எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 1

 பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும் படகுகளில் ஃபிரான்ஸ் சென்றிருந்தபோது பயணம் செய்தோம். சுமார் 200 பேர் டெக்கில் அமர்ந்து ஸீன் நதியின் மேல்  பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. லே மிஸரபிள்ஸ் என்ற விக்டர் ஹியூகோவின் நாவல் எல்லாம் ஞாபகம் வந்தது. 


அங்கே இருக்கும் சுதந்திர தேவி சிலைதான் முதலும் மூலமுமான சிலை. அமெரிக்காவில் இருப்பது அதன் பிந்தான் நிர்மாணிக்கப்பட்டது என்றார்கள். 
என்ன ஒரு ஏகாந்தம் பாருங்கள் . அனைவரும் வெய்யில் காய்கிறார்கள். 
நாங்களும் வெய்யில் காய்ந்தோம்.

விதம் விதமான பாலங்கள் அதனோடு கூடிய சிலைகள் இங்கே ஸ்பெஷல். 
வழி நடையில் வான்கூவர் மியூசியம், லூவர் மியூசியம் எல்லாம் கடந்து செல்கிறோம் என்று சொன்னார்கள். 

தீக்கிரையான மிகப் பெரும் சர்ச் ஒன்று பல்லாண்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்கள். 

நம்ம இந்தியர்கள்தான். உலகெங்கிலும் இருந்து வந்திருந்தார்கள். எதிரே வரும் ஜோடி ஆந்திரா. 

இந்த மியூசியங்களை எல்லாம் பார்க்க நாள் கணக்கில் வாரக் கணக்கில் ஆகும் என்று சொன்னார்கள். 

சூரியனின் அருளாட்சி. 

நாம் கடக்கப் போவது  மூன்றாவது டைப் பாலம். 
இது ஃப்ரெஞ்ச் பார்லிமெண்ட் கட்டிடம் போல் தெரிகிறது. 

நிறையத் தூண்கள் கொண்ட பாரம்பரியப் புராதன பிரான்ஸின் கட்டிட அமைப்பில் உள்ளது இது. தெ மேடலைன் பில்டிங்க் ஸ்டோரி என்கிறது இமேஜஸ். 

நான்காவது டைப் பாலம் பாருங்கள்.

பூமாலை அணியாரங்களும் மேலே பாலத்தின் மீது அலங்கார விளக்குகளும் அற்புதம். ஒரு எண்ட்ரன்ஸ் வாயில் வேறு !

எங்களுடன் இரு குஜராத்தி பட்டேல் குடும்பத்தினர் பயணித்தனர். 

அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் சக பயணியர் வந்திருந்தனர் !



தொடரும் குதூகலமும் வெய்யிலும் பாலங்களும் தூண்களின் மேல் வீரர்களின் சிலைகளும். 

இது ஐந்தாவது பாலம். 

இது ஆறாவது பாலம். ஒவ்வொரு பாலத்தையும் ஒவ்வொரு விதமான ஆர்கிடெக்ஸிங்கில் கட்டியுள்ளார்கள்> 

கோட்டைச் சுவர் போல் வளைவும் மேலே பாரபட் வால்போல் சிமெண்ட் குச்சிகளால் தடுப்பும். கீழே பட்டங்கள் போல் ஒரு அமைப்பு. 
இந்தப் பாலத்தில் உள்ள விளக்குகள் உயரமாக வேறு வித டிசைனில் அமைந்துள்ளன. 

இந்தப் பறக்கும் படகில் நாங்கள் அமர்ந்திருந்த நீள பெஞ்சைப் பாருங்கள்.

நம் முதுகுப்புறம் காற்றோட்டமாக இருக்க பின்பக்கம் நீண்ட டிசைனில் துளைகள். 

கொளுத்தும் வெய்யிலில் குதூகலமாகப் பயணித்தோம். 


இதோ முக்கியமான இடம் வந்துவிட்டது. ஈஃபில் டவர். 

சுதந்திர தேவி சிலையா.. அதுக்கு இன்னும் தூரம் போகணுங்க. அதைப் படத்தில் பார்த்தோம். அப்புறம் பஸ்ஸில் செல்லும்போது பார்த்தோம். ஆனால் பறக்கும் படகில் செல்லும் போது பார்க்கலை. 

ஏன்னா இவங்க வேறு பக்கம் ஒரு சர்க்கிளா உலா போயிட்டுப் பாதி வட்டத்தில் திரும்பிக் கொண்டாந்து படகுத்துறையில் இறக்கிவிட்டுட்டாங்க போங்க. :(

இதுதாங்க டிக்கெட்டு. 

நாலுவயசுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஃப்ரீ.

பதிமூணு வயசுக்குக் கீழே உள்ளவங்களுக்கு ஆறு யூரோ. 

பெரியவங்களுக்கு 14 யூரோ. டிக்கெட் ஃபேர். 

எங்களை ஃபோட்டோ எல்லாம் எடுத்தாங்களாம். ! அதுவும் நான் சேலை கட்டி இருப்பது பார்த்துட்டு என்லார்ஜ் வேற பண்ணிப் போட்டிருந்தாங்களாம் ! ஒரு தோழி சொன்னார். அதுக்கப்புறம் நாங்க போய் ஃபோன் பண்ணிக் கேட்டா அதை யாரும் வாங்க வராததால அப்பவே எடுத்துட்டமேன்னுட்டாங்க :(

சரி போவட்டும். சூப்பரா போயிட்டு ஒரு டைனோஸரையும் பார்த்துட்டு இறங்கினோம். அது பத்தி அடுத்த இடுகைகளில் சொல்றேன் :)

2 கருத்துகள்:

  1. படங்கள் அசத்தல். அரை வட்டமடித்து பாதில கொண்டாந்து விட்டுட்டாங்களா அப்ப டிக்கெட்? கொடுத்ததுக்கு அம்புட்டுதானா..அடடா..

    பறக்கும் படகு? தண்ணிலருந்து எழுந்து கொஞ்சம் பறக்குமோன்னு நினைச்சேன். நம்ம சென்னைல பறக்கும் ரயில்னு மேலே தூக்கிக் கட்டிய தண்டவாள பாலத்தில் போவது போல ஏதேனும் இருக்குமோன்னும் நினைத்தேன் ஹிஹிஹி

    விவரங்கள் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...