பீராக உறிஞ்சியபடி
அதிக வேலை பற்றியும்
அதிகப்படியாயோ
குறைந்தோ கிடைத்த
போனஸ் பற்றியும்
கடுகடுத்த மேலதிகாரியை
கிண்டலடித்தபடியும்
சக ஊழியனை
ஜால்ராக்காரனாகவும்
ஐஸ்துண்டங்கள்
கரைய கரைய
மனதைக் கரைத்தபடி
வண்டியில் ஏறும்போது
தூக்கமற்று முறைக்கும்
மனைவி முகம் எதிர்கொள்ள
கரைந்த கவலையெல்லாம்
திரும்ப வயிற்றைக் கலக்கியபடி.
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 25,2011 திண்ணையில் வெளியானது.
மறுபடியும் ஆரம்பம் ஆயிட்டதா..?
பதிலளிநீக்குகவிதை சிறப்பு..
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பை பற்றி தெரிந்து கொள்ள
a href="http://www.madhumathi.com/2012/07/blog-post_24.html">
அருமையான கவிதை அக்கா.
பதிலளிநீக்குNice.
பதிலளிநீக்குநன்றி தனபால், மதுமதி, குமார், அமரபாரதி. :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!