எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2013

சுதந்திர தினத்தில் ஏவிசியில் சிறப்பு விருந்தினராக..

ஏவிசி பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தன்று உரையாற்ற அழைப்பு வந்தது.

கல்லூரியின் தாளாளர் மதிப்பிற்குரிய நண்பர் திரு சொக்கலிங்கம் செந்தில்வேல் என்னுடைய முகநூல் நண்பர். என் கதை, கவிதை, கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய கல்லூரியின் மாணாக்கருக்கு  உரையாற்ற அழைத்திருந்தார். நன்றி செந்தில்


மிக அருமையான மாணவர்கள் . அருமையான  ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி வளாகம். திரும்ப மாணவியாகிப் படிக்கவேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது.

என்னுடன் என் கணவரும் துணையாக வந்தார். என் பேச்சைக் கேட்டு முதன் முறையாகப் பாராட்டினார். நன்றி அவருக்கும்.

சுதந்திரம் என்றால் என்ன..? நாட்டின் சுதந்திரம், தனிமனித சுதந்திரம், நமது சுதந்திரத்தை வரையறுத்துக் கொள்வது பற்றிப் பகிர்ந்தேன்.  நம் நாட்டு விடுதலைக்காகத் தென்னாப்பிரிக்காவில் பாடுபட்ட மாயவரம் விடுதலைப்போராட்ட வீரர்கள் நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி மற்றும் (தில்லையாடி) வள்ளியம்மை முனுசாமி முதலியார் பற்றியும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் குழந்தையாயிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட ருக்கு அம்மா பற்றியும், பெற்ற சுதந்திரத்தைப் போர் முனையில் காக்கும் வீரர்கள் பற்றியும் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து அவர்களுக்குத் தொண்டு செய்யும் பெண் செவிலியர் ப்ரிகேடியர் துர்க்காபாய், ப்ரிகேடியர் முத்துலெட்சுமி  பற்றியும் பகிர்ந்தேன்.

மாணவர்கள் தங்கள் சுதந்திரத்தை வரையறுத்துக் கொள்வது, இணையத்தின் பயன்பாடு, இன்னும் சமூக நலனுக்கான கண்டுபிடிப்புக்கள், ( ஜட்ரோப்பா கார்க்கஸிலிருந்து பெட்ரோல், ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் உற்பத்தி, விண்ட் மில், சோலார் எனர்ஜியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்த நிறையக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டேன். ). பெண் குழந்தைகள் இணையப் பயன்பாட்டை எப்படித் தமது வெற்றிக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் வேண்டாத விஷயங்களைத் தவிர்ப்பது பற்றியும் அறிவுறுத்தினேன்.

மிக நல்ல விஷயங்களைப் பகிர முடிந்தது. நன்றி ஏவிசி கல்லூரி மாணாக்கருக்கும். !


3 கருத்துகள்:

  1. பல வரலாற்றினை பேசின ஒலித் தொகுப்பையும் இணைக்கலாமே சகோதரி...!

    தொகுத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால். தாங்கள் கேட்டபடி இந்த வாரம் இணைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...