எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

மங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2016.

மங்கையர் மலரில் ஒரு சிறுகதைப் போட்டி. ஜெயஸ்ரீராஜ் அவர்கள் ஒரு எழுத்தாளர்.அவர் கல்கி , மங்கையர் மலரில் நிறைய எழுதி இருக்கிறார். அவரது நினைவைப் போற்றும் விதத்தில் அவரது கணவர் திரு ராஜகோபாலன் அவர்கள் இப்போட்டியை நடத்துகிறார்கள்.நான்காவது ஆண்டாக இது தொடர்கிறது. முதல் பரிசு 20,000/-. இரண்டாம் பரிசு, 15,000/-, மூன்றாம் பரிசு - 10000/-, தவிர பிரசுரிக்கத் தேர்வாகும் ஆறு கதைகளுக்கு தலா ரூ 5000/-. கல்கி குழுமத்தின் பவள விழா ஆண்டுங்கிறதால பரிசுத் தொகையை அதிகரிச்சிருக்காங்க. !

ரூல்ஸ நல்லா படிச்சிக்கோங்க. பெண்கள் மட்டும் பங்கேற்கணும். முகவரி, புகைப்படம் கட்டாயம் அனுப்பனும், மங்கையர் மலரில் 3 பக்கங்களுக்குள் வருகிறாற்போல 900 வார்த்தைகளுக்குள்ளதான் கதையை அமைக்கணும்,  சொந்தக் கற்பனைதான்னு உறுதிமொழிக் கடிதம் இணைக்கனும், ஒருவரே எத்தனை சிறுகதைகள் வேணும்னாலும் அனுப்பலாம், மின்னஞ்சலில் அனுப்பலாம், - ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி  - 2016 என்று குறிப்பிட்டு mangayarmalar@kalkiweekly.com என்ற ஐடிக்கு அனுப்புங்க.

எனவே ரெடியாகுங்க. எழுத ஆரம்பிங்க.பரிசு உங்களுக்குக்குதான். ஏதேனும் ஒண்ணாவது கிடைக்கலாம்.  ஆனா ஜூலை 30 க்குள்ள அனுப்பிடுங்க. :)


6 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி. போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான தகவல்
  தொடருங்கள்

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 3. தகவலுக்கு நன்றிங்க. வேறு ஒரு பக்கத்திலும் பார்த்த நினைவு. அனுப்பணும்னு நெனச்சுட்டு இருக்கேன்

  பதிலளிநீக்கு
 4. நன்றி சுரேஷ் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி தங்கமணி சீக்கிரம் அனுப்புங்க.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...