கும்பகோணம் காசிராமன் தெரு, கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த 94 இளம்தளிர்கள் கருகிப் போயின. அந்தத் தளிர்களின் நினைவாக அவர்கள் பெற்றோர் அந்தப் பள்ளியின் வெளிப்புறத்தில் குழந்தைகளின் புகைப்படங்களோடு கூடிய நினைவஞ்சலிப் பலகையை 2011 ஆம் ஆண்டு வைத்துள்ளனர். பார்க்கும்போதே நெஞ்சம் பதைக்கின்றது.
மதிய உணவு சமைக்கும்போது ஏற்பட்ட தீவிபத்தில் பள்ளியின் கூரையும் பற்றியெரிய தீயினாலும், அத்தனை பேரும் சிறிய படிக்கட்டுகளில் இறங்க வழியற்றதாலும் 94 குழந்தைகள் இறந்தனர். இந்தத் துக்கத்தைத் துடைக்க இயலாமல் வருந்தும் மக்களின் துயரில் பங்கெடுத்து கும்பகோணம் நகராட்சியும் பூங்கா ஒன்றை நிறுவியுள்ளது.
///மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தின் 14- வது அகில இந்திய மாநாட்டு செப் - 2 இலிருந்து 7 வரை நிகழ இருக்கிறது. அதற்கு கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக ஜோதி பயணம் ( 2.செப்,2012) புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. கோ வீரையன் ஜோதியைக் கொடுத்துப் பயணத்தைத் தொடங்கி வைக்க பயணக் குழுத்தலைவர் கரிகாலன் பெற்றுக்கொண்டார்.//// தினத்தந்தியின் செய்தி இது.
ஹும்.. எத்தனை எத்தனை கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளோ இளம் ஜோதியாக மரித்தது எவ்வளவு துயரம் கொடுத்ததோ அவ்வளவு துயரம் நிலவுகிறது இந்தப் பள்ளியின் வாயிலில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போதும், இந்தப் பூங்காவின் பக்கம் உலவ நேரும்போதும், இந்த ஜோதிப் பயணத்தைக் கேள்வியுறும்போதும்.
இது எல்லாம் நம் ஆற்றாமைக்காக செய்வது. என்ன செய்து என்ன .. எத்தனை புத்திக் கொள்முதல் வந்தும் இன்னும் பள்ளிகளின் பிழையால் இறக்கும் பிள்ளைகள் ( பத்மா சேஷாத்ரி -- நீச்சல் குளத்தில் இறந்த பையன்)பற்றிக் கேள்வியுறுகிறோம். என்று தீரும் தமிழகத்தைப் பிடித்த இந்த சாபம். ?

நன்றி வலைஞன்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!