கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்..
கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை
அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்
உப்புப்படிந்த
காற்றோடு கலந்து
அப்பிக் கிடக்கிறது
அலர்ந்த கூச்சல்கள்
ஒற்றையாளாய்
சிப்பி பொறுக்கியபோது
ஒவ்வொருவர் காலடித்தடமும்
கையில் மிருது ரேகையுடன்.
நீலவானம் சேமித்துக்
கொண்டிருக்கிறது
ஒவ்வொருவர் தேடல்களையும்
மூழ்கியவர்கள் வரும்போது கூற.
டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளிவந்தது.
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்..
கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை
அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்
உப்புப்படிந்த
காற்றோடு கலந்து
அப்பிக் கிடக்கிறது
அலர்ந்த கூச்சல்கள்
ஒற்றையாளாய்
சிப்பி பொறுக்கியபோது
ஒவ்வொருவர் காலடித்தடமும்
கையில் மிருது ரேகையுடன்.
நீலவானம் சேமித்துக்
கொண்டிருக்கிறது
ஒவ்வொருவர் தேடல்களையும்
மூழ்கியவர்கள் வரும்போது கூற.
டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளிவந்தது.
அசத்தல் தேனக்கா..
பதிலளிநீக்குமிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள்...பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
ரசிக்க வைக்கும் கவிதை...
பதிலளிநீக்குஇயற்கையுடன் நானும் இணைந்திருப்பது போன்ற மகிழ்வினை உங்கள் கவிதை வரிகள் தந்து விட்டன. சூப்பர்ப்க்கா.
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை ....உங்கள் பகிர்வுக்கு நன்றி......
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நீலவானும் கடலும் எத்தனைதடவை பார்த்தாலும் புதுவிதமாய் தோன்றும்.
பதிலளிநீக்குரசனையான கவிதை.
நன்றி சாரல்
பதிலளிநீக்குநன்றி காமெடி உலகம்
நன்றி தனபால்
நன்றி கணேஷ்
நன்றி பிரியா
நன்றி மாதேவி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!