எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1980 இல் விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20,000 உறுப்பினர்கள் கொண்டது. 4000 க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளது.

மூடநம்பிக்கைகளை ஒழித்திட அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரமும் செய்து வருகிறது இந்த இயக்கம். மேலும் கணக்கும் இனிக்கும், அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி காகிதக்கலை, அறிவியல் பாடங்கள், விளையாட்டுக்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.


துளிர் இல்லம் 500 அறிவியல் மன்றங்களைக் கொண்டது. ஜந்தர் மந்தர் என்ற ஆங்கில வினாடி வினாவையும் நடத்துகிறார்கள். விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்ட குழந்தைகளை அறிவியல் ஆய்வுகள் செய்ய ஊக்குவித்து மாவட்ட மாநில, தேசிய அளவில் ஆண்டுதோறும் 10,000 இளம் குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கி இருக்கிறது . கடந்த 20 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.( NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS).

கல்லூரி மாணவர்களுக்காக இளைஞர் அறிவியல் திருவிழாவும் விஞ்ஞானச் சிறகு மற்றும் துளிர் என்ற அறிவியல் மாத இதழை 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிடுகின்றார்கள். ஆண்டுச் சந்தா 75/- ரூபாய். விழுது மற்றும் ஜந்தர் மந்தர் என்று ஆங்கிலத்திலும் அறிவியல் இதழை நடத்தி வருகிறார்கள்.

அறிவியல் விழிப்புணர்வை தமிழகத்தில் சிறப்பாகச் செய்தமைக்காக மத்திய அரசின் விருது 1994 ஆம் ஆண்டும், சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பிரசாரத்தை சிறப்பாகச் செய்தமைக்காக தமிழக அரசின் அண்ணா விருதும் வழங்கப்பட்டதாம். 150 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை தமிழில் வெளியிட்டு இருக்கிறது இந்த இயக்கம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராகி அறிவியலால் ஒன்றிணைவோம்.

இதன் முகவரி.

TAMILNADU SCIENCE FORUM ( TNSF)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
தென்சென்னை மாவட்டம்,
245, அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்,
சென்னை - 600 086.

தொடர்புக்கு - 28113630/9444247658/9750547470/9444453588/9941160768

மின் அஞ்சல்: tnsf_chennai@yahoo.co.in, chennaitnsf@gmail.com.

டிஸ்கி:- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்காக என்னுடைய "சாதனை அரசிகள்" புத்தகத்தின் 25 பிரதிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சென்னைப் பகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் (அச்சிட்ட அடிப்படை விலையில்) வாங்கிச் சென்றார்.

நன்றி உதயன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

8 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு அக்கா.
    உங்கள் புத்தகங்கள் அவர்கள் வாங்கியதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. ஸலாம் சகோ.தேனம்மை லக்ஷ்மனன், நல்லதொரு பகிர்வு. புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  3. நன்றி புத்தகப் பிரியன்

    நன்றி குமார்

    நன்றி முஹம்மத் ஆஷிக்

    நன்றி வெங்கட் நாகராஜ்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...