எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கதவுகள்



தொலைந்த என்னைத் தேடி
ஒவ்வொரு கதவாய்த்
திறந்து பார்க்கிறாய்.
எல்லாம் முடிந்தது எனத் திரும்பிச்
செல்லும் உன்னைக்
குரலற்றுப் பார்க்கிறேன்

புதன், 19 ஆகஸ்ட், 2015

சாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’ - ஒரு பார்வை.




சாந்தா தத்தின்வாழ்க்கைக் காடு

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.



115. இது ட்ரேதான். ஆனால் மரத்தில் செய்யப்பட்டு பறவையும் கிளையும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.



116.இது மணவறையில் உபயோகப்படுத்துவது. அரசாணிக்கால் நடுவது. முதல் நாள் இரவே பங்காளிகள் வந்து இதில்தான் கிலுவைக் கம்பையும் பாலைக்கம்பையும் ஊன்றி அரசிலைகளைச் சுற்றி வைப்பார்கள். அரசன் ஆணைக் கால் என்று பெயர். அரசனின் ஆணையோடு திருமணம் செய்விப்பதாக இதை வைப்பது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

Related Posts Plugin for WordPress, Blogger...