எனது புது நாவல்.

திங்கள், 5 மார்ச், 2018

நகரத்தார் திருமகளில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள்.

கோட்டையூர் திரு ரோஜா முத்தையா பற்றித் தெரியாத புத்தக வாசிப்பாளர் இருக்க முடியாது. மாபெரும் புத்தக சேமிப்பு அவருடையது. பல்லாண்டுகளாக அவர் சேமிப்பில் இருந்த புத்தகக் கருவூலம்  இப்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது. அவர் மகள் வள்ளிக்கண்ணு  ரோஜா முத்தையாவும் அவர் போலே தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். அவர் நடத்தி வரும் இதழ்தான் நகரத்தார் திருமகள்.


மாதந்தோறும் வெளிவரும் இந்நூலில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள் என்ற தலைப்பில் என்னையும் முனைவர் முத்துப் பழனியப்பன் அவர்களையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். முனைவர் திரு. கரு முத்தையா அவர்கள் எங்களைப் போன்ற தமிழ் வளர்த்த 65 நகரத்தார்களைப் பற்றிய ஆவணமாக இதைத் தொகுத்து எழுதி உள்ளார்கள். அவர்களின் மாபெரும் முயற்சிக்குத் தலைவணங்குகிறேன்.
இதை ஒரு தொகுப்பு நூலாகவும் கொண்டு வரப் போகிறார்கள். இன்னும் இரு தொகுப்புக்கு தமிழ் வளர்த்த நகரத்தார்கள் பற்றிய விவர சேகரிப்பு செய்து கொண்டுள்ளதாக கரு முத்தையா அவர்கள் தெரிவித்தார்கள். அவருக்கும் ரோஜா வள்ளிக்கண்ணு அவர்களுக்கும் நகரத்தார் திருமகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும். 

4 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

தமிழ் வளர்ப்பவர்களில் ஒருவராக உங்களை அடையாளபடு த்தியது சரிதான்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் சகோதரி/தேனு

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//கோட்டையூர் திரு ரோஜா முத்தையா பற்றித் தெரியாத புத்தக வாசிப்பாளர் இருக்க முடியாது. மாபெரும் புத்தக சேமிப்பு அவருடையது. பல்லாண்டுகளாக அவர் சேமிப்பில் இருந்த புத்தகக் கருவூலம் இப்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது. அவர் மகள் ரோஜா முத்தையாவும் அவர் போலே தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். அவர் நடத்தி வரும் இதழ்தான் நகரத்தார் திருமகள்.//

ஆச்சர்யமான தகவல்கள். ‘நகரத்தார் திருமகள்’ இதழ் எனக்கு இதுவரை கேள்விப்படாத புதியதொரு அறிமுகமாகும்.


//மாதந்தோறும் வெளிவரும் இந்நூலில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள் என்ற தலைப்பில் என்னையும் முனைவர் முத்துப் பழனியப்பன் அவர்களையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். //

தங்களின் மாபெரும் சாதனைகள் பற்றிய பல்வேறு செய்திகளைப் பட்டியலிட்டு, தங்களின் புகைப்படத்துடனும், தங்களின் பிறந்த நாளுடனும் வெளியிடப்பட்டுள்ளது அறிந்து எனக்குள் மகிழ்ந்துகொண்டேன். :)))))

மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

தமிழுக்கும், கல்விக்கும் மட்டுமல்லாமல், வேதங்களையும் வேதவித்துக்களையும் ரக்ஷித்து காப்பாற்றி, கோயில்களில் தர்ம கார்யங்கள் பலவும் நடக்க உதவியதில் நகரத்தாரின் பங்குகள் என்றும் யாராலும் மறக்க முடியாதவைகளாகும்.

வாழ்க !

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்.

நன்றி கீத்ஸ்

நன்றி விஜிகே சார். ரொம்ப விரிவான பாராட்டுக்கு அன்பும் நன்றியும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...