எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 மே, 2014

தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.

101. விழிகளின் அருகினில் வானம்.

ப்ரசன்னாவும் நவ்யா நாயரும் நடித்த பாடல்காட்சி. மிக அருமையான பாடல் வரிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். ஒரு நட்பு மெல்லிய காதலாக உருவெடுக்கும் தருணத்தை உறுத்தாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. இருதயமே துடிக்கிறதா. துடிப்பதுபோல் நடிக்கிறதா என்ற இடம் அழகு.

102. சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா.
நாகார்ஜுனும் சுஷ்மிதா சென்னும் ஆடும் அழகுப் பாடல் காட்சி. நதிக்கரைஓரம் செட்டிங்ஸும் இருவரின் உடையும் அழகு. வல்லினமும் மெல்லினமும் சேர்ந்ததுபோன்ற ஒரு தன்மை பாடல் முழுதும் எழில் சேர்க்கும்.

103. மழையே மழையே.
எஸ்பி பி யின் சந்தனக் குரலில் அருமையான மழைப் பாடல். எனக்குப் பிடித்த நடிகை சரிதா. பிரதாப் போத்தனுடன் மழையில் நனைந்து பாடும் பாடல். கூந்தல் மலரில் தேனைக் கொடுத்து காத்துக்கிடந்தேன் கால்கள் தடுக்க இதயம் துடிக்க..-- கூந்தல் மலர் என்ற வார்த்தைப் பிரயோகம் பிடிக்கும். :)104. மழை வருது மழை வருது.
பிரபுவும் கௌதமியும் பாடும் பாடல் காட்சி. வெய்யில் வருது வெய்யில் வருது குடை கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே என்ற வரிகளும் மழை போல் நீயே பொழிந்தாய் நீயே என்ற வரிகள் அழகு. மழைச்சாரல் தூறியதுபோல் தண்ணென்ற குளுமை இருக்கும் இந்தப் பாட்டிலும் இசையிலும்.

105. திரும்ப திரும்ப

மோனல் குணால் நடித்த பாடல் காட்சி. பார்வை ஒன்றே போதுமே படம். ரீமா சென்னைப் போல ஒரு ஆண்மை பொருந்திய பெண்மையோடு அழகானவர் மோனல். சிம்ரன் அளவு துடி இடை இல்லாவிட்டாலும் மிக அழகாக இடை அசைத்து ஆடுவார். 

106. துளித் துளியாய்.
வேதியல்னாத்தான் நமக்குப் பிடிக்குமே. இதில் மழை வேதியல் அதே படம். அதே குணால் மோனல். மிக அழகான காட்சியமைப்பு. உதட்டு முத்தமும் உண்டு.

107.திருடிய இதயத்தை
மனதை உருக்கும் பாடல் வரிகள். குணாலும் மோனலும் இன்று இல்லை என்பதே இந்தப் பாடலை இன்னும் இன்னும் ரசிக்கத் தோன்றும். காதலா என் காதலா என் காதலா என திருடிய இதயத்தைத் திரும்பக் கேட்பார் மோனல்.

108.மன்னிக்க வேண்டுகிறேன்.

பத்மினியும் சிவாஜியும் நடித்த காட்சி. மிக அழகுன்னு சொல்லவும் வேண்டுமா. அப்போ இவங்க கெமிஸ்ட்ரி பத்தித்தான் பேசுவாங்க. அவ்ளோ கெமிஸ்ட்ரி.. சொல்லப் போனா கெமிஸ்ட்ரிக்கு ஹெட் ஆஃப் தெ டிபார்ட்மெண்டே இவர்தான். :) நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன என்ற வரிகள் அர்த்தம் நிறைந்தது.

109. மஞ்சள் வெய்யில் மாலையிலே.

 கமல் ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடுவில் இந்தப் பாடல் காட்சி மிக அழகு. வெள்ளி நிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாம் தூரம் தூரம் சென்றாய்.. என்ற வரிகள் பிடிக்கும். ( போரடிக்கும் ) சினிமா பார்த்தபடி தலை லேசாக உறக்கம் கொள்வதும் கூட என் தலைவரை நினைவு படுத்தும் காட்சியழகு :) :) :)

110. ஜாதிமல்லி பூச்சரமே.
அழகனும் அழகியும் பாடும் ஆடும் காட்சி. என் தலைவருக்கு நடிப்பில் கமல் தலை என்றால் டைரக்‌ஷனில் கேபி தலை..  சோ இந்தப் படத்தைப் பற்றிக் கேட்கணுமா. கீதா எழுதிய பாடலை அழகன் மம்முட்டியும் அழகி பானுப்பிரியாவும் பாடி ஆடுவார்கள். நடனமாடவே பிறந்தவர் போல அழகான வளைவு நெளிவுகளுடன் உயரமாக இருப்பார் பானுப்பிரியா. முகம் சிற்பம்போல அவ்ளோ அழகு. மெல்லிய கைகள் சுழற்றி  ஓடி ஓடி சுற்றிச் சுற்று ஆடுவார்.கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று என்ற வரிகள் பிடிக்கும்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.6 கருத்துகள்:

 1. எல்லாமே தேனான பாடல்கள்தான். மழை வருது பாடல் என் பேவரைட்.

  பதிலளிநீக்கு
 2. 'திரும்பத் திரும்ப' 'துளித் துளியாய்' பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் எல்லாமே நானும் ரசிக்கும் பாடல்கள். பாடல்களுக்கு உங்கள் குறிப்புகள் அருமை.

  பதிலளிநீக்கு
 3. அனைத்து பாடல்களும் ரசிக்கத்தக்கவை...

  பதிலளிநீக்கு
 4. விழிகளின் அருகினில் வானம் எத்தனை தடவை கேட்டிருப்பேனோ. மன்னிக்க வேண்டுகிறேன் அருமை. பத்மினி மணக்க இருந்தார். சிவாஜியை என்றும் சொல்வார்கள். குடும்பச் சலனங்கள் வேண்டாம் என்று விலகி விட்டதாக அப்போதெல்லாம் செய்தி. கெமிஸ்ட்ரி இங்கேயும் உண்டு எம்ஜிஆர் சரோஜாதேவி பாடல்களிலும் காணலாம். அருமையான பாடல் தொகுப்பு. .நன்றி தேன்.

  பதிலளிநீக்கு
 5. விழிகளின் அருகினில் வானம் என் தனிமையின் இதயகீதம்! அருமையான தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 6. நன்றி கணேஷ்

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி தனபால் சகோ

  நன்றி வல்லிம்மா. சரியா சொன்னீங்க எம்ஜியார் சரோஜாதேவி கெமிஸ்ட்ரி பத்தி. :)

  நன்றி தனிமரம்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...