எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாரதி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஏப்ரல், 2023

எனது ஐந்து நூல்கள் ( 20 - 24) வெளியீடு.

 எனது ஐந்து நூல்கள் நேற்று டிஸ்கவரியில் வெளியிடப்பட்டன.



கமலா சினிமாஸ் அதிபர் திரு. வி என். சிடி. வள்ளியப்பன் அவர்கள் வெளியிட "சோகி சிவா" நாவலை திரு. சோம. வள்ளியப்பன் அவர்களும்,

வியாழன், 5 ஜனவரி, 2023

எனது 21, 22 ஆவது நூல்கள் வெளியீடு.

 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (6 ஜனவரியில் இருந்து 22 ஜனவரி வரை நடைபெறுகிறது) எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.




“சாணக்கிய நீதி ( பதவுரை, பொழிப்புரையுடன்) “, “ மகாபாரதக் கதைகள்” .
இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும். 🙂
நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.

எனது 21 ஆவது நூல் " சாணக்ய நீதி (பதவுரை பொழிப்புரையுடன்) " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.




எனது 22 ஆவது நூல் " மகாபாரதக் கதைகள் " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.



சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்

திங்கள், 7 நவம்பர், 2022

ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள் - எனது இருபதாவது நூலின் முன்னுரை.

 இமயம் முதல் குமரி வரை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு தேசங்களும், சமஸ்தானங்களும்,பாளையங்களும் உள்நாட்டுக் கலகத்தாலும், அரியணைப் போட்டிகளாலும், அமைச்சரவை, இராணுவங்களின் கெடுபிடிகளாலும் கலகலத்துக் கிடந்தன.  


முகலாயர்கள், வியாபார நிமித்தமாய் வந்த போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள்,  ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பால் சுயராஜ்ஜிய தேசங்கள் தங்களுக்குள்ளே ஒன்று பட்டுப் பொது எதிரியை எதிர்த்தார்கள். .நினைவில் சுதந்திரம் பொதிந்த அவர்கள் அந்நியர்களால் அழிந்ததை விடக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலேயே அழிந்தார்கள். அப்படியும் தங்கள் உயிர் உள்ளவரை போராடி உடல், பொருள், ஆவியை  இழந்தவர்கள் அநேகம். 

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

எனது 21 ஆவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” வெளியீடு.

 ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது இருபத்தி ஒன்றாவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றது. 


ஸ்டால் நம்பர் 27 இல் கிடைக்கும். 

புதன், 6 ஜூலை, 2022

நமது செட்டிநாடு & தனவணிகன் இதழ்களில் எனது 15, 16, 17, 18, 19 வது நூல் வெளியீடுகள்.

 இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.



சனி, 19 பிப்ரவரி, 2022

சில்வர்ஃபிஷ் & பாரதி பதிப்பகத்தில் என் நூல்கள்.

இந்த வருடம் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 6, 7 இல் எனது 4 புது நூல்கள் கிடைக்கும். 





இந்த  வருடம் புதிதாய் இரு பெண் பதிப்பாளர்கள் பற்றியும் அவர்கள் வெளியிடும் என் நூல்கள் பற்றியும் இங்கே அறிமுகப்படுத்துவதில் களிபேறுவகை கொள்கிறேன்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

என்னுடைய பத்தொன்பதாவது நூல் நீலகேசி.

 என்னுடைய பத்தொன்பதாவது நூல் நீலகேசி. இதையும் புதினமாக எழுதி உள்ளேன். நான் மிகவும் ரசித்து எழுதிய நூல். பிரபஞ்சத் தத்துவங்களை, பொருண்மைகளை எளிமையாக விளக்கும் நூல். 


புதன், 16 பிப்ரவரி, 2022

என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமார காவியம்

 என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமாரகாவியம். இதைப் பாரதி பதிப்பகத்துக்காகப் புதினமாக எழுதி உள்ளேன். மிகச் சுவாரசியமான நூல்.