ரியாத் தமிழ்சங்கம் நடத்திய (2013 ஃபிப்ரவரியில்) கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது.
அதற்கான விழா 23, டிசம்பர் 2013 இல் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் சகோதரர் ஷேக் முகம்மது எனக்கான நினைவுப் பரிசை சபையில் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
விருதுகள் .. சான்றிதழும் கேடயமும்.
////
திரு ராஜா அவர்கள் அனுப்பிய மடல்../////
அன்புள்ள கவிதாயினி.திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு,
அன்புள்ள கவிதாயினி.திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு,
வணக்கம்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கல்யாண் நினைவு
கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். இன்று இரவு
கவிதைப்போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடக்க இருக்கிறது.
கவிதைப்போட்டி மட்டுமல்லாது பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் இதர
சமூக சேவை நிகழ்வுகளால் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா தள்ளிப் போனது.
தாமதத்திற்கு மன்னிக்க. தாமதமானாலும் கவிஞர்களை ரியாத் தமிழ்ச் சங்கத்தின்
பாரதி விழாவில் கௌரவிப்பதில் பெருமையடைகிறோம்.
கவிஞர்கள் யாருமே ரியாத் நகரைச் சேர்ந்தவர்கள் இல்லை
என்பதால் பரிசு பெறும் கவிஞர்கள் சார்பாக தமிழ்ச் சங்க உறுப்பினர்களில்
ஒருவர் உங்களது நினைவுப்பரிசையும் காசோலையும் நிகழ்ச்சியில்
பெற்றுக்கொள்வார்.கவிஞர்கள் குறித்த சிறு அறிமுகத்தை இந்தக் கவிதைப்
போட்டியை முன்னின்று நடத்திய திரு லக்கி ஷாஜஹானும், திரு ஃபக்ருதீன் இப்னு
ஹம்துனும் தருவார்கள்.
தங்களது நினைவுப்பரிசை தங்களது முகவரிக்கும்,
பரிசுத்தொகையை தங்களது வங்கிக்கணக்கிற்கும் அனுப்ப ரியாத் தமிழ்ச் சங்கம்
முடிவு செய்துள்ளது. ஆதலால், தங்களது முகவரி மற்றும் வங்கிக்கணக்கு
விபரங்களை விரைவாக அனுப்புமாறு ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாகக்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்
என்றும் அன்புடன்,
ராஜா
செயலாளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்////
இதன்படி பரிசுத்தொகையும் விருதும், கேடயமும் சான்றிதழும் அனுப்பி வைப்பதாக சகோ ஷேக் முகம்மது மடல் அனுப்பி உள்ளார்.
////அன்பின் கவிஞர் திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு
இத்துடன் கவிதைப்போட்டியில் நீங்கள் பங்கு கொண்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கிறது.விரைவி ல் கேடயமும்,பரிசுத்தொகையும் உங்கள் வீடு தேடி வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்த்துகள்.
எங்கள் தமிழ்ச்சங்க உயர்மட்டக் குழு செயலர் திரு.ராஜா
அவர்களிடமிருந்து உங்கள் வங்கிகணக்கு/பணம் பெறும் முறை பற்றிய மடல்
பெற்றிருந்து இன்னும் பதில் அனுப்பாவிடில் உடன் பதில் அனுப்பவும்.நன்றி
*
ஷேக் முஹமது ஷாஜஹான்
ஒருங்கிணைப்பாளர்
கலை இலக்கியக் குழு
ரியாத் தமிழ்ச்சங்கம்.///
சீரிய முயற்சி எடுத்துத் தங்களின் இக்கட்டான சூழ்நிலையிலும், பணிச்சுமையிலும் கூட இந்த விழாவைச் சிறப்புற நடத்திப் பரிசுகள் வழங்கி இருப்பதற்கு இவர்கள் இருவருக்கும் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும் -- (ஹைதர் அலி, ராஜா, ஜோஸ் அலக்ஸாண்டர், ஷேக் முகம்மது ஷாஜகான் ) வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
என்னுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 2, 000 பரிசுத் தொகை டெப்பாசிட் செய்து எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பி வைத்துள்ளார் கவிஞர் பக்ருத்தீன். அவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். மேலும் எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பித் தந்திருக்கிறார். அதற்கும் நன்றிகள்.
டிஸ்கி:-
தூத்துக்குடி ராமையா ஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் என்னுடைய அன்ன பட்சி கிடைக்கிறது. தகவல் தெரிவித்துப் புகைப்படம் அனுப்பிய சகோதரர் சரண்குமாருக்கு நன்றி
என்னுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 2, 000 பரிசுத் தொகை டெப்பாசிட் செய்து எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பி வைத்துள்ளார் கவிஞர் பக்ருத்தீன். அவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள். மேலும் எனக்கான விருதையும் கூரியரில் அனுப்பித் தந்திருக்கிறார். அதற்கும் நன்றிகள்.
டிஸ்கி:-
தூத்துக்குடி ராமையா ஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் என்னுடைய அன்ன பட்சி கிடைக்கிறது. தகவல் தெரிவித்துப் புகைப்படம் அனுப்பிய சகோதரர் சரண்குமாருக்கு நன்றி
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி தனபால் சகோ
பதிலளிநீக்குநன்றி ஹமீத்