அவளும் நானும்:-
*************************
சின்னக்குழந்தையிலேயே
அவள் என் தோழி..
நான் பள்ளி செல்ல
அவள் வீட்டிலிருப்பாள்.
வந்தபின் நாள்முழுவதும்
விளையாடிக் கொண்டேயிருப்போம்.
நிலவு இரவுகளில்
என் கதைக்காய் உறங்காமல்
காத்திருப்பாள்.
நான் வளர வளர
அவள் வளரவேயில்லை..
என் திருமணத்தை
ஆசீர்வதித்தாள்..
அவளை விட்டுப்பிரிய
பிழியபிழிய அழுதேன்.
இன்று என் குழந்தைக்கும்
தோழி அந்த பார்பி..
அன்று போலவே இன்றும்
படுக்கவைத்தால் கண்மூடுகிறாள்.
அமர வைத்தால்
விழித்துக் கொள்கிறாள்..
ஏக்கமாய் இருக்கிறது.,
அவள் வளரவில்லையே
என்ற துக்கத்தைவிட
நான் வளர்ந்துவிட்டேனே
என்ற துக்கம் பெருகி..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 15 - 31, 2013 அதீதத்தில் வெளிவந்தது.
*************************
சின்னக்குழந்தையிலேயே
அவள் என் தோழி..
நான் பள்ளி செல்ல
அவள் வீட்டிலிருப்பாள்.
வந்தபின் நாள்முழுவதும்
விளையாடிக் கொண்டேயிருப்போம்.
நிலவு இரவுகளில்
என் கதைக்காய் உறங்காமல்
காத்திருப்பாள்.
நான் வளர வளர
அவள் வளரவேயில்லை..
என் திருமணத்தை
ஆசீர்வதித்தாள்..
அவளை விட்டுப்பிரிய
பிழியபிழிய அழுதேன்.
இன்று என் குழந்தைக்கும்
தோழி அந்த பார்பி..
அன்று போலவே இன்றும்
படுக்கவைத்தால் கண்மூடுகிறாள்.
அமர வைத்தால்
விழித்துக் கொள்கிறாள்..
ஏக்கமாய் இருக்கிறது.,
அவள் வளரவில்லையே
என்ற துக்கத்தைவிட
நான் வளர்ந்துவிட்டேனே
என்ற துக்கம் பெருகி..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 15 - 31, 2013 அதீதத்தில் வெளிவந்தது.
அவள் வளரவில்லையே
பதிலளிநீக்குஎன்ற துக்கத்தைவிட
நான் வளர்ந்துவிட்டேனே
///
அழகான வார்த்தைகள்
நாடி கவிதை
பால்யத்தின் இழப்பை எண்ணி ஏங்கும் வரிகளில் மீண்டும் பால்யம் துளிர்க்கிறது. பாராட்டுகள் தோழி.
பதிலளிநீக்குபள்ளிக்கூடம் போகும் என் பொண்ணு இதையே சில சமயம் சொல்வார்கள்... (சின்னக் குழந்தையாகவே இருக்கக் கூடாதா என்று....!)
பதிலளிநீக்குஇன்றைய பள்ளிப் பாடங்கள் அப்படி சொல்ல வைக்கிறது...! ...ம்...
நன்றி கவிதை நாடன்
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி
நன்றி தனபால் .. ஆம்..:)