மீனு ஆண்டி வந்தா ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க.. எதுலடா குத்தம் கண்டுபிடிக்கலாம்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்ப்பாங்க.. அதுக்கு இன்னிக்கு இடம் கொடுக்கவே கூடாது.
வீட்டை பம்பரமாக சுற்றி சுற்றி க்ளீன் செய்தாள் ராஜி. டி. வி ஸ்டாண்ட்., கம்யூட்டர் டேபிள்., ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி என்று பார்த்து பார்த்து துணியையும் டஸ்டரையும் வைத்து படு சுத்தமாக்கினாள்.
வாசனை பெட்ஸ்ப்ரெட்., பளிச்சென்று இருக்கும் திரைச்சீலைகள்., வண்ண நூல் க்ரோஷாவில் சோபா உறைகள் எல்லாம் பர்ஃபெக்ட்.
கிச்சன் சிங்க்., பாத்ரூம் டைல்ஸ்., சமையல் மேடை., வீடு., வாசல் எல்லாமே பளபளாவென மின்னியது.
”வரட்டும்.. இந்த முறை மீனா ஆண்டி வந்தா ஏதுமே சொல்ல முடியாமல் வாயடைச்சு போகணும் ..” என்ற நினைப்பே குதூகலத்தைக் கொடுத்தது அவளுக்கு.
மாலையில் மீனு ஆண்டி வந்தே விட்டாள்., தன் வெளிநாட்டுப் பேத்தி மாலுவுடன்..
வீட்டினுள் நுழைந்ததில் இருந்து எல்லா இடத்தையும் இன்ஸ்பெக்ஷன் இடுவது போல பார்த்த மீனு ஆண்டியே ஒன்றும் குறை சொல்ல முடியாமல் அமர்ந்திருப்பது சந்தோஷமாயிருந்தது ராஜிக்கு.
ராஜி கொடுத்த பனீர் பகோடாவை சாப்பிட்ட மாலு ., ”ஆண்டி எண்ணையா இருக்கு. டிஷ்யூ கொடுங்க” என்றாள். ” டிஷ்யூ இல்லையேடா” என்று ராஜி சொன்னதும் குற்றம் சொல்ல காரணம் கண்டுபிடித்த மீனு ஆண்டி வழக்கம் போல குஷியுடன் அட்வைஸ் சொன்னாள். ”டிஷ்யூ எல்லாம் வாங்கி வச்சுக்கணும் ராஜி. இவ்வளவு ஆய்லியா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வந்துரும்..”
வழக்கம்போல் மீனு ஆண்டியின் குற்றப்பத்ரிக்கையை கேட்டதும்., ‘சே.. ஜஸ்ட் இதுல போய் மிஸ் பண்ணிட்டமே’ என விழித்தாள் ராஜி..
டிஸ்கி:- இந்தச் சிறுகதை 23.1. 2012 குங்குமத்தில் வெளிவந்தது.

ரொம்ப நல்லாருக்கு தேனக்கா.. குங்குமத்திலும் வாசிச்சேன்.
பதிலளிநீக்குசிறு கதை ரொம்ப நல்லாயிருக்கு,,,,
பதிலளிநீக்குsorry!இது என்ன என்றே எனக்குப்புரியவில்லை.(அதாவது கதையா,கட்டுரையா,சம்பவ விவரிப்பா என்று)
பதிலளிநீக்குநன்றி சாரல்
பதிலளிநீக்குநன்றி குமார்
இதை எப்படி வேணாலும் எடுத்துக்குங்க சிந்திப்பவரே..