எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஜூலை, 2016

சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

என் அப்பா அம்மா திருமணத்தின்போது வெண்குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ந்திருக்கிறது. அதே போல் சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் மாப்பிள்ளை அழைப்பு சாரட்டில் நிகழ்ந்தது. அதையும் இன்னொரு உறவினர் வீட்டில் பெண்ணுக்கு வைத்த சாமான்களையும் பகிர்ந்துள்ளேன்.

அதோஓ மாப்பிள்ளை வரார். மாப்பிள்ளை வரார் குதிரை வண்டியிலே. !

முன்னேயே குடை பிடித்து ட்ரம்ஸ் வாத்தியக்  கலைஞர்களோடு ஜோக்கர் வரார். !
முகூர்த்தத்துக்கு நேரமாச்சு வேகமா வாங்க. ! :)
நாதஸ்வரக் கலைஞர்களும் முன்னே வர


வெண்புரவி சாரட்டில்
பெருமித மாப்பிள்ளை. ! கூட மாமக்காரர். - அம்மான்.
வீட்டுவாயிலில் இறங்கியபின் ஸ்லேட்டு விளக்கு வைத்து ஆலாத்தி எடுத்து பெண் எடுக்கிக் காண்பிப்பார்கள். !
இன்னொரு உறவினரின் வீட்டில் திருமணச் சீர் பொருட்கள். பெண்ணுக்கும் மாமியாருக்கும் பெண் வீட்டில் வைத்ததும் . பெண்ணுக்காக மாமியார் வீட்டில் பரப்பியதும்.
மாமியாருக்குப் பெண்வீட்டில் கொடுப்பது. அடுப்பு கோலமிட்ட பொங்கல் தவலை. கட்டு சாதக் கூடை, கோலக்கூட்டு, 7 வாளி, மூன்று தூக்கு, சட்டி தட்டு அதில் மளிகைச் சாமான்கள்.
வெள்ளிச் சாமான்கள். குத்துவிளக்கு, பிள்ளைக் குடம், பால் செம்பு, தேங்காய் மரவை, விளக்குச்சட்டி மூடி, குழவி, கத்திரிக்காய், பிள்ளையார்,  2 மாடவிளக்குகள், உலக்கைப் பூண்கள், டம்ளர், சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சங்கு, சடங்குத் தட்டு, சாப்பிடும் தட்டு, படி.

பித்தளைச் சாமான்கள், இவற்றை வெங்கலச் சாமான்கள் என்பார்கள்.

கெய்சர், இட்லிச் சட்டி, காசாணி அண்டா, பதினோரு அடுக்கு, பித்தளைத் தூக்குகள் குடங்கள், செம்புச் சாமான்கள், வாளிகள் , தாம்பாளங்கள். கரண்டிகள், விளக்குகள் மரவைகள், பொங்கல் முறித்தவலைகள். டம்ளர்கள்.தராசு,
எவர் சில்வர் சாமான்கள். இது கடல் போல எல்லாச் சாமானும் இருக்கும். பாதிக்கடை இங்கேதான்.
பெண்ணுக்கு மாமியார் வீட்டில் பரப்பும் சாமான்கள். பட்டுப் புடவைகள், சிந்தடிக் புடவைகள், சுடிதார், நைட்டி, உள்ளாடைகள், அழகு சாதனப் பொருட்கள், சூட்கேஸ், ஹாண்ட்பேக், செருப்பு, குளிக்கும் அண்டா, பக்கெட், சாப்பிடும் தட்டு, தங்க வைர நகைகள், வெள்ளிச் சாமான்கள் இன்னபிற
மிக்ஸி மற்றும் நான்ஸ்டிக் குக்வேர்.& அடுப்பு.&ஃபேன்ஸி பொருட்கள், டைனிங் டேபிளில் உபயோகப்படுத்தும் பொருட்கள்.
அலுமினியச் சாமான்கள். சம்புடங்கள், அடுக்குச் சட்டிகள், வாளிகள், பேஸின்கள், கரண்டிகள் , தவலைகள், பரிமாறும் வாளிகள். ட்ரே. காபித் தட்டுகள்.
மரச் சாமான்கள்.உலக்கை, குந்தாணிகள், சப்பாத்திக் கட்டை, சோத்துக் குத்துக் கட்டை, காய்கறி கொட்டிவைக்கும் மரவைகள்,  கரண்டிகள், பல்லாங்குழி, இடியாப்ப, முறுக்குக் கட்டைகள், அகப்பைகள், அரிவாள் மணைகள், தீப்பெட்டி பதத்துப் போகாமல் போட்டு வைக்கும் டப்பா,
மங்குச் சாமான்கள்.

பனா காது வைத்த மங்குச் சட்டிகள், மோர் உறை ஊற்றும் சட்டிகள், எண்ணெய்த் தூக்குகள், சாமான் கொட்டி வைக்கும் தூக்குகள், எச்சிப் பணிக்கம், தாளிக்கும் செட், ஊறுகாய் செட் கிண்ணங்க்ளோடு, பேஸின்கள், தட்டுகள், மூடிபோட்ட சட்டிகள்,  அவிச்சு ஊத்துற சட்டிகள் கிண்ணங்கள். காபி கெட்டில். ஊறுகாய் ஜாடிகள். ஜக்குகள்.
ப்ளாஸ்டிக் சாமான்கள். மூடி போட்ட அரிசி பக்கெட்டுகள் , ஐஸ் ஃப்ளாஸ்குகள், கூடைகள், டப்பாக்கள், சம்படங்கள், காய்கறி நறுக்கும் பாத்திரங்கள், கொட்டி வைக்கும் டப்பாக்கள் பேசின்கள். சோப்பு பவுடர் டப்பாக்கள். ஃப்ளாஸ்குகள், வாளிகள். விளையாட்டுச் சாமான்கள்.

இரும்புச் சாமான்கள் இதில் இடம் பெறவில்லை. அதே போல் ஜாடிகளும் குப்பைத் தகரங்களும் எச்சில் இலை வாளிகளும் கூட. இன்னும் மெத்தைகள்,தலையணைகள், அலமாரிகள், ட்ரெஸிங் டேபிள், கட்டில், மாப்பிள்ளை சாமான்கள்  இன்னபிற வஸ்துக்களும் . இப்போது மாப்பிள்ளை சாமான்களுக்கும் மற்ற சாமான்களுக்கும் ( டிவி, ஃபிரிஜ் , வாஷிங் மெஷின், டேபிள் ஃபேன், இன்னுமுள்ள பொருட்களுக்குப் ) பணமாகக் கொடுத்துவிடுகின்றார்கள். சிலர் எல்லாவற்றிற்கும் பணமாகவும் கொடுக்கிறார்கள். சிலர் சில்வர் புழங்கக் கொடுத்துவிடுகின்றார்களே தவிர ஒன்றுமே வைப்பதுமில்லை. , பரப்புவதுமில்லை.
ஐஸ் பாக்ஸ், குக்கர்கள், அடுப்பு.
சமுக்காளம் , மர அலமாரி - இது அடுப்படி அலமாரி, மெத்தைப் பாய்கள், கைப்பொட்டிகள்.
இப்போதெல்லாம் இதைப் பராமரிக்க முடியவில்லை என்று பரப்புவதில்லை . சிலர் வீட்டுகளில் ரத்தினக் கம்பளங்கள், மிகப் சடப்பிரம்புப் பாய்கள் கூடப் பராமரிப்பு இல்லாமல் கரையான் வந்தோ நைந்தோ போய் வீணாகிவிடுகிறது. எனவே இப்போது எல்லாம் வீட்டிற்குப் புழங்கும் பாத்திரங்கள் மட்டுமே கொடுக்கின்றார்கள். மிச்சத்தை சாமான் போடும் அறையில் போட்டு வைப்பதற்காக ஏன் வாங்குவானேன் என வாங்குவதில்லை. அந்தக் காலத்தில் கொடுத்தது இருந்தால் தாய் வீட்டார் அதை அப்படியே மகளுக்கு வைக்கின்றார்கள். சிலர் முழுமனதோடு மகளுக்கு இன்னும் சிறப்பாகக் கூடச் செய்கின்றார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



6 கருத்துகள்:

  1. நான் தேவகோட்டை நகரத்தார் திருமணம் பார்த்து இருக்கிறேன்.
    சாமான் பரத்துவது பார்த்து இருக்கிறேன். வழி வழியாக கைமாறும் பொருட்களும் உண்டு. நீங்கள் சொல்வது போல் பராமரிக்க முடியாமல் கஷ்டபடுவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. அம்மாடி.... எத்தனை எத்தனை பொருட்கள் - இதை எல்லாம் பயன்படுத்தப் போகிறார்களா என்ன....

    பதிலளிநீக்கு
  3. வாவ்.. நம்ம பக்கத்து நகரத்தார் திருமணம்...

    பதிலளிநீக்கு
  4. ஆம் கோமதி மேம்

    ஆம் வெங்கட்சகோ. வீடு பெரிது. விசேஷங்கள் அடிக்கடி வரும் அதனால் வாடகைக்கு எடுக்காமல் பயன்படுத்துவார்கள்.

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி குமார் சகோ ஆம் :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...