கிராமத் திருவிழா..
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..
புழுதி
உல்லாசமாய்...
விசிலடித்துப் பறக்கும்..
மந்தைகள்
மஞ்சள் பூசிக்குளித்துக்
குங்குமமிட்டு
மங்கலப் பெண்களாக வரும்..
பூசாரி .,சாமிக்கு
நெற்றியில் குங்குமம் அப்பி
அனைவரையும் பயமுறுத்துவான்..
கிளிகள்
நெல்மணிக்காகக்
காகிதம் பொறுக்கும்..
ராட்டினங்கள்
பூமிக்குத் தலையைச்
சுற்றவைக்கும்..
ராக்காயி
ஈக்களுக்கு
இலவசமாய்
இனிப்புத் தருவாள்...
முனியப்பன்
எச்சிதொட்டுப்
பிள்ளைகளுக்கு
கடிகாரம்., செயின்
(ஜவ்வு மிட்டாயில்)
பண்ணிப்போடுவான்..
வருங்கால நம்பிக்கை
நாயகர்கள்..
அப்பன்களின் தோளிலேறி
சாமி பார்ப்பார்கள்..
மங்கிப் போன
தீவட்டியின் முன்
கரகக்காரிகள்
உடலை நெளிப்பார்கள்..
பிள்ளைகளையும்
பொருட்களையும்
மனிதர்கள்
காணாமல் அடிப்பார்கள்..
பூசாரி
அரிவாளையும்
பலிக்கல்லையும்
இரத்தத்தால்
குளிப்பாட்டுவான்..
மனிதர்கள்
மாமிசம் உண்ண
வேண்டியே
கிடா வளர்த்துத்
திருவிழாவை வரவேற்பார்கள்..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 10,1985 இல் வெளியானது.
கிராமத்திருவிழாவை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் தேனம்மை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கல்கியில் வந்தமைக்கு.
28 வ்ருட்ங்களுக்கும் முன் ஓர் திருவிழாவுக்கு அழைத்துச்சென்று, அனைத்தையும் அழகாகக் காட்டிய உணர்வு ஏற்பட்டது.
பதிலளிநீக்குஇப்போதும் அப்படியே தான் என்றாலும் ஒருசில பழைய விஷயங்கள் மறைந்து போய் புதிய நவீன விஷயங்கள் தோன்றியுள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றிகள்.
நடந்த உண்மைகள் வரிகளில்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
உண்மைகள் வரிகள். அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி தனபால்
நன்றி ஜெஷ்வா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!