எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 ஏப்ரல், 2013

சுசீலாம்மாவுக்கு தினமணியின் “அமரர் சுஜாதா விருது”

அன்பின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள். !!!

/////தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்


புது தில்லி,
First Published : 02 April 2013 12:59 AM IST
தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது',பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.

































என் அன்பின் சுசீலாம்மாவுக்கு அமரர் சுஜாதா விருதை தினமணி வழங்கும் செய்தி கேட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் மற்றும் பெருமிதமாய் இருக்கிறதும்மா. தமிழுக்குச் சேவை செய்துவரும் தினமணியின் விருது வாங்குவதில் பெருமகிழ்ச்சி. அதையும் தலைநகர் தில்லியில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் வாங்குவது பெரும் சிறப்பு. இன்று தலை நகரத்தில் தமிழுக்குக் கிடைத்த பெருமை என்றும் சொல்லலாம்

சிறுகதை இலக்கியத்துக்கு மிகப்பெரும் தொண்டாற்றியுள்ள சுசீலாம்மா அவர்களுக்கு விருது வழங்கும் தினமணிக்குப் பாராட்டுக்கள்.


விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் மற்றையோருக்கும் வாழ்த்துக்கள்.

இவர்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு  நாம் பெரும்பேறு பெற்றோம். வாழ்க தமிழ்,! வளர்க தினமணியின் சேவை.!!



8 கருத்துகள்:

  1. வலைப்பதிவாளர் உலகில் சுசீலா அம்மா ஒரு நட்சத்திரம்.
    அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. சுசிலா அம்மா உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறுகதை இலக்கியத்துக்கு மிகப்பெரும் தொண்டாற்றியுள்ள சுசீலாம்மா அவர்களுக்கு விருது வழங்கும் தினமணிக்குப் பாராட்டுக்கள்.


    விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் மற்றையோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சுசீலாம்மாவுக்கு அமரர் சுஜாதா விருதை தினமணி வழங்கும் செய்தி கேட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது//

    விருதுக்கு தகுதியானவர். வாழ்த்துக்கள்..

    பேராசிரியர் சுசீலா அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சுசிலாம்மாவுக்கும் விருது பெறும் மற்றவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சுப்பு சார்

    நன்றி குமார்

    நன்றி ராஜி

    நன்றி கோமதி

    நன்றி தனபால்

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...