இந்த வருடம் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 6, 7 இல் எனது 4 புது நூல்கள் கிடைக்கும்.
இந்த வருடம் புதிதாய் இரு பெண் பதிப்பாளர்கள் பற்றியும் அவர்கள் வெளியிடும் என் நூல்கள் பற்றியும் இங்கே அறிமுகப்படுத்துவதில் களிபேறுவகை கொள்கிறேன்.
சில்வர்ஃபிஷ் (- த ரைட்டர்ஸ் கான்ஃப்ளூயன்ஸ்) பதிப்பகத்தின் ஸ்தாபகர், சென்ற புத்தகத் திருவிழாவில் புத்தக ஸ்டால் நடத்தியவர், 40+ மாற்றம், முகமறிக ஆகிய நூல்களுக்குச் சொந்தக்காரர் திருமதி. வள்ளி அருணாச்சலம்.
இவர் இந்த வருடம் என்னுடைய நன்னெறிக் கதைகள் என்னும் இரு நூல்கள், பாரம்பரியம், நகரத்தார் கோலங்கள், மொழியோடு விளையாடு, பிடி கண்டுபிடி, DECODE YOUR DREAM CARRIER, ENGLISH GRAMMER ஆகிய எட்டு புதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுகிறார்.
இன்னொருவர் மிகச்சிறு பெண். 70 ஆண்டுப் பாரம்பரியப் பெருமைமிக்க பாரதி பதிப்பகத்தினை நிறுவியவர்களுள் ஒருவரான (அமரர்). திரு. இராஜேந்திரன் அவர்களின் புதல்வி செல்வி நித்யா மெய்யம்மை.
ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றுக்கு உரை எழுதி உள்ளேன்.
ஐஞ்சிறுங்காப்பியங்களில் நீலகேசி, நாககுமார காவியம் இரண்டையும் புதினமாக எழுதி உள்ளேன்.
இம்மூன்று நூல்களும் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.
மேலும் நித்யா இன்னும் பல நூல்களையும் மிகுந்த பொருட்செலவில் புதுப்பித்து வெளியிடுகிறார்.
இவர்கள் இருவருமே மென்பொறியியல் வல்லுநர்கள். புதிய தலைமுறையினரை வாசிப்பின் வழி கொண்டு வர இவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை.
புத்தகத் திருவிழாவில் இவர்கள் பலராலும் அறியப்பட்டுப் பெருமையுறுவார்கள் என்பது நிச்சயம்.
இவர்களும் நானும் இன்னும் சிறப்பாகச் செயல்பட உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் நிச்சயம் தேவை.
நூல்கள் பற்றியும், விலை விபரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவோர் தனித்தகவலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி அனைவருக்கும்.
உங்களின் எழுத்துப்பணி போற்றத்தக்கது. மாறுபட்ட பொருண்மைகளில் அமைந்த நூல்களை எழுதும் உங்களின் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!