செவ்வாய், 30 ஏப்ரல், 2013

விருதுகள்.

சென்னை சாஸ்த்ரி பவனில் 2011 மகளிர் தினத்தன்று சிறப்புப் பேச்சாளராகப் பேச அழைத்திருந்தார்கள். என்னுடன் சிறப்பு விருந்தினராக டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது எனக்கு டாக்டர் கமலா செல்வராஜ் பொன்னாடை போர்த்தி செண்ட்ரல் கவர்ன்மெண் விமன்ஸ் எம்ப்ளாயீஸ்வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக விமன் எம்பவர்மெண்ட் அவார்டு ( PATHWAY TO DECENT WORK FOR WOMEN -- BY DFP -- DIRECTORATE OF FIELD OF PUBLICITY ) என்ற இந்த நினைவுப் பரிசினைத் தந்தார்கள்.  நன்றி சாஸ்த்ரி பவன் பெண் ஊழியர்கள் நலச்சங்கம் மற்றும் தலித் பெண்கள் நலச்சங்கம்.2012 மகளிர் தினத்திலும் (CGWEWA) FOR RECOGNITION OF THE DISTINGUISHED SERVICE என்ற அவார்டை  அடையார் கான்சர் இன்ஸ்டிட்யூட் சேர்மன் திருமதி சாந்தாம்மா கையில் வாங்கினேன். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களை சாந்தாம்மா பவர் பாயிண்ட் ப்ரசண்டேஷன்ஸ் மூலம் விளக்கினார்கள். நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. பெருமைமிகு விருதினைப் பெருமைமிகு பெண்மணியின் மூலம் கொடுத்தற்கு நன்றிகள் சாஸ்த்ரிபவன் பெண்கள் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவி மணிமேகலை, செயலாளர் ஸ்ரீ குமாரி, உபதலைவர் ப்ரபாவதி,பொருளாளர் புஷ்பாதேவி ஆகியோருக்கு.


ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தால் வழங்கப்பட்ட சீர்மிகும் விருது இது. பதினான்கு ஆண்பதிவர்களோடு பதினைந்தாவதாக ஒரே பெண்பதிவராக என்னைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி இருக்கிறார்கள் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தார். மிக சந்தோஷமாகவும் பெருமையாகவும் உணர்ந்தேன். குடும்ப விழா போன்று அன்யோன்யத்துடனும்,  திட்டமிடப்பட்ட விழாவாய் கோர்வையுடனும், நிகழ்ந்த பெருவிழா இது. இதில் பரிசுபெற்ற அனைவருமே என்னை விட  அதிகம் சாதித்தவர்கள். ஒரு பெண்ணாக என்னையும் இவர்களோடு விருதளித்தமைக்கு மிக்க நன்றிகள்  ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கு..


என்ன இருந்தாலும் நம்ம மக்கள் கொடுத்த விருதல்லவா. என் பொக்கிஷமாய் இருக்கிறது இது. நன்றி மக்காஸ். வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!


7 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்...

தனிமரம் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்...

ஸாதிகா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட்

நன்றி தனபால்

நன்றி தனிமரம்

நன்றி ஸாதிகா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Manavalan A. சொன்னது…

Manamarntha Vazhthukkal Thenammai. Pirkalathilum ninaithathai sathikka mudiyum enpatharku Thenammai oru eduthukattu.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...