111.தேடினேன் வந்தது.
ஊட்டி வரை உறவில் கே ஆர் விஜயாம்மா ஆடும் பாடல். சிவாஜி மறைந்திருந்து புகைப்பிடித்தபடி பார்த்துக் கொண்டிருப்பார். மிக அழகாக நடனமாடுவார் கே ஆர் விஜயா பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
112. சிபிஐ எங்கே. தேடச் சொல்லு கொஞ்சம்.
சூர்யா ஜோதிகா முதன் முதலில் தேடி ஆடிய பாடல். மிக ஃபாஸ்டான லிரிக்ஸோடு அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும் படம்.
113. பார்வை ஒன்றே போதுமா.
ஜெய்சங்கர் பாடும் பாடல். மிக அருமையான பாடல் வரிகளுக்காகப் பிடிக்கும். எல் ஆர் ஈஸ்வரியும் குரலும் அற்புதமாக இழையும். இசையும் பாந்தமாக அமைந்திருக்கும்.
114.அன்புள்ள மான்விழியே.
குழந்தையும் தெய்வமும் படம். ஜெய்சங்கரும் ஜமுனாவும் நடித்தது. பள்ளியில் போட்டுக் காண்பித்தார்கள் இந்தப் படத்தை. ரொம்பப் பிடித்த படம். நலம் நலம்தானா முல்லை மலரே சுகம் சுகம் தானா முத்துச் சுடரே என்ற வரிகளை ஒரு கொடியைப் பற்றிக் கொண்டு பாடுவார். அழகான காட்சியமைப்புகள்.
115. ஊனே உயிரே உனக்காய்த் துடித்தேன்.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷாவும் சிம்புவும் நடித்த காட்சிகள். கடைசிவரை டேய் லவ் பண்ணீங்களா இல்லையாடா என்று கேட்கத் தோன்றிய படம். தென்றலே என்னைத் தொடு போல லவ் பண்ணுவாங்களா இல்லையான்னு மண்டையைப் பிச்சுக்க வைச்ச படம். பட் யங்ஸ்டர்ஸுக்குப் பிடித்திருந்தது. எனக்கு இதன் பாடல்கள் பிடித்திருந்தது. தாமரையின் வரிகளுக்கு ஒளியூட்டி இருப்பார் கௌதம் மேனன். அந்தக் குரல் ஏங்கி ஏங்கிக் கேட்கிறது என்னுள் விண்ணைத் தாண்டி வருவாயா என்று.
116. அதோ அந்தப் பறவை போலப் பாட வேண்டும்.
பாடல் என்றால் காதல் மட்டும்தானா.. மனித சுதந்திரமும் வேண்டுமே.. எம்ஜியார் ஒரு கப்பலில் அடிமையாகக் கொண்டு செல்லப்படும்போது கூட்டத்தாரோடு சேர்ந்து பாடும் பாடல். சுதந்திரத்தின் சுகத்தைச் சொல்லும். காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே என்ற வரிகள் அழகு.
117. ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது.
அரங்கேற்றத்தில் பிரமிளா பாடும் பாடல். கொஞ்சம் அதிர்ச்சியூட்டிய படம். ஆனால் இந்தப் பாடல் காட்சி அற்புதமாக இருக்கும். எல்லாவற்றையும் அலட்சியப்படுத்திச் சிரிக்கும் எக்காளச் சிரிப்பு. அது எல் ஆர் ஈஸ்வரிக்கும் பிரமிளாவுக்குமே வாய்த்தது. :)
118. அனுபவம் புதுமை.
பெண்கள் தனிமையில் பாடும் பாடல் காட்சிகளில் சாக்லேட் செல்லுலாய்டுகளாக ரவிச்சந்திரனும் ராஜஸ்ரீயும் பாடும் பாடல். இசையும் இரவும் தனிமையும் அவர்கள் இருவரின் இளமையும் அழகூட்டும். பெரிய ஹீரோக்களுக்கு எல்லாமே இவர் வந்ததும் ஒரு பயம் வந்ததாம். டஃப் ஃபைட்தான். ஆனால் பெரிதும் அடுத்தடுத்து எடுபடாமல் போய்விட்டார்.
119. அந்த நாள் ஞாபகம்.
உயர்ந்த மனிதனில் சிவாஜியும் மேஜர் சுந்தர்ராஜனும் பாடும் பாடல். எப்போதும் நம் உள்ளங்களில் இடம் பிடித்த பாடலில் இந்தப் பாடலும் ஒன்று. சில முக்கிய தருணங்களில் இந்த வார்த்தையை நம் நட்புகளிடம் உபயோகிப்போம். சிலாகிப்போம். நூறு சொந்தம் வந்தபின்பும் தேடும் இந்த அமைதி எங்கே. என்ற வரிகள் யோசிக்க வைத்தவை.
120. இது இரவா பகலா.
கமலும் ஸ்ரீதேவியும் பாடும் பாடல். கண் தெரியாத ஸ்ரீதேவி கமலைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துச் சிற்பம் வடிப்பார். மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகே இல்லையா. உன் கூந்தல் என்பது பூச்சரம் வைத்தது அறிவாய் இல்லையா என்ற வரிகள் செம அழகு.

பழமையும் புதுமையும் சேர்ந்த கலவை... அனைத்தும் மிகவும் பிடித்த பாடல்கள்...
பதிலளிநீக்குகாலம் வென்ற பாடல்களின்
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு
பகிர்வுக்கு மிக்க நன்றி
தேன் பாடல்கள் சுவைத்தன..
பதிலளிநீக்குதேடலுக்கு பாராட்டுக்கள்.!
எனக்கு கே ஆர் விஜயா பிடிக்காது. அதிலும் இந்த டான்ஸ்! கொடூரம்!
பதிலளிநீக்குஆண்டவனின் தோட்டத்திலே பாடல் எல் ஆர் ஈஸ்வரி அல்ல, பி. சுசீலாம்மா பாடியது.
பழைய பாடல்களும் புதிய பாடல்களும் கலந்து சுவைக்கக் கொடுத்திருக்க்கிறீர்கள்.
பார்வை ஒன்றே போதுமா, அனுபவம் புதுமை இரண்டு பாடல்களும் ரொம்பவும் பிடித்த பாடல்கள். சில பாடல்களை பார்க்க முடியாது. சும்மா கேட்கலாம். பார்க்கவும் முடியாத, கேட்கவும் முடியாத பாடல் 'அந்த நாள் ஞாபகம்' !!!
பதிலளிநீக்கு@ஸ்ரீராம் இந்த விஷயத்தில் நீங்கள் என் பிள்ளையைப் போல!
நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்
நன்றி ராஜி
ஸ்ரீராம் அவர் எங்கே ஆடினார். டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததை ஆடினார். ரசனை மாறுபடும். இறைவன் படைப்பில் எல்லாவற்றிலும் எல்லாரிலும் ஏதோஒன்று எனக்குப் பிடித்தமானதாயிருக்கும். அதை ரசிப்பேன். எல் ஆர் ஈஸ்வரி என நினைத்தேன்.
ரஞ்சனிம்மா ஸ்ரீராமுக்குச் சொன்னதேதான் ரசனை மாறுபடும். எல்லாவற்றிலும் இருக்கும் குறும்பையும் மென்மையான அழகையும் எளிமையையும் நான் ரசிக்கிறேன்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!