எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PANNAGAM KRISHNAMOORTHY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PANNAGAM KRISHNAMOORTHY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 மார்ச், 2017

சாட்டர்டே போஸ்ட். திருக்குறளும் எதிர்காலச் சந்ததியும் பற்றி பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி.


 மிகச் சிறப்பாக இயங்கிவரும் பண்ணாகம். காம் இணையத்தின் பிரதம ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் நமது இலக்கு என்ற பத்ரிக்கையின் முன்னாள் ஆசிரியரும் கூட.  பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அங்கத்தினரும் கூட. அவர்கள் சில நாட்களுக்குமுன் ஜெர்மனியில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை சாட்டர்டே போஸ்டாக வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

///திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும் - கட்டுரை
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
-சுபா-

திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
கிருஷ்ணமூர்த்தி,  பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர், ஜெர்மனி
வள்ளுவர் கண்ட திருக்குறள் கடைச்சங்க காலமான கி.மு. 300 க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.  திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஔவையார் துணையோடு மதுரையில்  அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.