எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

செடிச் சம்பங்கி [பன்னீர்ப்பூ]

நலுங்கிலும் ஊஞ்லிலும்
இப்போதுதான் அமர்ந்து
அப்பளம் உடைத்து
தேங்காய் உருட்டியது
போலிருக்கிறது...

அன்று அணிந்திருந்த
அதே போன்ற
சம்பங்கி மாலை
அணிந்து நீ...

தாய்மையின் பூரிப்பில்
மஞ்சளும் சந்தனமும் தடவி
கை நிறைய வளையல் மாட்டி...

தலை நிறைய பூக்கள் சூடி
பழக்கமில்லாத பட்டு அணிந்து
பதுமையாய் அமர்ந்து நீ...

பெண் பார்த்த பொழுதை விட
திருமணத் தருணத்தைவிட
ஹனிமூன் தனிமைகளைவிட...

தாய்மை மூடிய
உன் உருவம்
என்னை மயக்குகிறது...

நானே உன் குழந்தையாய்
உன்னுள் குடி
கொண்டிருப்பது போல்...

சித்ரான்னங்கள் சாப்பிட்டு
தாம்பூலங்கள் வாங்கி
வந்தவர்கள் ஆசீர்வதித்து
சென்றபின் என்
அருகு வந்தாய்...

வயிற்றில்என்
குழந்தையின் விரலோ
என மயங்கினேன்...

அட... அது உன் மாலையில்
இருந்து இடுப்பில் பதிந்த
சம்பங்கி .......

10 கருத்துகள்:

  1. //அட...அது உன் மாலையில்
    இருந்து இடுப்பில் பதிந்த
    சம்பங்கி...//

    அட!!!
    கலக்குறீங்களே மக்கா!

    பதிலளிநீக்கு
  2. // பழக்கமில்லாத பட்டு அணிந்து
    பாந்தமாய் அமர்ந்து நீ... //

    இந்த வரிகள் சரியாக அமையவில்லைங்க். பழக்கமில்லாத பட்டு ... உறுத்துது.

    பதிலளிநீக்கு
  3. // வயிற்றில்என்
    குழந்தையின் விரலோ
    என மயங்கினேன்...

    அட... அது உன் மாலையில்
    இருந்து இடுப்பில் பதிந்த
    சம்பங்கி ....... //

    இது... ரசிச்சேன்... குழந்தையின் கை விரல் போல் நீளமாகத்தான் பன்னீர்ப்பூவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. பன்னீர்ப்பூவை பற்றிச் சொல்லும் போது, ஐயா கிவாஜா அவர்கள் சொல்லும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகின்றது.

    மேடைப் பேச்சு பேசச் செல்லும் போது, ரோஜா மாலையைவிட சம்பங்கி மாலை ரொம்ப நல்லது. ரோஜா மாலை போட்டார்கள் என்றால் வீட்டிற்கு வரும் போது வெறும் நார் மட்டும்தான் மிஞ்சும். மேலும் ரோஜாவில் சுற்றப் பட்ட கலர் நூல், சட்டையில் கோடு கோடாய் கறை விழுந்துவிடும் என்றும் சொல்லுவார்.

    உங்க கவிதை ஐயா அவர்களை ஞாபகப் படுத்திவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நன்றீங்க ராஜாராம் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  6. அந்த வார்த்தைகள் வரும்போது எனக்கு இடறிக்கிட்டுத்தான் இருந்துச்சு
    அதை சரியாக கணிச்சுட்டீங்க ராகவன்
    க்ரேட்

    பதிலளிநீக்கு
  7. இப்படி நீங் விலாவாரியா பின்னூட்டம் போட்டாத்தான் எழுதுறதுக்கே ஒரு அர்த்தம் கிடைக்குது
    நீங்க இப்படியே தொடருங்கள்
    நன்றி ராகவன்

    பதிலளிநீக்கு
  8. பதுமையாய் ...... நன்றாக இருக்கிறதா ராகவன்

    பதிலளிநீக்கு
  9. // thenammailakshmanan சொன்னது…
    பதுமையாய் ...... நன்றாக இருக்கிறதா ராகவன் //

    இப்போ படிப்பதற்கு நெருடவில்லங்க. மிக நன்றாக இருக்கின்றதுங்க

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...