செவ்வாய், 5 ஜூலை, 2016

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்தும் குறுநாவல் போட்டி பற்றிய விபரம்

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.


போட்டிகள் பற்றிய பொது விதிகள்1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.

2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.


3. குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.

4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

5. போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.

6. குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.

7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் பரிசு - 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
சிறப்புப் பரிசு - தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.

முடிவுத்திகதி: 30.09.2016
இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


போட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.


அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- real24news@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.

டிஸ்கி:- முடிவுத் தேதி செப்டம்பர் 30. அதுக்குள்ள அனுப்பிடுங்க. மூன்று போட்டிகள் பகிர்ந்திருக்கேன் இதுவரைக்கும். எதிலாவது ஒன்றிலோ அல்லது மூன்றிலுமோ பரிசு பெற வாழ்த்துகள். ! :)

6 கருத்துகள் :

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

பயனுள்ள பகிர்வு

G.M Balasubramaniam சொன்னது…

வேறு இடங்களுக்கு அனுப்பி அவை பிரசுரிக்கப்படாமல் இருந்தாலும் இதற்கு அனுப்பக் கூடாது என்பது சரியாகத் தோன்றவில்லைபிரசுரிக்கப்படாதவற்றை வேறு எதற்கும் அனுப்பக் கூடாது என்பது சரியா

G.M Balasubramaniam சொன்னது…

எஸ்பொ என்பதன் விரிவாக்கம் என்ன

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தகவலுக்கு நன்றி. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

அது பத்தி நான் எப்பிடி கருத்து கூற முடியும் பாலா சார். பின்னூட்டத்துக்கு நன்றி பாலா சார், எஸ் பொன்னுதுரை என்பது அவர் பெயர் சார்.

நன்றி வெங்கட் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...