சனி, 30 ஜூலை, 2016

நொய்யல் நோயில்...

எனது நொய்யல் கவிதை 


நொய்(த)யல்
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.

நன்றி:தேனம்மை லெக்ஷ்மணன்,கீற்று இணையத்தளம்

நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர். 3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேதனையைச் சொல்லும் கவிதை.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சகோ . நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...