எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
110 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
110 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2019

போக்கும் ப்ளாக்கும்

2181. எனது இருபதாவது நூல்,”கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே. :)

கம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்: KAMBAN VIZHAVUM KAMBAN PATRIYA NOOLGALUM (Tamil Edition)

https://www.amazon.in/dp/B07R5CWWRH

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///ச. கைலாசபதியின் அகலிகையும் கற்பு நெறியும் பல்கோணப்பார்வை. பழைய காப்பியக் கதைகளை நவீனத்துவமாக எழுதிப்பார்ப்பது குறித்து எடுத்துக் காட்டுக்களோடு கூறியுள்ளார். கோவிந்தன் எனப்படும் விந்தன் ( பாலும் பாவையும் – நவீன அகலிகை கதை ) , ஜெயகாந்தன் ( அக்கினிப் பிரவேசம் ) ஆகியோர் புதுமைப் பார்வையில் படைத்திருப்பதை ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் மற்றும் அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் ஆகியோரின் எழுத்துக்களோடு ஒப்புமைப் படுத்துகிறார்.
கருத்து முதல் வாதம், வர்க்க சமுதாயம் தோன்றிய பின் பெண்ணினம் பெற்ற இடம். , ஆணின் யதேச்சதிகாரம், தாயுரிமையை ஒழித்துத் தந்தை உரிமையைப் புகுத்தியது, ஆண் தலைமை, அரசியல் அதிகாரம், மத அதிகாரம், வம்ச அதிகாரம், ஆண் அதிகாரம் ஆகியவற்றைச் சாடுவதோடு சாப விமோசனம் பெற பெண்ணுக்குத் தொழிலோ உத்யோகமோதான் முடிவு என்னும் கருத்தை முன் மொழிகிறார். ///

2182. சீச்சீ ஜீனியா அதெல்லாம் வெஷம் மாதிரி புளிக்கும். ஃப்ரெஷா காச்சுன பசும்பால்ல ஃப்ரெஷா எடுத்த ஃபில்டர் டிக்காக்‌ஷன் மட்டும் போட்டு சாப்பிட்டு பழகுங்க.
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இந்த ஜீனி எல்லாம் அந்நிய நாட்டு இறக்குமதி சதி :) ;) :p

வெள்ளி, 9 மே, 2014

தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.

101. விழிகளின் அருகினில் வானம்.

ப்ரசன்னாவும் நவ்யா நாயரும் நடித்த பாடல்காட்சி. மிக அருமையான பாடல் வரிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். ஒரு நட்பு மெல்லிய காதலாக உருவெடுக்கும் தருணத்தை உறுத்தாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. இருதயமே துடிக்கிறதா. துடிப்பதுபோல் நடிக்கிறதா என்ற இடம் அழகு.

102. சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா.
நாகார்ஜுனும் சுஷ்மிதா சென்னும் ஆடும் அழகுப் பாடல் காட்சி. நதிக்கரைஓரம் செட்டிங்ஸும் இருவரின் உடையும் அழகு. வல்லினமும் மெல்லினமும் சேர்ந்ததுபோன்ற ஒரு தன்மை பாடல் முழுதும் எழில் சேர்க்கும்.

103. மழையே மழையே.
எஸ்பி பி யின் சந்தனக் குரலில் அருமையான மழைப் பாடல். எனக்குப் பிடித்த நடிகை சரிதா. பிரதாப் போத்தனுடன் மழையில் நனைந்து பாடும் பாடல். கூந்தல் மலரில் தேனைக் கொடுத்து காத்துக்கிடந்தேன் கால்கள் தடுக்க இதயம் துடிக்க..-- கூந்தல் மலர் என்ற வார்த்தைப் பிரயோகம் பிடிக்கும். :)

Related Posts Plugin for WordPress, Blogger...