செவ்வாய், 25 ஜூலை, 2017

தமிழ் நானூறு – ஒரு பார்வை.தமிழ் நானூறு – ஒரு பார்வை.

இது ஒரு பல்சுவை மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவருகிறது. 1999 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  டாக்டர்களும் விஞ்ஞானிகளும் இதன் சிறப்பு ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.! ( டாக்டர் தணிகாசலம், டாக்டர் சிவகடாட்சம், டாக்டர் ஜெ. விஸ்வநாத், டாக்டர் மயில் வாகனன் நடராஜன், பத்மஸ்ரீ டாக்டர் ஜே ஆர் கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியன், எஸ். ராஜு, விஞ்ஞானி , செகந்திராபாத் ) 


ஆன்மீகம், கவிதை, சமையல், கட்டுரைகள், ஹெல்த் என எல்லா ஏரியாவிலும் தடம் பதிக்கிறது இந்நூல். 

எடுத்தவுடனே வெண்டளை எண்சீர் விருத்தத்தில் மரபுக் கவிதை, மிருத்யுஞ்ஜய மந்திரம், புதுக்கவிதைகள், வாழ்த்து மடல், இத்துடன் பொருள் விளக்கத்துடன் உபதேச உந்தியார், 

“யான் அற்று இயல்வது தேரின் எது அது,
தான் நற்றவம் என்றான் உந்தீபற !
தானாம் ரமணேசன் உந்தீபற !”

எனத் தான் என்னும் அகந்தை முற்றும் நாசமடைந்து தனது ஆத்ம இயல்பான உயர் நிலையை அடைவதே உத்தமமான தவமாகும் என்று பொருள் விளக்கம் கூறுகிறார் இரமணரின் சீடரான முருகனார். 

பிரிகேடியர் க.அ. துர்க்காபாய் ( நான் பேட்டி எடுத்த  பெண் சிங்கம் J ) ஒரு சிங்கமும் ஒன்பது ஓநாய்களும் என்று பஞ்ச தந்திரக் கதைகள் போன்றதொரு சிறுகதையும் எழுதி இருக்கிறார். !

சினத்தினால் வரும் கேடு, சூரிய வழிபாடு, மகாலிங்கனார், போஸ், விதைநெல் பற்றிய கவிதைகள், மூத்தோரை வணங்குதல், இந்தியனாக இருப்பதற்குப் பெருமைப்படுதல்,நான்கு வேத மகா வாக்கியங்கள், மந்தியின் மாண்பு ( குறுந்தொகை ), டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை, அழுதால் அவனைப் பெறலாமே, குடிநீர்,  வான் பூதங்கள், செத்தாரைப் போலத் திரி விழித்தவனுக்கே வெற்றி, வார்த்தையின் வலிமை, சிவபெருமானின் நாகாபரணம், எல் நினோவால் வறட்சி ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 

சிரிங்க என்ற தலைப்பில் ஜோக்ஸ், ப்ரோட்டீன் ரைஸ், புளி இஞ்சித் துவையல் போன்ற சமையல் குறிப்புகள், தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில் நல்ல பல்சுவை மாத இதழ். கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். 

நூல்:- தமிழ் நானூறு ( மாதாந்திரி – சிற்றிதழ்)
ஆசிரியர் :- பி.சி. கணேசன்
பதிப்பகம்:- கணேஷ் பப்ளிகேஷன்ஸ்.
விலை :- ரூ 20/-

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...