எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஜூன், 2018

80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.

கைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிகப் ப்ரபலமானவர்கள் இவரது இரு சகோதரர்கள். அவர்களைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவர் தன் கைவேலைப்பாடுகளில் தேர்ந்தெடுத்திருக்கும் நிறங்களின் கலவை என்னை அசத்துகிறது. அதேபோல் பர்ஃபெக்ட் வொர்க்கும் கூட. 
க்ரோஷா வேலைப்பாடு, தஞ்சாவூர் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், எம்பிராய்டரி , பூக்கள் தயாரிப்பு, ஆயில் மற்றும் கான்வாஸ் பெயிண்டிங் என்று அனைத்துத் துறையிலும் தனது கைவினைப் பொருட்களைச் செய்துள்ளார். 

டிவியில் தினம் மூன்று – ஏழெட்டு மணி நேரம் தகாத உறவுகளையும் உறவு உணர்வுச் சண்டைகளையும் வன்முறை எண்ணங்களையும் கிளப்பும் சீரியல்களை இன்றைய பெரியோர்கள் பார்த்து உறவுகளிடம் குதர்க்கமாக நடந்து கொண்டிருக்க இவரோ இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடும் மலர்ச்சியோடும் தான் கைக்கொண்ட கைவினை வேலைப்பாடுகளில் மனதைச் செலுத்தி விதம் விதமான பொருட்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைய பெரியவர்களில் விதிவிலக்காக இருக்கும் இவருக்கு முதலில் ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். இனி இவர்பற்றிய விவரங்கள். 


”அப்பா காரைக்குடியைச் சார்ந்த இராம சுப்பையா. அம்மா விசாலாட்சி. இவரது கணவரின் பெயர் இராம. சிதம்பரம். அப்பா ஆதிகாலத்திலிருந்தே சுயமரியாதைக் கட்சியில், பெரியாரின் தொண்டர். செட்டிநாட்டில் ஓர் சீர்திருத்தவாதி. நல்ல உழைப்பாளி.

எனக்குப் பதிநான்கரை வயதில் ஐயர் வராமல் மனை போடாமல் சீர்திருத்தத் திருமணம் செய்வித்தார். எனக்கு நிறைய குழந்தைகள். வயல் வரப்பு மாடு கன்றுகளோடு அதிகமான வேலை இருக்கும்.


ஒருமுறை என் கணவர் எம்பிராய்டரி போட்ட பை ஒன்று கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்து இதை யார் போட்டது என்று கேட்டேன். என் நண்பர் M.N.M.M. மெய்யப்பச் செட்டியார் போட்டது என்று கூறினார்கள். 

அவர்களை எனக்குச் சொல்லித்தரச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். அவர்களுக்கும் நேரமில்லை. எனக்கும் நேரமில்லை. அந்தப் பையைப் பார்த்துப் பார்த்துப் போடக் கற்றுக் கொண்டேன். 

எனக்குப் பதிநான்கரை வயதில் திருமணம் . திருமணம் முடித்துப் பள்ளிக்குச் சென்று படித்தேன். என் கணவர் படிக்க வைத்தார்கள். அந்தச் சமயத்தில் எஸ் எஸ் எல் சி கம்ப்ளீட் பண்ண முடியவில்லை. மகன் வயிற்றில் வந்துவிட்டான்.


மெஷின் எம்பிராய்டரி, குஷன் எம்பிராய்டரி. ஜி டி நாயுடு தயாரித்த ஊசி இப்போது கிடைக்கவில்லை. முன்பக்கத்தில் பின்னிவிட்டுப் பின்புறம் கத்திரியால் கத்திரித்து எடுத்தால் பந்து மாதிரி, பூ, மயில், குருவி எது வேண்டுமானாலும் செய்யலாம். 








என்னுடைய 50 ஆவது வயதில் காரைக்குடி எம் எஸ் எம் எம் ஹைஸ்கூலில் பேரண்ட் டீச்சர் பிரசிடெண்டாக 3 ஆண்டுகள் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்தேன்.


என்னுடைய 61 ஆவது வயதில் மதுரைக்குப் போய் வள்ளியம்மையிடம் பெயிண்ட், ஃபர் டெடி, நாய்க்குட்டி, மற்றும் நிறைய பொம்மைகள் செய்யக்  கற்றுக் கொண்டேன். மிகவும் கெட்டிக்காரப்பெண். என் முன்னேற்றத்திற்குக் காரணம் வள்ளியம்மைதான்.









காலையில் ஃபர் க்ளாஸ், மாலையில் பெயிண்டிங். காலை 8 மணிக்கு மதுரைபோய்விட்டு இரவு 8 மணிக்குக் காரைக்குடிக்கு வருவேன். 40 கிளாஸ் போயிருக்கிறேன்.


என்னுடைய 80 வயதில் க்ரோஷா போட்டதில் வேர்ல்டு கின்னஸ் ரெக்கார்ட் வாங்கி இருக்கிறேன். 82 வயதில் கவிதைகள் எழுதுகிறேன். என்னுடைய 60 வயதில் ஹிந்தி ப்ராத்மிக் எக்ஸாம் எழுதி ஃபர்ஸ்ட் க்ளாஸில் வெற்றி பெற்றுள்ளேன். 





காரைக்குடியில் பக்தர் என்பவர்களிடமும், திருச்சியில் பெரியண்ணன் அவர்களிடமும் தஞ்சை ஓவியம் கற்றுக் கொண்டேன். திருச்சிக்கு வந்து மலைச்சாமி அவர்களிடம் க்ளாஸ் பெயிண்டிங், தஞ்சைஓவியம் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வணக்கமும்.


என்னுடைய ஓவியங்களில் மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஓவியம் அரச இலை ஓவியம். ஃபேஸ்புக்கில் கனகம் என்று போட்டுப் பார்த்தால் என் கைவேலைப்பாடுகள் பற்றிய புகைப்படங்கள் கிடைக்கும். ஃப்ளவர், ஃப்ளவர் வாஷ், வளையல்கள் செய்திருக்கிறேன்.



சென்னையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன். காலமும், காலத்தின் மாற்றமும் என்ற தலைப்பில் பேசினேன்.

அப்பா கலைஞர் ஆட்சியில் ஆறு ஆண்டு காலம் எம் எல் சியாக இருந்தார்கள். அண்ணன் டைரக்டர் எஸ் பி முத்துராமன். தம்பிமார்கள் செல்வமணி, சாமிநாதன், சுப. வீரபாண்டியனின் சகோதரி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

-- கனகலெக்ஷ்மி.


என் குடும்பத்தில் உள்ள அனைவர் வீட்டிலும் என் ஓவியங்கள் இருக்கிறது. 


டிஸ்கி:- இவரிடம்சுயவிவரத்தை எழுதி அனுப்பச் சொல்லி இருந்தேன். ஏனெனில் தகவல் மற்றும் விவரங்களில் தவறு நேர்ந்துவிடக்கூடாதே என்று. இதை எழுதி அனுப்பியதும் அவரே. நன்றியும் அன்பும் கனகலெக்ஷ்மி ஆச்சி. திரும்பவும் உங்கள் உழைப்பைக் கண்டு பிரமித்து உங்கள் தாள் வணங்குகிறேன்.

9 கருத்துகள்:

  1. நானும் வியக்கிறேன் கனகலெக்ஷ்மி ஆச்சி கண்டு...

    எத்தனை புத்துணர்வு ஆர்வம்....இதை தான் நாம் முதலில் இவரிடம் இருந்து கற்க வேண்டும்..


    மிக அழகிய கைவண்ணங்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்கிறது..


    மிக நன்றி சகோ..மிக உயர்ந்த பெண்ணை அறிமுகம் செய்ததற்கு...அவரின் முகநூல் சென்று மற்ற படைப்புகளையும் காண்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. பிரமிப்பினைத் தந்துவிட்டார். இவர்களைப் போன்றவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    நன்றி அனு

    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா...என்ன அருமையாக ஒவ்வொன்றையும் செய்து இருக்கிறார்கள்....பாராட்டுக்கள் ஆச்சிக்கு.

    அறிமுகம் செய்த உங்களுக்கு மிக்கநன்றி

    பதிலளிநீக்கு
  5. ஏதோ நானும் செய்திருக்கிறேன் என்று பெருமைப்பட முடியவில்லை ஆச்சி எங்கோ நான் எங்கோ

    பதிலளிநீக்கு
  6. நன்றி உமா

    நன்றி பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  7. இந்த வயதிலும் என்ன ஓர் கலை நயம். ஆச்சி வியக்க மட்டும் வைக்கவில்லை பிரமிக்கவும் வைத்துவிட்டார். எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள்! எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்!

    கீதா: எங்கள் இருஅரின் அக்கருத்துடன்....ஒவ்வொரு வேலைப்பாடும் கண்ணைக் கவர்கிறது. எம்ப்ராய்டரி பென்ஸில் ஸ்கெட்ச்...செமையா இருக்கு. இந்த வயதிலும் சீரியல் எதுவும் பார்க்காமல் கைவண்ணம் செய்வது அதிசயம் !! ரொம்ப ரசித்தேன் அனைத்தையும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...