பணம்., பேனா .,வண்டிச் சாவி
என் சட்டைப் பையில்
இருப்பதெல்லாம் வீசியெறிந்து
இன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே
உன் இதயத்தையா..
அதுதான் உன் ரூபத்திலிருக்கிறதே..
******************************
என் கைகளில் பூத்த
பூவைப் போலிருக்கிறாய் நீ
இதழ் இதழாய் சிதறுகிறது
உன் புன்னகை..
****************************** **************
முத்துக்களை போல
உருள்கிறது உன் புன்னகை...
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்..
****************************** ********
கொஞ்சம் மெள்ளமாக சிரி
என் மன அணையில் தேக்க தேக்க
வழிந்து கொண்டேயிருக்கிறது
உன் அலைச் சிரிப்பு
****************************** *************
எத்தனை யுக தவம்
என்னுள்ளே வந்தாய்
பிரபஞ்சமே உட்புக..
உலகமே மறந்தேன்..
****************************** ***************
உன் சிரிப்புச் சுனாமியில்
இன்பமாய் மூழ்கிக்
கொண்டு நான்..
****************************** *************
தினம் செல்லும்
கோயில் ப்ரகாரங்கள்
உன் மழலை ஸ்லோகத்தை
எதிரொலித்துக் கிடக்கின்றன..
****************************** ****************
கூடுகளில் உணவுக்காய்
வாய்திறக்கும் குருவிகளைப் போல
தூங்குகிறாள் மகள்..
வாயில் அமிர்தம் வழிந்த வாசனையோடு
****************************** ************
சண்டைக்கார சம்பந்திகளை
ஙே என ஆக்குகிறது
ங்கா என்ற மழலைச் சொல்
****************************** ***************
ரிப்பனால் பூக்கள் முடித்து
சீருடையில் செல்லும் மகள் ..
தாங்கள் அமராத கேசம் நோக்கி
சோகத்தில் தோட்டப் பூக்கள்.
****************************** ***************
பசியெடுக்க இஞ்சிச் சாறு..
பசித்து நீ உண்டாலும்
குடிக்கும் போது அழுதது
காதெல்லாம் கலங்க வைத்து.
****************************** **********
தாத்தா பாட்டி அப்பா அண்ணன்
யாரிடம் இருந்தாலும்
அடிக்கொருதரம் தேடும்
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்..
****************************** ***********
உனக்குப் பிடிக்காததையும்
உடலுக்கு பிடிக்கும் என சொன்னால்
உணர்ந்து உண்கிறாய்..
****************************** ********
என் பாசப் பங்கீட்டில்
எத்தனை எதிரி உனக்கு
முதலில் உன் அப்பா
இப்போது குட்டித்தம்பி..
கோபத்தில் நீ
கதவு பின்னே
ஒளியும் போது
உன்னை அதிகமாய்
தேடுகிறது.
****************************** ****
உணவு உண்ண உனக்கு
நிலா தேவையில்லை..
ஏரோப்ளேனும் என் வண்டியும் போதும்.
டிஸ்கி:- நன்றி தாமோதர் சந்த்ரு அண்ணன். :)
என் சட்டைப் பையில்
இருப்பதெல்லாம் வீசியெறிந்து
இன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே
உன் இதயத்தையா..
அதுதான் உன் ரூபத்திலிருக்கிறதே..
******************************
என் கைகளில் பூத்த
பூவைப் போலிருக்கிறாய் நீ
இதழ் இதழாய் சிதறுகிறது
உன் புன்னகை..
******************************
முத்துக்களை போல
உருள்கிறது உன் புன்னகை...
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்..
******************************
கொஞ்சம் மெள்ளமாக சிரி
என் மன அணையில் தேக்க தேக்க
வழிந்து கொண்டேயிருக்கிறது
உன் அலைச் சிரிப்பு
******************************
எத்தனை யுக தவம்
என்னுள்ளே வந்தாய்
பிரபஞ்சமே உட்புக..
உலகமே மறந்தேன்..
******************************
உன் சிரிப்புச் சுனாமியில்
இன்பமாய் மூழ்கிக்
கொண்டு நான்..
******************************
தினம் செல்லும்
கோயில் ப்ரகாரங்கள்
உன் மழலை ஸ்லோகத்தை
எதிரொலித்துக் கிடக்கின்றன..
******************************
கூடுகளில் உணவுக்காய்
வாய்திறக்கும் குருவிகளைப் போல
தூங்குகிறாள் மகள்..
வாயில் அமிர்தம் வழிந்த வாசனையோடு
******************************
சண்டைக்கார சம்பந்திகளை
ஙே என ஆக்குகிறது
ங்கா என்ற மழலைச் சொல்
******************************
ரிப்பனால் பூக்கள் முடித்து
சீருடையில் செல்லும் மகள் ..
தாங்கள் அமராத கேசம் நோக்கி
சோகத்தில் தோட்டப் பூக்கள்.
******************************
பசியெடுக்க இஞ்சிச் சாறு..
பசித்து நீ உண்டாலும்
குடிக்கும் போது அழுதது
காதெல்லாம் கலங்க வைத்து.
******************************
தாத்தா பாட்டி அப்பா அண்ணன்
யாரிடம் இருந்தாலும்
அடிக்கொருதரம் தேடும்
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்..
******************************
உனக்குப் பிடிக்காததையும்
உடலுக்கு பிடிக்கும் என சொன்னால்
உணர்ந்து உண்கிறாய்..
******************************
என் பாசப் பங்கீட்டில்
எத்தனை எதிரி உனக்கு
முதலில் உன் அப்பா
இப்போது குட்டித்தம்பி..
கோபத்தில் நீ
கதவு பின்னே
ஒளியும் போது
உன்னை அதிகமாய்
தேடுகிறது.
******************************
உணவு உண்ண உனக்கு
நிலா தேவையில்லை..
ஏரோப்ளேனும் என் வண்டியும் போதும்.
டிஸ்கி:- நன்றி தாமோதர் சந்த்ரு அண்ணன். :)
படிப்பதா...? ரசிப்பதா...? வீட்டில் போட்டி...
பதிலளிநீக்குபாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
தாமோதர் சந்த்ரு அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல...
ஆராதனாவா? கவிதைகளா?.. எதை ரசிக்கறதுங்கற குழப்பத்தில் நான் :-))
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் சாந்தி:)!
பதிலளிநீக்குஆஹா யார் இந்த குட்டி பாப்பா,செம க்யூட்..அழகான கவிதை அதைவிட புகைப்படத்தைதான் ரசித்தேன்...
பதிலளிநீக்குpadamum!
பதிலளிநீக்குvariyum!
arumai..!
குழந்தை முகம் மிக அழகு. அதற்கு ஆபரணமாய்க் கவிதைகள் மிகமிக அழகு. வாழ்த்துகள் சகோதரி.
பதிலளிநீக்குஉங்களி்ன் ‘ங்கா’ புத்தகம் தந்த அதே மகிழ்வை, ரசனையை இங்கே கவிதைக் குழந்தைகளும், குழந்தைக் கவிதையும் தந்துவிட்டன அக்கா!
பதிலளிநீக்குகவிதைகளும் ஆராதனாவும் ஒரு சேர மகிழ்ச்சி தந்தனர். வாழ்த்துகள்....
பதிலளிநீக்குஎதை ரசிப்பதென குழப்பமாக உள்ளது....:)
பதிலளிநீக்குஇதயத்தை வருடுகிறது .... நம் அம்மாவும் இப்படித்தான் மனதுக்குள் கவிதை வடித்திருப்பளோ ????? .. மிகவும் அற்புதம் ... தொடரட்டும் ...
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி சாந்தி
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி மேனகா. அவள் தாமோதர் சந்துரு அண்ணனின் பேத்தி.:)
நன்றி சீனி
நன்றி ருக்மணி அம்மா
நன்றி கணேஷ்
நன்றி வெங்கட்நாகராஜ்
நன்றி கோவை2தில்லி
நன்றி கருப்புச்சாமி குமரவேல்