வியாழன், 27 செப்டம்பர், 2012

சகிப்பு

கர்ண குண்டலங்களைப் போல
கனமாக இருந்தாலும்
கழட்டி வைத்துவிட
முடிவதில்லை அவைகளை.

அறுத்தெறிந்தாளாம்
மறத்தமிழச்சி
பால்குடித்தவன்
வீரனில்லை என்பதால்.


வீரன் கை வைத்தாலும்
வெட்டி எறிய முடிவதில்லை
மார்பகங்களையும் கைகளையும்
நாய்கள் தின்னும் பிணமானதால்.

கசியும் வியர்வையூடான
களைப்பான பயணத்திலும்
எதிர்கொள்ள நேர்கிறது
கச்சை கொத்தும் கண்களை.

எதிர்பார்ப்புகளோடு
கொத்தும் கண்கள்
சில பயணிப்பவருடையதாகவோ
பழகிய சிநேகிதனுடையாகதாவோ

பார்க்காதது போல கடந்து
செல்வது தவிர வேறேதும்
எதிர்ப்புக்காட்ட முடிவதில்லை
பொய்மைச் சகிப்பால்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 28.ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது.

7 கருத்துகள் :

பால கணேஷ் சொன்னது…

நிறைய ஆண்களின் கண்கள் கள்ளப் பார்வை கொண்டதாகவே தான் இருக்கிறது தேனக்கா. பெண்மையின் குமுறலை வீரியமிக்க வரிகளால் பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அருமையான கவிதை..பெண்களின் உள்ளக்குமுறலை அருமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

கோவை மு சரளா சொன்னது…

இதைவிடவும்
கடினமாகவும்
மென்மையாகவும்
எப்படி சொல்லிவிட் முடியும்

இயலாமையில்
வெளிப்படும் வார்த்தை
ரணமிக்கது
அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள் சகோ...

Sasi Kala சொன்னது…

நமக்கான ஆதங்கம் தங்கள் வரிகளில் கண்டேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி சரளா

நன்றி தனபால்

நன்றி சசிகலா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...