வியாழன், 2 ஆகஸ்ட், 2012

5 குறுங்கவிதைகள்

ஒளியூட்டப் போகிறோமா
எரியூட்டப் போகிறோமா
என அறிவதில்லை
பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்..

 ***********************************

புழுவைப் போல உள்நுழைந்து
பத்து மாத உறக்கம்..
கொடி வழி உணவு கூட்டுக்குள்...
இறக்கைகளைப் போல
கை கால்கள் முளைத்ததும்
உந்திப் பறந்தது கூடை விட்டு ..
குழந்தையாய்..***********************************

உடல் எனும் உடைக்குள்
கைதிகள்
விடுதலையை எதிர்நோக்கி..

*********************************

பொம்மைப் பாசம்.:-
***************************

அவள் மடியமர்ந்து
போகேமான் பார்த்ததும்
அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ்
உதட்டில் ருசித்ததும் .,
தூங்கும் போதும்
கால் மேல் போட்டுக்
கட்டியணைத்துக் கிடந்ததும்
கனவோ கதையோ..
இப்போதெல்லாம்
பாய் ஃப்ரெண்டோடு
பைக்கில் செல்லும் அவளை
ஷோகேஸில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து..

********************************

தீக்குச்சி..:-
************

தன் தலைக்கனத்தை
உரசி தானை அழிக்கிறது..

 டிஸ்கி:- இந்தக் கவிதைகள் ஜூன் 19,2011 திண்ணையில் வெளியானது.

4 கருத்துகள் :

பால கணேஷ் சொன்னது…

ஐங்குறுங்கவிதைகள் மனதில் ஒட்டிக் கொண்டன. எதையும் சிறப்பு என்று சுட்டிக்காட்ட இயலாதபடி எல்லாமே சிறப்பாய்... அசத்திட்டதுககா!

கவி அழகன் சொன்னது…

3 vathu kavithai supper valthukkal

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி கவி அழகன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...