எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 மே, 2014

புதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.

புதிய தரிசனம் இணைய இதழில் அன்ன பட்சி பற்றிய நூல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

////அன்ன பட்சி

அன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.




அன்னபட்சியில் இருந்து பால் என்று தனித்துப்பிரிக்கத் தண்ணீர் ஏதும் கலக்கப்படவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, விளையாட்டு பொம்மை கவிதையில், குழந்தையிடம் பேசும் பொம்மை, தூங்கப் படைக்கப்படாத நான் உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் நீ எழுந்தவுடன் திரும்ப விளையாட என்ற வரிகளும், விவ ‘சாயம்’ எனும் கவிதையில், ரசாயனங்களால் பாழ்பட்டுப் போன பூமி பற்றி வரும் கீழ்கண்ட வரிகளான “குடிச்சுக் குடல் அழிஞ்சு புண்ணாகிக் கிடக்கு சுரப்புத் தட்டிப்போய் வெடிச்ச முலைக் காம்பாட்டம் எனக்குப் பாலூட்டிய பூமி’ என்ற வரிகளா கட்டும் அன்னபட்சியின் சிறப்புக்கான அடையாளங்கள்.


ஒரு சில கவிதை வரிகளில் வைணவ வாடை வீசுவதை நுகர முடிகிறது. ‘நிஜம்’ என்ற தலைப்பில் படைக்கப்பட்டுள்ள கவிதை இந்தியாவையும் தாண்டி ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் கண்ணீர்த் துளிகள். ‘இனம் புதைத்த காடு’ கவிதை ஈழ தேசத்தின் துயரக்கடல். அந்தக் கடலில் ஒரு துளி இவ்வாறு இருக்கிறது. ‘ தன் ரத்தம் தோய்ந்த கோரப்பல்லைக் காணத் துக்கித்து தவறான இடத்தில் தவறிப் போன தென்று கண்மூடிவருத்தத்தில் தலைகுனிந்திருக்கிறான் புத்தன்’.


இப்படி சமூகத்தின் பல பரிமாணங்களைப் பற்றியுமான படைப்பே அன்னபட்சி
-          செந்தில்
நன்றி செந்தில்.
இந்த விமர்சனத்தை இங்கேயும் படிக்கலாம்.

டிஸ்கி :-

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...