வலையுலகில் மதிப்பிற்குரிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் கேஜிஜி எனப்படும் K G GOWTHAMAN கேஜி கௌதமன் சார். இவரும் ஸ்ரீராமும் (இன்னும் சில நண்பர்களும் என நினைக்கிறேன்) இணைந்து எங்கள் ப்லாக் என்னும் வலைப்பதிவில் சிறப்பான பதிவுகள் போட்டு வருகிறார்கள். அதில் பாசிட்டிவ் பதிவுகளையும் புகைப்படப் பதிவுகளையும் அவ்வப்போது படித்து வருவேன். என் வலைப்பதிவிலும் இவர்கள் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வருகிறார்கள். ( என் இன்றைய நிலைக்கு வலைப்பதிவர் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்கிறது . அதற்கு நன்றிகள் )
வலைத்தளத்தில் கேஜி கௌதமன் சாரின் முழுப்பெயர் சட்டென்று கண்ணில் படவில்லை. ஆனால் முகநூலில் இவர் பெயரைப் பார்த்தவுடன் பரிச்சயம் ஆனதாகத் தெரிந்ததும் நட்பு அழைப்பு விடுத்தேன். அட நம்ம கௌதமன் சார் இவங்க என்று தெரிந்தது. தன் குழந்தைகள்/ பேரப்பிள்ளைகள் பேரை இப்பவெல்லாம் ரெண்டு எழுத்துக்கு மேல வைக்கிறதில்லை மக்கள். அதுவும் AA என்று இரண்டு ஏ வரும்படி ஆதித்யா, ஆருஷ், ஆரத்தி, ஆதி என்று வைக்கிறார்கள். இதுல கல்யாணமகாதேவி கோபால கௌதமன்னு சார் முகநூலில் பேர் வைச்சு இருக்காங்களே அதுக்கு என்ன காரணமாக இருக்கும். ஒரு வேளை அம்மா அப்பா பேரையும் சேர்த்து வைச்சிருப்பாங்களோ ஸ்கூல்ல எல்லாம் எப்பிடி கூப்பிட்டு இருப்பாங்கன்னு ஒரே யோசனை