எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஜூலை, 2016

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

எனது முகநூல் நண்பர் திரு கந்தையா முருகதாசன் அவர்களின் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.

( திரு கந்தையா முருகதாசன அவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அங்கத்தினர். மிகச் சிறந்த எழுத்தாளர், பண்ணாகம் இணையதளத்தில் இவரது படைப்புகளை வாசிக்கலாம். எந்த நிகழ்வுகளிலும் தன்னை முன்னிறுத்தாத எளிமையாளர் , . மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்டும் பண்பாளர். )


///அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்தும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரம்


அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.




போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.

2. ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.

3. சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’அமரர் அருண்.விஜயராணி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.

4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

5. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.

6. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.

7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
சிறப்புப் பரிசு - தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.


முடிவுத்திகதி: 31.10.2016
இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


போட்டி முடிவுகள் 2016 மார்கழி மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.


அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- real24news@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.

டிஸ்கி:- அக்டோபர் 31 தான் முடிவுத் தேதி. அதுனால அதுவரைக்கும் காத்திருக்காம இப்பவே எழுதி அனுப்பிடுங்க. அப்புறம் மறந்துரப் போறீங்க. ஆல் தெ பெஸ்ட் மக்காஸ். ! 



7 கருத்துகள்:

  1. தேன்,
    நேரம் கிடைக்காம உங்க வலைத்தளத்துக்கு (ஏன் என்னுடைய வலைத்தளத்துக்கே) வருகை தரவே முடிவதில்லை. வந்தால் அருமையான செய்திகள் கிடைக்கும்.

    பகிர்வுக்கு நன்றி.
    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  2. தகவல் பகிர்வுக்கு நன்றி. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அஹா மிக நன்றி ஜெயந்தி

    நன்றி திருக்கண்ணபுரத்தான் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...