2641.குழந்தைகள் கூட சத்தம் கொடுப்பதில்லை. ஒரு கொடுமையான கனவுக்குள் அகப்பட்டது போல் சமைந்துகிடக்கின்றன கட்டிடங்கள்.
2642. ஃபேரி டேல்ஸில் வரும் உறைந்த நகரம்போல் வெய்யில் உறைந்திருக்கிறது நகரத்தின் மேல். சூரியச் சிலந்தியின் இழைகளுக்குள் மாட்டிய பூச்சிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறோம்.
2643. சிறிதாவது வெளியே வரலாம் என நினைக்கும்போதெல்லாம் அச்சத்தின் பிடியை இறுக்குகிறது கொரோனா.
2644. அடுத்தடுத்து சீனாவிலும் சிங்கையிலும் இரண்டாம் கட்டத் தாக்குதல்.
2645. வங்கி அலுவலர்களும் தினமும் வங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஜூன் மாதமே என்றாலும் பள்ளிக் குழந்தைகளை எந்தவித பயமுமில்லாமல் அனுப்ப மனம் இடம் கொடுக்குமா என்பதும் மிகப் பெரும் கேள்விக்குறி.