எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

மஞ்சளுக்கு மகிமை பெற்ற ஈரோடு அதிக புத்தக வாசிப்பாளர்களையும் உடையது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட்3ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இது 8ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.. ஈரோடு வாசிப்பு இயக்கம் 2 ஆண்டு காலமாக இயங்குகிறது..


வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெறும் இதற்கு நுழைவுக் கட்டணமில்லை.. தேசிய அளவிலான புத்தகக் கண்காட்சி இது. 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறுவப்பட இருக்கின்றன. ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் நாள் டி என் பி எஸ் சி தலைவர் ஆர். நட்ராஜ் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.

ஓட்டல் ஆக்ஸ்ஃபோர்ட் அரங்கில் தினம் 10 மணிக்கு புத்தக நிறுவனங்கள் சார்பில் புதிய நூல் வெளியீட்டு விழா. கொங்கு மண்டலத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்க்கு ஆகஸ்ட் 5 இல் ( ஜூலை 29 அன்று யுஆர்சி பழனியம்மாள் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது) சிந்தனை அரங்க மேடையில் பரிசு வழங்கப்படும். சுமார் 5000 முதல் 6000 வரை பள்ளி மாணவர்களை ஒரே இடத்தில் அமர்த்தி ஓவியப் போட்டி நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தினசரி மாலை 6 மணியளவில் பல்வேறு துறையிலும் உள்ள பிரபலங்கள் சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள். இறுதியில் 14 ஆம் தேதி சி பி ஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் விழா நிறைவு செய்து உரையாற்றுகிறார்.ஆகஸ்ட் 8 அன்று மிக மூத்த எழுத்தாளர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள். சமுதாயத்திற்கு நல்ல செய்திகளைப் படம் எடுத்து அளிக்கும் இளம் திரைப்பட இயக்குநர்கள் 9 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

ஸ்பெஷலாக இளம் வயதிலிருந்தே கல்வி சேவையை அளித்துவரும் பாபர் அலி கௌரவிக்கப்பட இருக்கிறார். ஈரோடு சுவாசிக்கிறது என்னும் டீ சர்ட் அணிந்து 10 000 பேர் கலந்து கொள்ளும் மாபெரும் மாரத்தான் நடக்க இருக்கிறது. இதை எல்லாம் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நிகழ்த்துகிறது. இதை மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்திருக்கிறார்.

மிகச் சிறப்பான விஷயம் என்னன்னா  ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று திரு ராம் தலைமையேற்க திரு பவா செல்லத்துரை அவர்களின் “ எல்லா நாளும் கார்த்திகை “ என்ற புத்தக அமர்வு ( விமர்சனம்) நிகழ இருக்கிறது.

ஈரோட்டில் பாரதி புத்தகாலயம் வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியதிலும் அனைத்து புத்தகங்களையும் வருவித்துத் தருவதிலும் முன்னணி வகிக்கிறது. வக்கீல் கிருஷ்ணன், விஜயராகவன் மற்றும் இன்னும் பலரும் இந்த புக் ஃபேருக்கும், வாசிப்பு இயக்கத்துக்கும் உதவி வருவதாகவும் , செயல்படுவதாகவும் அண்ணன் சொன்னார். திரு டி வி எஸ் விஸ்வம் அவர்களும் தன்னுடைய பண்ணை வீட்டில் இந்த புத்தக அமர்வுக்காகவும். வெளியீட்டுக்காகவும் வருபவர்களைத் தங்க இடம் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

புத்தகம் வெளியிடுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் செய்தி இது. மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டி , அறவுணர்ச்சியைப் பெருகச் செய்வது முறையான புத்தக வாசிப்பே. வன்முறையற்ற சமுதாயத்தையும், வருங்கால இந்தியத் தூண்களையும் நல்லரசாக இந்தியாவையும் உருவாக்கும் இந்தப் பணி சிறக்கட்டும்.

நன்றி சந்துரு அண்ணன் மற்றும் tutyonline. ( மக்காஸ் அப்படியே நம்ம KOPS INTERNATIONAL க்கும் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்து சொல்லுங்க.)

மேலும் தகவலுக்கு http://www.tutyonline.net/view/32_35403/20120728181056.html


12 கருத்துகள்:

  1. நிறைய தகவல்களுடன் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. ( கோவையைச் சேர்ந்த கோணங்கள் கிருஷ்ணன் என்பவரும் கிட்டத்தட்ட தன்னிடம் உள்ள 1000 உலக சினிமாக்களை பொதுமக்களுக்கு காட்ட விரும்பி சந்துரு அண்ணனை அணுகி இருக்கிறார். எனவே உலக சினிமா ஒவ்வொரு மாதத்திலும் 3 வது சனிக்கிழமை மாலை இலவசமாகத் திரையிடப்பட இருக்கிறது.) இது பொதுத் தகவல்.

    பதிலளிநீக்கு
  3. புத்தக சந்தைப்பற்றிய நல்ல தகவல்கள் பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  5. Chandru & Viswam are doing great job by encouraging bloggers and writers. I visited Kobs Restaurant and they have all type of food and it taste good.

    பதிலளிநீக்கு
  6. Chandru & Viswam are doing great job by encouraging bloggers and writers. I visited Kobs Restaurant and they have all type of food and it taste good.

    பதிலளிநீக்கு
  7. தோழர் ஸடாலின் கணசேகரன் அவர்களின் பெரு முயற்சியால் சிறப்பாக நடைபெறும் புத்தக திருவிழா குறித்த பதிவு அருமை.நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  8. நன்றி கவி அழகன்

    நன்றி அமரபாரதி சார்

    நன்றி வவ்வால்

    நன்றி தனபால்

    நன்றி சந்தோஷி.. உண்மை.:)

    நன்றி பாலா. விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. தகவல்களுக்கு மிக்க நன்றிகள் !!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...