எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கீதா மதிவாணனின் அம்மாவும் மாமியாரும்.

கீதா மதிவாணன் எனக்கு வலையுலகத் தோழி. ஆஸ்த்ரேலியாவில் வசித்து வரும் இவர் சிறுகதைகள் அற்புதமாக எழுதுவார். என் வலைத்தளத்தில் பின்னூட்டம் மூலமாக அறிமுகமானாலும் தன் சிறப்பான சிறுகதைகளால் கவர்ந்தவர். இவரது சிறுகதைகள் திருநெல்வேலி பதிப்பு தினமலர் பெண்கள் மலரில் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்துக் கேட்டாலும் அசராமல் அழகான கதைகள் அனுப்புவார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக சில கேள்விகளை முன் வைத்தேன். அவர் இந்தக் கேள்வியை செலக்ட் செய்து பதிலளித்துள்ளார்.
 
//// உங்க மாமியார்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன. அம்மா கிட்ட பிடிச்சது என்ன. (ரெண்டு பேர்கிட்டயும் பிடிக்காதுன்னும் நினைக்கிறதையும் விரும்பினா பகிர்ந்துக்கலாம்.) ///

அவரின் பதில்.

கேள்வி: உங்க மாமியார்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன? அம்மா கிட்ட பிடிச்சது என்ன? 


இந்தக் கேள்விக்கு தனித்தனியா பதில் சொல்ற அவசியமே இல்லாம என்னுடைய அம்மா, மாமி இவங்க இரண்டு பேர்கிட்டயுமே எனக்குப் பிடிச்ச பொதுவான அம்சங்கள் நிறைய உண்டு.

முதலில் அம்மா பத்தி சொல்லிடறேன். நான் சின்னவளா இருக்கும்போது வீட்டுத் தோட்டத்தில் எனக்காகவே அழகழகா பூச்செடிகள் வச்சி வளர்ப்பாங்க. சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு பூ பூத்துக்கிட்டே இருக்கும். பூப்பிசாசுன்னு செல்லமா(?) அழைக்கப்படுற அளவுக்கு நான் பூமேல் பைத்தியமா இருந்த காலம் அது. ஆறாவது படிக்கும்போது புது ஹெச்.எம் வந்து பள்ளிக்கூடத்துக்கு பூ வச்சிட்டுவரக்கூடாதுன்னு உத்தரவு போட்ட பிறகு வேறு வழியில்லாமல் பூவாசை அடங்கிப்போனது. எனக்காக அம்மா வளர்த்த பூச்செடிகளையும் தொடுத்த பூச்சரங்களையும் என்னால் மறக்கவே முடியாது.

அம்மா செய்யற கைவேலைகளைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்து கொஞ்சம் கத்துகிட்டு என் கற்பனையையும் கலந்து நிறைய செஞ்சேன். வீட்டுக்கு வரவங்களிடம் அம்மா இது எங்க பொண்ணு செய்தது, அது எங்க பொண்ணு செய்தது என்று பெருமை பேசு அளவுக்கு வீடு முழுக்க என் கைவண்ணம்தான். வீணாய்ப்போன டிவியின் பிக்சர் ட்யூபைக் கூட விட்டுவைக்காமல் பெயிண்டிங் செஞ்சு ஷோகேஸில் வச்சிருந்தேன்.

அடுத்து சமையல். அம்மாவோட சமையல் ரொம்ப அருமையாயிருக்கும்விதவிதமா சமைப்பாங்க. ஆனால்நான் எதுவுமே அவங்ககிட்ட இருந்து கத்துக்கலைங்கிறதுதான் வருத்தம். அப்பா என்னை அடுப்புகிட்ட பார்த்தாலே அம்மாவுக்கு திட்டு நிச்சயம். அப்புறம் எப்படி சமையலைக் கத்துக்கிறது? அடிப்படை சமையல் மட்டும் கத்துக்குடுத்து, ‘இனி உன்பாடு, உன் புகுந்தவீட்டுப்பாடுன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டாங்க.

மாமிகிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம், மாமியும் அம்மா மாதிரியே பிரமாதமா கைவேலைப்பாடுகள் செய்வாங்க. அவங்க செய்த எம்பிராய்டரி ஒர்க்கின் அழகில் சொக்கிப்போய் எனக்கும் கத்துத்தரச் சொல்லி கேட்டேன். அவங்களுக்கு ஒரே சந்தோஷம். ‘ஆஹாநீயே என் வாரிசுன்னு சொல்லி நிறைய கத்துக்கொடுத்தாங்க.

அம்மா மாதிரி மாமிக்கும் தோட்டத்தில் ஆர்வம். ஆனால்.. மாமியோட தோட்டம் காய்கறித்தோட்டம். வீட்டுக்குத் தேவையான காய்களை அழகாக பயிராக்கித் தருவாங்க. சமையலும் பிரமாதமா செய்வாங்க. மாமியார் வீட்டுக்கு வந்துதான் சமையலை முழுசா கத்துகிட்டேன். அதனால்தான் இன்னிக்கு வரைக்கும் பிரச்சனையில்லாமல் வாழ்க்கை வண்டி ஓடிட்டிருக்கு.

ஆனா பாருங்க, அம்மாவுக்கும் வாரிசாகாம, மாமிக்கும் வாரிசாகாம,  அதாவது, ஒரு கிச்சன் கில்லாடியாகவோ, ஒரு கார்டன் குயினாகவோ அல்லது ஒரு எம்பிராய்டரி எக்ஸ்பர்ட்டாகவோ ஆகாம, ஒரு எழுத்தாளராகி உங்க எல்லோரையும் சோதிக்கணும்னு இருந்திருக்கே. அதை மாத்தமுடியுமா?

பல பிரபலங்கள் இடம்பெற்ற இந்த சாட்டர்டே ஜாலி கார்னரில் எனக்கும் இடமொதுக்கித் தந்த தோழி தேனம்மையின் அன்புக்கு மனமார்ந்த நன்றி. 

---- கீதா நீங்க ஈசியா கவிதை சிறுகதை பத்தின கேள்விக்கு பதில் சொல்வீங்கன்னு நினைச்சேன். ஆனா இங்கேயும் அம்மாகிட்டயும் மாமியார்கிட்டயும்  பிடிச்சத மட்டும் சொல்லி ஈசியா எஸ்ஸாயிட்டீங்க. ரொம்ப ரொம்ப நல்லவங்க நீங்க.

நீங்க ப்லாகருக்கு வாரிசா இருக்கணும்னு ஆண்டவனே விதிச்சுட்டான். நீங்களும் ப்ரபல ப்லாகர்தான். அத மாத்த யாராலும் முடியாது. அதுனால சோதனை எல்லாம் சாதனைதான். இன்னும் இன்னும் நீங்க எங்கள சோதிக்க உங்களுக்கு ப்லாகர் ஆண்டவன் துணை புரியட்டும். நன்றி கீதா சாட்டர்டே ஜாலி கார்னரை உறவுகளின் உன்னதம் சொல்லி சிறப்படைய வச்சதுக்கு. :)


25 கருத்துகள்:

  1. எழுத்துலகில் சிறப்பான ஆக்கங்களாலும் எண்ணங்களாலும் பிரசித்தமாயிருக்கும் உங்களுடைய நட்பு கிடைத்தது என் பாக்கியம். சாட்டர்டே ஜாலி கார்னரில் எனக்கும் இடமளித்த உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு அம்மாக்களிடமும் கைவேலையைக் கற்றதோடு எழுத்து என்கிற கைவேலை தானாய் அமைந்தது (எங்களுக்கு) நல்ல விஷயம். கீதா அப்பா செல்லமா இருந்திருக்காங்கன்னு புரியுது. அப்புறம்... ‘பூப்பிசாசு’ங்கற டைட்டில் ரொம்ப நல்லாருக்கே.... அப்படியே கூப்ட்ரலாமா..? ஹி... ஹி.... ஹி...!

    பதிலளிநீக்கு
  3. அம்மாவும் மாமியாரும் ஒரே மாதிரி அமைவது ஒரு வரம் என்றால், இது மாதிரி கொண்டாடும் மகள், மருமகள் அமைவது அவர்களுக்கும் வரம்தான்.

    மாமியாரிடம் சமையல் கற்பதில் ஒரு சௌகர்யம். எல்லா ஆண்களுக்கும் ஒரு குண நலன் 'என் அம்மா சமையல் மாதிரி வராது' வியாதி. அதைத் தவிர்த்து நல்ல பேர் வாங்கிக் கொள்ளலாம்!

    கீதாவின் பறவைகள், விலங்குகள் பற்றிய பதிவுகள் 'சம்திங் ஸ்பெஷல்' டைப். சுவாரஸ்யமாகப் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. தன் அம்மாவையும் தன் மாமியாரையும் கடுகளவேனும் வித்யாசப்படுத்தாமல் அழகாக மிக அழகாகப் பாராட்டி, அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை எடுத்துச்சொல்லி, இருவருமே எனக்கு ஒன்று தான் என மிகத்திறமையாக மிகவும் சாமர்த்தியமாக எடுத்துச் சொல்லி எழுதியுள்ளதிலிருந்தே, இவர்கள் எவ்வளவு ஒரு பொறுமையும் பொறுப்பும் மிக்க மிகச்சிறந்த NUMBER ONE எழுத்தாளர் என்பதை மிகத்தெளிவாக அறிய முடிகிறது.

    பேட்டி எடுத்த மற்றும் பேட்டி கொடுத்த தங்கங்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். வாழ்க ! வளர்க !!

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  5. அழகாய் கேள்விகளுக்கு விடை அளித்து இருக்கிறார் கீதா.

    வாழ்த்துக்கள் கீதாவுக்கு.

    பதிலளிநீக்கு
  6. அம்மா மாமியார் பற்றி ஒரே முகமாக விபரித்த கீதா அவர்களின் மதிநுட்பம் சிறப்பு. சிறுகதை எழுத்தாளர் அல்லவா கேட்கவி வேண்டும். பெட்டி எடுத்தமைக்கும் பெட்டி கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அழகான பதில்கள். கீதாமதிவாணன். நீங்கள் அம்மாவையும் ஒரு சேர மதிப்பதே அருமைதான். இருவரின் நற்குணங்களையும் எடுத்துச் சொல்லி எங்கள் மதிப்பில் உயர்ந்துவிட்டீர்கள்.. இத்தனை நல்ல மனுஷியை அறிமுகம் செய்த உங்களுக்கும் நல்வாழ்த்துகள் தேன்.

    பதிலளிநீக்கு
  8. பெட்டி எடுத்தமைக்கும் பெட்டி கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்...//// பெட்டியில எதை வெச்சுக் கொடுத்தாங்க கீதா...? சொல்லவேயில்லையே தேனக்கா..? ஹி.... ஹி.... ஹி..

    பதிலளிநீக்கு
  9. இனிய கீதமாய் இசைத்த வரிகள் அருமை..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  10. நன்றி கீதா உங்கள் எழுத்தும் சிறப்பானவைதாம். இருவருமே கொடுத்து வைத்திருக்கிறோம்.

    நன்றி கணேஷ்

    நன்றி ஸ்ரீராம். மற்றவை அவ்வளவாகப் படித்ததில்லை

    பதிலளிநீக்கு
  11. பேட்டி எடுத்த மற்றும் பேட்டி கொடுத்த தங்கங்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். வாழ்க ! வளர்க !! // அஹா கோபால் சார் ஒரு க்ஷணம் இந்த வார்தைகளைப் பார்த்துப் பூரித்துப் போனேன். நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி நன்றி நன்றி. :)

    பதிலளிநீக்கு
  12. நன்றி கோமதி மேம்

    நன்றி சந்திரகௌரி

    நன்றி வல்லீம்மா

    நன்றி ராஜி

    நன்றி வெங்கட் :)

    பதிலளிநீக்கு
  13. பாலா அவர்கள் ஈழத்தமிழில் பேசும்போது அப்படி உச்சரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு
  15. நன்றி கணேஷ்... பூப்பிசாசுன்னு தாராளமா கூப்பிடலாம். ஆனால் என்ன, இங்கு பூ கிடைக்கவில்லை. பிசாசு மட்டும் இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஸ்ரீராம். சரியா சொன்னீங்க. ஒரு ஆண்மனசு இன்னொரு ஆணுக்குதான் தெரிகிறது. :)

    பதிலளிநீக்கு
  17. இதில் சாமர்த்தியம் எல்லாம் இல்லை. மனத்தில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவே. பாராட்டுக்கு மிக்க நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  19. மதிநுட்பத்துக்கெல்லாம் வேலையே இல்லைங்க கௌரி. எல்லாவற்றுக்குமே மனசுதான் காரணம். உங்களது பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி. உங்களை கணேஷ் கலாய்ச்சியிருக்கிறாரே... கவனிச்சீங்களா? :)

    பதிலளிநீக்கு
  20. உங்களுடைய பாராட்டுகளை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். அன்பான நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  21. பெட்டி பெட்டியா வேறென்ன, அன்பின் பரிமாற்றம்தான் கணேஷ். உங்களுக்குத் தெரியாதா என்ன?

    பதிலளிநீக்கு
  22. தங்கள் பாராட்டுகளுக்கு அன்பான நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    பதிலளிநீக்கு
  23. ரசித்தமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  24. இப்படியொரு அருமையான வாய்ப்பை வழங்கியமைக்கு மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...