எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 ஜூலை, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் பற்றி சுந்தரி செல்வராஜ்.

சாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் பற்றி சுந்தரி செல்வராஜ்.


( உங்க ஃபோட்டோவை சுட்டுட்டேன் மன்னிச்சிடுங்க J)
 

முகநூல் ஒரு பொழுதுபோக்குத்தளம். இதைத் தன்னுடைய ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தியோர் ஏராளம். ( நானும் இதில் உண்டு.) ஆனால் நட்பை வளர்ப்பதற்கு மட்டுமே முகநூலைப் பயன்படுத்துபவர்கள் சிலர். அவர்களுள் என் அன்பிற்கினிய தோழி சுந்தரி செல்வராஜ் குறிப்பிடத்தக்கவர்.

பெங்களூரில் வசித்து வரும் இவர் எப்போதாவது ஒரு முறை நம் பக்கம் வந்தாலும் வலைத்தள போஸ்ட் எல்லாம் படித்து விட்டே கமெண்டுவார். இவருக்கு எதையும் உண்மையாகச் செய்யவேண்டும், போலியாகப் பாராட்டத் தெரியாது. சிறந்த சாய் பக்தை. சொல் ஒன்று என்றால் செயலும் ஒன்றுதான். அதுதான் அவரின் சிறப்பு.


மிக இனிமையான மிக எளிமையான இத்தோழியை நான் பெங்களூரில் இருந்த தருணங்களில் சந்திக்கத் தவறிவிட்டேனே என்று வருத்தப்பட்டதுண்டு. எனினும் என்ன முகநூலில் தொடர்பில் இருக்கிறோம். ஓரளவு அவ்வப்போது உரையாடிக் கொள்கிறோம். யதேஷ்டம் J  


அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தரச் சொல்லிக் கேட்டபோது இதை எழுதித் தந்தார்.
 
சாட்டர்டே ஜாலி கார்னர்!! 
 
முகநூலுக்கு வருவதென்பதே ஒரு மனஆறுதலுக்கும்,பொழுது போகவும் என்றுதான் தொடங்கியது..ஆனால் நிறைய வாசிக்கவும் கற்றுக் கொள்ளும் தளமாகவுமே மாற்றியது..
 
இங்கும் விருப்பு,வெறுப்பு,பகை,ஏமாற்றம்,ஒதுக்குதல்,அரசியல் என பல்வேறு உணர்வுகளையும் கண்டேன்..சமீபகாலமாக "ட்ரெண்ட்" அடிப்படையில் பதிவுகள் போடுவதும் அதற்கு சிலர் எதிர்வினை ஆற்றுவதும் என ஏக ரகளை..
 
இதெல்லாம் கடந்தால் எதையும் விமரிக்கலாம் என்பது போய் எல்லாவற்றிக்கும் எதிராக பேசுவது எழுதுவது ஒரு தொற்று நோய் போல தொற்றிக் கொண்டது. எதனால் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை..
 
வந்தோமா நாலு நல்ல பதிவை வாசிச்சோமா மொக்கையா ரெண்டு பதிவைப் போட்டோமா கமெண்ட்களில் உள்ள நகைச்சுவையை ரசித்தோமான்னு போய்ட்டே இருக்கும் வரை பாதிப்பில்லை..
 
ஒரே எண்ணம்,ஒரே ரசனை எல்லாவற்றிலும் சாத்தியமில்லைதானே!! அதோடு அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்காது. வாதமும் விவாதமும் ஆரோக்கியமாக இருந்தால் சுவாரஸ்யம் கூடும்.. 
 
இன்றைய காலகட்டத்தில் முகநூலில் போராளிகள், இலக்கியவாதிகள், பதிவாளர்கள், கவிஞர்கள், பொழுது போக்காளர்கள் என முகநூல் பயன்பாட்டாளர்களை பிரித்துப் பார்ப்பதும்,இன்னின்ன நூல்களை வாசிப்பவர்கள், இந்த வகை டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள்,இப்படி கவிதை எழுதுபவர்கள் என கட்டம் கட்டி இதை,இவரை வாசித்தால் சரியில்லை,இந்த நிகழ்ச்சியை பார்ப்பதும் பதிவிடுவதும் ஏதோ பாவச் செயல்போல குறைத்து மதிப்பிடுவதும் சமூக அக்கறையே இல்லாதவர்களாக சித்தரிப்பதும் எப்படி சரியாகும்..
 
ரசனைகள் வேறு நட்பு வேறு ஒத்த ரசனை வீட்டினுள்ளேயே இருக்காது...நட்புகளை அவரவர் ரசனையோடும் இயல்போடும் அங்கீகரித்தால் அதுவே சிறப்பு...
 
முகநூல் வாழ்க்கையில் ஒரு பகுதிதானே தவிர முழு வாழ்க்கையுமே அதில் அடக்கம் இல்லை..புரிந்தவர்களுக்கு கொண்டாட்டம்தான்!!
 
டிஸ்கி:- அஹா செமையா விளாசிட்டீங்க சுந்தரி.. 

முகநூலிலே மூழ்கி முத்தெடுக்கும் நாம் முகநூல் பற்றி ஒரு பதிவாவது சாட்டர்டே ஜாலி கார்னரில் இதுவரை எழுதவில்லையே என்று தோன்றியது. ஒவ்வொருவர் ரசனையும் ஒவ்வொருவிதம் என்று புரிந்துகொண்டு போகத் தெரிந்துவிட்டால் பிரச்சனையே இல்லைதான். சரியா சொன்னீங்க. 

முகநூல் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். அதுனாலதான் நான் இப்போவெல்லாம் அதுக்கும் ப்லாகுக்கும் சேர்த்து ஓரிரு மணி நேரங்களே செலவிடுறேன். மிச்ச நேரம் வாசிப்புக்கும் குடும்பத்துக்கும் எனக்குமான தனிப்பொழுதுகளாப் போகுது. முகநூல் அக்கப்போர்ல எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகாம வாழ்க்கையை நேசிச்சு வாழக் கத்துக்கிட்டு வர்றேன்.

முடிவில் சூப்பரான பஞ்ச் சுந்தரி. நல்லா எழுதி இருக்கீங்க. கலக்கிட்டீங்க, அசத்திட்டீங்க. ரொம்பப் பிடிச்சிருந்தது. 

தாங்கஸ்டா சாட்டர்டே ஜாலி கார்னரை உபயோகமுள்ள இடமா மாத்தினதுக்கு J அன்பும் நன்றியும் அணைப்பும் முத்தங்களும். J
 

6 கருத்துகள்:

  1. முகநூல் பொழுதுபோக்கு மட்டும் இருக்கின்ற வரை நல்லது. அதனை தாண்டி அதே கதி என்று இருந்தால் பிரச்சனைதான்.....

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தெளிவு ! கரும்பலகையில் சில ஆசிரியர்களால் தான் பிசிறே இல்லாமல் நேர் கோட்டை ஒரே வீச்சில் போட முடியும்.

    பதிலளிநீக்கு
  3. நான் முகநூல் பக்கம் அவ்வப்போதுதான்போவேன்

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு.....

    துளசி: நான் முக நூலில் இருந்தாலும் அவ்வளவு ஆக்டிவாக இல்லை..

    கீதா: நான் முக நூலில் இல்லை....பிளாகிற்கே நேரம் கிடைக்காமல் சரியாகி விடுகிறது....

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு சுந்தரி .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. nandriVenkat sago

    unmai Jambu sir !

    athuthan sari Bala sir

    nala decision Tulsi sago and Geeths

    thanks da Malar :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...