எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஏப்ரல், 2015

அமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும்.

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து வெளிவரும் தென்றல் பத்ரிக்கையில் ( மார்ச் 2015 இதழில்)  எங்கள் சுசீலாம்மா பற்றி  மிக அழகாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன் அவர்கள். அம்மாவைப் பற்றிய முழுமையான தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

திரு அரவிந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். அம்மாவைப் பற்றி அறியாதவர்கள் இலர். அவர்களின் மாணவிகளாய் இருந்த பாக்கியத்தாலேயே என்னைப் பற்றியும் உமா மகேஸ் பற்றியும் நாங்கள் அவருக்கு ( சுசீலாம்மாவுக்கு ) எங்கள் புத்தகத்தை சமர்ப்பணம் செய்தது குறித்தும் எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன்.


முகநூலில் அம்மா பகிர்ந்தது இது.

///அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தென்றல்’மாத இதழில் வெளியான என்னைப்பற்றிய அறிமுகக்கட்டுரை.முன்பின் அறிமுகமற்ற என்னைக்குறித்து இத்தனை விரிவான நுணுக்கமான தகவல்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கும் முகம்தெரியாத திரு அரவிந்த் அவர்களுக்கும்,தென்றல் ஆசிரியர் குழுவுக்கும் என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு அக்கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.///

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9922

மதிப்பிற்குரிய அரவிந்த அவர்கட்கும் தென்றல் பத்ரிக்கைக்கும் நன்றி. என் தமிழன்னை சுசீலாம்மா பற்றி எழுதி உள்ளமை குறித்துப் பெருமிதம் அடையும் நேரம் என்னைப் பற்றியும் குறிப்பிட்டு இருப்பது உங்கள் நல்லுள்ளத்தைக் காட்டுகிறது.

எங்கள் அன்பின் கலைவாணியே இன்னும் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். எனினும் தென்றலின் பேரன்புக்கு நன்றி. :)


---மிக்க நன்றி இப்படிப்பட்ட பெரும்பேறு வாய்த்தமைக்கு.சொல்ல எனக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. நெகிழ்ந்திருக்கும் நெஞ்சிலிருந்து மகிழ்வுதான் பொங்குகிறது. நன்றியும் அன்பும்.

மிக்க நன்றி சுசீலாம்மா &  அரவிந்தன் & தென்றல் பத்ரிக்கை.


9 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கட்டுரை. சிறப்பான படங்கள். போற்றப்பட வேண்டியவர்களே. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சுசீலாம்மாவுக்கு என் வணக்கங்களும், பாராட்டுகளும்...

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பாத்திமா கல்லூரியில், நானும் சுசீலாம்மாவின் மாணவி தான்!. என் ஒவ்வொரு சிறு வெற்றியையும் இன்னும அவருடன் பகிர்ந்து கொண்டு வருகின்றேன்!..அவரது சாதனைகள் கண்டு, பெருமிதம் அடைவதோடு, அவரது மாணவியாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்!..தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!.. பகிர்வுக்கு உளமார்ந்த நன்றி!.

    பதிலளிநீக்கு
  4. தில்லியில் அவர்கள் இருந்த காலத்தில் சில முறை சந்தித்து அளவளாவியதுண்டு.....

    வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபாலன் சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி ஆதி வெங்கட்

    அட அப்படியா நீங்களும் அம்மாவின் மாணவி என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன் பார்வதி. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி சந்த்ரகௌரி சிவபாலன்

    நன்றி வெங்கட் சகோ :) கொடுத்து வைத்தவர் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...