எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 27 ஜூன், 2016
சனி, 25 ஜூன், 2016
இளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இளமதி பத்மா ! அன்பும் அணைப்பும். <3 span="">3>
////"பெண் பூக்கள்"
பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...

////"பெண் பூக்கள்"
பூக்களைத் தொகுத்து கவிதைகள்
ஒவ்வொன்றும் முத்துகள்...
அற்புதமான வார்த்தைகள் கோர்ப்பு
காதல் பாசம் அன்பு நேசம் அத்தனைப்
பரிமாணங்களையும் அழகாய் சொல்ல ஒரு திறமை வேண்டும்...
அது மட்டும் போதுமா என்றால் போதாது...
படிப்பவர்கள் தொய்வில்லாமல் ரசித்து படிக்க வேண்டும்...!
ஆகா என்றோ சபாஷ் என்றோ மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்க வேண்டும்
எனக்கு ஒலித்தது...!
நான் கவிதைகளின் காதலி ஒரு நல்ல கவிதையை இனம் காணும் போது மனதிற்குள் ஒரு மலர்ச்சி பொங்கும்!
தும்பை பூவைக் கூட விடாமல் கவிதையாக்கிய தேனம்மையை எண்ணி அதிசயிக்கிறேன்...
இவரின் கட்டுரைகளோ கதைகளோ பரிச்சயமில்லை ஆனால் எல்லாவற்றையும் படித்து விடவேண்டும்
என்றொரு வேட்கை வருகிறது !
வாழ்த்துகள் Thenammai Lakshmanan////
நன்றி இளமதி பத்மா, புவனா, செல்வகுமார். :)

வெள்ளி, 24 ஜூன், 2016
VVV - V3 vimarsanam. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.
Vvv vimarsanam.
:) வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.
அநியாயமா சம்பாதிச்ச
ஐநூறு கோடி ரூபாயை வைத்திருக்கும் இடத்தை அமைச்சர் (தன் மனைவிக்கு) ஜாக்கெட் (தைக்கும்)
ஜானகிராமனிடம் ரகசியமாச் சொல்லி அதை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தச் சொல்லிட்டுப்
போயிடுறார். இதுல ஜாக்கெட் அமைச்சரிடம் ஆஸ்பத்ரியில் ஜாக்கெட் போடுவதைப் போல அபிநயித்து
வந்திருக்கேன் எனச் சொல்லுமிடத்தில் ஆரம்பிக்கிறது முதல் குபீர்ச் சிரிப்பு.
ஜிங்குச்சா
ஜிங்குச்சான்னு ஒரு காஸ்ட்யூம்ல கையில மடக்குன விவாகரத்துப் பத்திரத்தோட ஒரு படம் முழுக்கக்
கலக்கி இருக்காரு புஷ்பா புருஷன். அட அவர்தாங்க பூர்வாசிரமத்துல பரோட்டா சூரி. :) சட்டை மட்டுமல்ல அதோட பட்டி கூட ஜிங்குச்சாங்க.
அதோட பாண்ட் கலரும் ஜோடி ஜிங்குச்சா. பாத்தோடனே காட்சிக்கு காட்சி அந்தக் காஸ்ட்யூம்
டிசைனர் யாருப்பான்னு யோசிக்க வைச்சிட்டாரு. :)
99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
781. X Y Z AND ZIG ZAG AA ORU ROAD .. PERU DOCTOR MOORTHY SALAI. EAST WEST NORTH SOUTH ELLA PAKKAMUM TWIST..AND TURNINGS..
782. ethai athigam nesikiromoy athai athgam verukirom.. ethai athigam verukiromoy atheiyee athigamayum nesikirom.. ESK ithu
783.விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக் குருவியைப் போலே...பறக்கணும் பறக்கணும்..
>
>
ஃபேஸ்புக்லேருந்து..
784. விதம் விதமான கீரைகள். முளைக்கீரை, அது போக தண்டுக்கீரை,அரைக்கீரை, லச்சகெட்ட கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாலக், பசலை, கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, முள்ளங்கிக் கீரை, பார்ஸ்லி, சீலரி, வெங்காயத்தாள், பருப்புக் கீரை, வல்லாரை,கோங்குரா,கடுகுக்கீரை, சோம்புக் கீரை,முடக்கத்தான், முள்ளுமுருங்கை, முசுமுசுக்கை, தூதுவளை , கரிசலாங்கண்ணி, கையாந்தரை, கீழாநெல்லி, என்று விதம் விதமான கீரைகள். பச்சைத் தண்ணியா பார்த்ததுமே சாப்பிடவேண்டும்போல் இருந்தன.
#சந்தை.
785. நலமா இருக்கீங்களா மக்காஸ்..
எப்பவும் அவசரம்தான்.
சில நாள் கழித்து மீண்டும் சந்திப்போம்.. -cag pride.
786. துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.
#தூங்குமூஞ்சி
787. சந்தோஷமா இருந்தா ஒரு ஸ்வீட் சாப்பிடணும். ரொம்ப சந்தோஷமாயிட்டா ஒவ்வொன்னிலிருந்தும் ஒன்னு. :) ரொம்ப கோவமாயிட்டா டப்பாவோட காலி பண்ணிடனும். :)
#SUGAR_CRUSH

செவ்வாய், 21 ஜூன், 2016
பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் - திருக்குறள் சிறுகதைப் போட்டியில் சூலத்துக்கு ஆறுதல் பரிசு.
திruவள்ளுவர் விழாவன்று மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த திரு.திருமதி. சிவலிங்கம் நிர்மலா தம்பதிகள்
பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சூலத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது .
இதை முகநூலில் எழுத்தாளர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பகிர்ந்திருந்தார்கள். எனது அன்புத் தோழி நிம்மி சிவா அவர்கள் ஜெர்மனியில் நிகழ்வு நடைபெற்ற போது எனக்காக அதை இன்பாக்ஸில் தெரிவித்துப் பாராட்டியிருந்தார்கள். நிகழ்வில் உடனுக்குடன் அவர் அனுப்பிய புகைப்படம். எனக்காக துறுதுறுப்போது காத்திருந்து பகிர்ந்த அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றியும் அன்பும் முத்தங்களும்.
திங்கள், 20 ஜூன், 2016
கல்கியும் நானும் & FIVE - D - THEORY. யும்
சொல்லப் போனால் இந்தத் தலைப்பு கல்கி குழும இதழ்களும் நானும் என்றிருந்திருக்க வேண்டும். கல்கி அவர்களின் நூல்களைப் படித்த அபிமானத்தினால் கல்கியும் நானும் எனத் தலைப்பிட்டுக் கொண்டுள்ளேன்.பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், தியாக பூமியும் அலைஓசையும் என்னை மயக்கியதுமல்லாமல் கி ராஜேந்திரன் அவர்களின் ரவி குலதிலகனும் என்னைக் கவர்ந்திருக்கிறார்.
///சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..///
கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோகுலத்தின் சார்பாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சக வலைப்பதிவர் மாயவரத்தான் அவர்களும் நானும் ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடுவராக அழைக்கப்பட்டிருந்தோம்.
அந்நிகழ்வில் திருக்குறள் போட்டி, ஒரு நிமிடம் உரையாடல், பாட்டுப் போட்டி, மாஜிக் ஷோ, மிமிக்ரி ஆகியன இடம்பெற்றிருந்தன. முடிவில் மாயவரத்தான் அவர்களும் நானும் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டோம்.
மாயவரத்தான் அவர்களும் குழந்தைகளுக்குத் தேவையான கருத்துக்களைச் சிறப்பாகக் கூறி அமர்ந்தார். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். அங்கே பகிர்ந்த கருத்துக்களையும் கூற விட்டுப் போன சிலவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன். {{அன்று எனது திருமண நாள், எனது ஐந்தாவது புத்தகமான சிவப்புப் பட்டுக் கயிறைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடும் நாள், மேலும் கோகுலம் சார்பாக நடுவராகக் கலந்து கொள்ளும் நாள் என முப்பெரும் விழாவாக அது எங்களை ( எனது கணவரையும் ) மகிழ்வித்தது. - கல்கியில் எனது முதல் கவிதை வெளிவந்தது - கிராமத் திருவிழா என்ற கவிதை மாணவர் பக்கத்தில் வெளியானது . அதற்குக் கொடுக்கப்பட்ட - பி. எஸ். மணி என்ற எடிட்டர் கையெழுத்திட்ட காசோலையையும் - 15 வாசகர் கடிதங்களையும் ( வாசகர் கடிதங்கள் பாகம் - 1, வாசகர் கடிதங்கள் பாகம் -2 ) என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். பெருமிதமாக உணர்கிறேன். அதன் பின் கல்கியின் கவிதை கஃபேயில் சென்ற வருடங்களில் நான்கு கவிதைகளும் வெளியாகி உள்ளன. - இரவு, மெழுகின் முணுமுணுப்பு, மீன்கள், கோதுதல் }}
பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி நிறுவனத்தின் இந்த பவளவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி. சின்னப் பிள்ளையில் இருந்து வாசித்து மகிழ்ந்த கல்கி, கோகுலம் , மங்கையர் மலர் ஆகிய பத்ரிக்கை அலுவலகத்தில் நின்று பேச முடியும் அதன் சிறப்பு விருந்தினராக வரமுடியும் என்பதே பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதை சாத்தியப்படுத்தி மாபெரும் பெருமையை வழங்கிய கோகுலத்தின் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 19 ஜூன், 2016
வாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.
ஆப்ரா கா டாப்ரா. என்றதும் நமக்கு தொப்பியும் முயல்குட்டியும் , புறாக்களும் பல்வண்ணப் பறவைகளும் வளையங்களும் ரிப்பன்களும் விதம்விதமான பூக்களும்,கூடவே ஒரு மாஜிக் நிபுணரும் ஞாபகத்துக்கு வருவாங்க.
மலேஷியாவைச் சேர்ந்த சங்கர் கல்கி குழுமப் பவளவிழாவின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கோகுலத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளின் முடிவில் மாஜிக் ஷோ நடத்தி மகிழ வைத்தார்.
ஒரு பெண்குழந்தையை அழைத்து டிஷ்யூ பேப்பரை வாயில் வைத்து எடுக்கச் சொன்னார். குழந்தையின் வாயில் இருந்து பிட்டு பிட்டாக வர
சங்கர் அதை கயிறு போல் இழுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
அடுத்து ஒரு பையனிடம் சல்மான் கான் பனியன் போட்ட புகைப்படம் காண்பித்து அடுத்துப் போடாமல் இருந்த புகைப்படம் காண்பித்து அதிலிருந்து அதே அளவு பனியனை வெளியே எடுத்து மேஜிக் செய்தார்.

சனி, 18 ஜூன், 2016
சாட்டர்டே போஸ்ட். 2014 ம் 2042 ம் பற்றி Be Positive விமல் தியாகராஜன்.
நல்ல சிந்தனையாளன், முன்னேறுகிற பையன் என்ற அறிமுகத்தோடு என் முகநூல் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமல் தியாகராஜன். உடனே அவர் வெப்சைட் சென்று பார்த்தேன் , பிரமித்தேன். கட் அவுட் கலாச்சாரத்திலும் சினிமா ரிலீஸிலும் தங்கள் இளமைப் பருவத்தை தற்கால இளைய சமுதாயம் வீணாக்கிக் கொண்டிருக்கும்போது தனது அபார உழைப்பு, பொதுநல சிந்தனையால் வியக்கவைக்கிறார் விமல் தியாகராஜன். கிட்டத்தட்ட நாலு லட்சம் பார்வைகள் கடந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பிரதமர் மோதியைச் சந்தித்து அளவளாவியர். !!! நம் வலைத்தளத்தில் வெளியிட மிகப் பொருத்தமான நபர் என்று உடன் நட்பில் இணைத்து நம்ம வலைத்தளத்துக்கான கேள்வியை முன்வைத்தேன். இன்று பதில் வந்துவிட்டது.
விமல்
தியாகராஜன் சென்னை L&T நிறுவனத்தில் (Asst. General Manager) துணைப் பொது மேலாளராக பணிப்புரிகிறார். தமிழ் பற்றும்,
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ளதாலும் “Be Positive Tamil” www.bepositivetamil.com என்ற இணைய இதழை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். இந்த இதழின் மூலம் மீடியாவின்
சமுதாய பங்கு 100% பாசிடிவாக இருக்க முடியும் என நிருபித்து வருகிறது
இவரது B+ குழு. மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், சிறிய மாற்றமாவது சமூகத்தில்
நிகழும் என்பது இவரின் நோக்கமாக உள்ளது.
இந்தப் பத்திரிகை வாயிலாக தேசப்பற்று, சுயநலமின்மை, சுற்றுப்புறச்சூழல் நட்பு ஆகியவற்றை
கற்றுத்தரும் ஊக்குவிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நம்மை
சுற்றியுள்ள ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சாதனையாளர்களை நேர்காணல்கள் எடுத்து இவரது
இதழில் வெளியிடுவது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.
தமிழில்
பாசிடிவான பகிர்வுகளை மட்டுமே தரும் ஒரே ஊடகம் B+ என்பதால், தொடக்கத்திலிருந்து
இதுவரை இவரது இணையத்தை 75000 க்கும் அதிகமான பார்வையாளர்கள், 4 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டு, தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.
/// சுற்றுசூழலில் அடுத்தகட்ட அபாயம் என்னவா இருக்கும் என்பது பற்றி எழுதிக் கொடுங்க விமல் . ///
////
2042
அன்று காலை வெகு சீக்கிரமே
எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம்
காலை 8:40 எனவும், நாள் 14/06/2042
எனவும்
காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு
அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என்
வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து
நிறுத்ததிற்கு வந்தேன்.
வெள்ளி, 17 ஜூன், 2016
கண்ணுக்கு (பசு)மை அழகு. !
ஒரு நர்ஸரி நிறுவனத்தார் ஹோட்டலில் கண்காட்சி நடத்தினார்கள். அரிய வகைச் செடிகளும், மூலிகைகளும் கூட அதில் இடம் பெற்றிருந்தன. ஹோட்டலில் திருமண வைபவங்கள், சடங்கு நிகழ்ச்சி, நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள், அலுவலக மீட்டிங்குகள், அல்லது பொருட்காட்சி போல ஏதும் சேல் எல்லாம் பார்த்திருக்கிறேன்.
முதன்முறையாக ஒரு நர்ஸரிக் கண்காட்சியைப் பார்த்தேன். குன்றக்குடிக்கு அருகில் இருக்கும் வள்ளல் அழகப்பர் நர்ஸரி நிறுவனத்தார் காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸ் ஹோட்டலில் இந்தக் கண்காட்சியை நிகழ்த்தினார்கள். வீட்டுள்ளே வளரும் செடிகள், மூலிகைகள், ரோஜாக்கள், காக்டஸ்கள் , போன்ஸாய் செடிகள் , தென்னங்கன்றுகள் மற்றும் நாம் பெயர் மட்டுமே கேள்விப்பட்டு, பார்த்திராத செடிகள் அனைத்தையும் பார்த்தேன். எனவே ஒரு பசுமைப் பதிவு. ( நாம ஃப்ளாட்டுல வெந்தயக்கீரையும் மல்லியும் வளக்குறோம்ல. :) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுல நமக்கும் பங்கிருக்கு, அக்கறை இருக்குன்னு சொல்லிக்கத்தான் :)
பாக்கெட் விதைகளைத் தூவிட்டு வந்ததா தங்கச்சி ஏஞ்சல் சொல்லி இருந்தா. துளசி வைங்கன்னு வாட்ஸப்புல வந்துது. கார்ல போம்போது காடா இருக்க இடமெல்லாம் விதைகளை வீசிட்டுப் போங்கன்னு கூட ஒரு மெசேஜ் பார்வேர்டு வந்தது. நம்ம பங்களிப்பா ஃப்ளாட் வீட்டுக்காரங்க வீட்டுக்கொரு தொட்டிச் செடி வைங்கன்னு ஒரு ரெக்வெஸ்ட் செய்யத்தான் இந்த போஸ்ட் :)
வெல்கம் மக்களே. ஒவ்வொரு செடிகிட்டயும் அழைச்சிட்டுப் போறேன் வாங்க :)

பூரத் திருநாளும் உத்திரத் திருநாளும்.
காரைக்குடியில் நடைபெற்ற கம்பர் விழாவின் மகத் திருநாளை முன்பே பதிவு செய்திருக்கிறேன். பூரம் மற்றும் உத்திரத் திருநாட்களில் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் மாட்டி ( மடிக்கணினி வாங்கி 5 வருடம் கூட ஆகவில்லை . ஹ்ம்ம் ) ப்ளூ ஸ்க்ரீன் ஆகி லாக் ஆகிவிட்டது.எனவே கைபேசியின் காமிராவில் கிடைத்தவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.
வழக்கம் போல் செல்வி கவிதாவின் இறைவணக்கத்தோடு தமிழமுதம் அருந்தினோம்.
அதன் பின் என் முகநூல் தோழியும் ப்ரபல கவிதாயினியுமான ராஜாத்தி சல்மா அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் அளவளாவினேன்.
அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் காரணமாக தன்னுடைய ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு விடைபெற்றார்கள். ( கம்பனில் சுவை ஊற்று என்பது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு.)
அதன் பின் கருத்துப் பொழிவு என்ற தலைப்பில் கம்பனில் மறக்க முடியாதது பற்றி திரு த. இராமலிங்கமும், கம்பனில் மறக்கக் கூடாதது பற்றி திரு பழ கருப்பையாவும் உரை நிகழ்த்தினார்கள். மிகச் செறிவான உரை இரண்டுமே.
கம்பனில் மறக்க முடியாதது பற்றிக் கூறும் போது தன்னைக் கானகத்துக்கு அனுப்ப கைகேயி கட்டளையிட்டாலும் தாயின் கட்டளையைச் சிரமேற்று நிகழ்த்திய தனயனின் செயல்பாடு மறக்க முடியாதது பற்றிப் புகழ்ந்தார்.
கம்பனில் கவிப் பொழிவு என்ற தலைப்பில் சொற்கடல் என்ற தலைப்பில் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம் மிகவும் ரசிக்கும்படி அற்புதமாகப் பேசினார். அன்றைய நிகழ்வும் கோட்டையூர் வள்ளியம்மை ஆச்சியின் விருந்தோம்பலோடு முடிவுற்றது.
மறுநாள் நாம் அனைவரும் எதிர்பார்த்த பட்டிமண்டபம். இதில் தொடக்க நிகழ்ச்சியாக எம் கவிதா தமிழமுதம் வழங்கினார்.

வியாழன், 16 ஜூன், 2016
புதன், 15 ஜூன், 2016
2015 இன் சிறந்த நூல்களுக்கான போட்டிகள் - தமிழ் வளர்ச்சித் துறை.
தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டிருக்கும் போட்டியினை எனது முகநூல் நண்பர் திரு குருப்ரசாத் அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.
2015 இல் நூல் வெளியிட்டவர்களின் கவனத்துக்காக அனுப்பி உள்ளேன். 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளருக்கு 30 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு 10 ஆயிரமும் பரிசு.
பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் & விதிமுறைகளை www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம்,
தமிழ் சாலை,
எழும்பூர்,
சென்னை - 8
இந்த முகவரியிலும் விண்ணப்பப் படிவங்கள் பெறலாம்.

செவ்வாய், 14 ஜூன், 2016
கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.
சென்ற நவம்பரில் ஒரு நாள் எனது முகநூல் படத்தில் ( அது ஒரு பத்ரிக்கையில் தீபாவளி ரெசிப்பீஸுக்காக கௌரவத் தோற்றம் கொடுத்த படம் ) குழந்தைகளுக்கான ரெசிப்பீஸ் அனுப்ப முடியுமா. முடியும் என்றால் இந்த ஈ மெயில் ஐடிக்கு அனுப்புங்க என்று ஒரு கமெண்ட். யார் என்று பார்த்தால் அவர் கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள்.
குமுதம், அவள் விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், குங்குமம் தோழி, புதிய தரிசனம், சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், தேவதை ஆகியவற்றில் எழுதி இருந்தாலும் என்னவோ சமையல் ரெசிப்பிஸ் எழுதுவதில் கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கவிதை கதை கட்டுரை போல சமையல் குறிப்பு எழுதுபவர்களை யாரும் ஒரு எழுத்தாளராக ஒப்புக் கொள்வதில்லை என்ற தயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தது மனதில் . இருந்தும் எனது வலைத்தளத்தில் அவ்வப்போது உணவுக் குறிப்புகள் வெளியிட்டே வந்திருக்கிறேன்.

நல்ல காலம் பிறக்குது. நல்ல கோலம் பிறக்குது.
ஒவ்வொரு வெள்ளியன்றும் வாசலில் மாக்கோலம் போடுவது வழக்கம். அதை எல்லாம் சேகரித்துப் போட்டுள்ளேன். இது பச்சரிசி மாவை அரைத்துக் காயவைத்துக் கோலக்கூட்டுன்னு வைச்சிருப்பாங்க. இதைக் கரைத்துத் துணியால நனைத்து மோதிர விரலால இழை இழுத்துக் கோலம் போடுவோம் எளிமையான என் கோலங்கள் இங்கே உங்க பார்வைக்காக. :)
கோலம் தீமையை அண்டவிடாமல் தடுக்கும்னு இந்து மத நம்பிக்கை. இதுல மயில் கோலம் வீட்டில் திருப்புகழ் பாராயணம் செய்த அன்னைக்குப் போட்டது. :)

திங்கள், 13 ஜூன், 2016
சிவப்புப் பட்டுக் கயிறு -நூல் வெளியிடு புகைப்படங்கள்.
சென்னையில் நடைபெற்ற 39 வது புத்தகத் திருவிழாவில் எனது ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்புப் பட்டுக் கயிறு வெளியிடப்பட்டது.
தென்னக ரயில்வேயில் உயர் பொறுப்பில் இருக்கும் திரு . இளங்கோவன் ஐஆர் எஸ் அவர்களும், சாஸ்த்ரி பவனில் உயர் பொறுப்பில் இருக்கும் திருமதி கீதா இளங்கோவன் அவர்களும் வெளியிட, இயக்குநர் திரு. ஐ எஸ் ஆர் செல்வகுமார் அவர்களும், என் அன்புத் தங்கை புவனேஸ்வரி மணிகண்டன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
எனது தம்பி அருணாசலம் ,அவரின் துணைவியார் இந்து, எனது கணவர் , டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன் சகோ , சஞ்சய் சகோ ஆகியோர் உடனிருக்க, நான் மிகவும் மதிக்கும் வலைப்பதிவர்கள் சுப்பு தாத்தா என்ற சூர்யா சார், கணேஷ் பாலா சகோ, கார்த்திக் சகோ ( ஸ்கூல் பையன் ), பத்ரிக்கையாளர் கவிமணி, இளமதி பத்மா, பாரு குமார், அனிதா ராஜ், கவிதா ரவீந்திரன், மணிவண்ணன் பார்த்தசாரதி, விஜய் மகேந்திரன், கமலி பன்னீர் செல்வம், நாச்சியாள் சுகந்தி, உமா மோகன், லதா அருணாசலம், வெங்கட் சகோ, காஞ்சிபுரம் தியாகராஜன், கோபி கண்ணதாசன், கவிஞர் தஞ்சை எழிலன், மதுமிதா ராஜா, ஆகியோர் கலந்து கொண்டும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டும் சிறப்பித்தார்கள்.
முக்கியமான தருணத்தில் என் காமிராவும் செல்ஃபோனும் காலை வாரி விட தோழி லதா அருணாசலமும், மணிவண்ணன் பார்த்தசாரதி சாரும், வெங்கட் சகோவும் புத்தக வெளியீட்டைப் படம் எடுத்து அனுப்பி உதவினார்கள். நன்றியும் அன்பும் வாழ்த்துகளும் அனைவருக்கும். என் மதிப்பிற்குரிய இளங்கோ சாரும், தோழி பத்மா இளங்கோ அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்ற குறையைத் தவிர வேறொன்றும் இல்லை. இரு நாட்களாக உடல் நலக் குறைவினால் நிகழ்வைப் பதிவேற்ற இயலவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது.நன்றி மக்காஸ்.
புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

வெள்ளி, 10 ஜூன், 2016
கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.
கல்கி பவள ஆண்டு விழாவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றுத் தீர்ப்பு வழங்கவும், சிறப்பு உரையாற்றவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
சிறப்பிடம் அளித்தமைக்கு மிக்க அன்பும் நன்றியும் லெக்ஷ்மி நடராஜன் மேடம் & லதானந்த் சார். !!!
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.
கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.
கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.
திருக்குறள் தீபன்.
என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !
கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.
கல்கியும் நானும் & FIVE - D - THEORY -யும்.

வியாழன், 9 ஜூன், 2016
புதன், 8 ஜூன், 2016
ஞாயிறு, 5 ஜூன், 2016
வெள்ளி, 3 ஜூன், 2016
சிவப்பு பட்டுக் கயிறு.
இந்த வருடம் - ஜூன் 2, 2016 என்னுடைய
ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்பு பட்டுக் கயிறு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
![]() |
| சிவப்புப் பட்டுக் கயிறு. |
தீவுத்திடலில்
நடக்கும் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 104, 105 இல்
கிடைக்கிறது.
MY FIFTH BOOK - SHORT STORIES COLLECTION -SIVAPPU PATTUK KAYIRU IS AVAILABLE AT DISCOVERY BOOK STALL NO. 104 & 105. AT 39 TH CHENNAI BOOK FAIR.

என்னுடைய நான்காவது நூலான பெண் பூக்கள் கவிதைத் தொகுதியும் அரங்கு எண் - 407 இல் ( பூவுலகின் நண்பர்கள் ) கிடைக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ஆசிக்கும், மேலான வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் மக்காஸ்.
டிஸ்கி:- இது எனது 2,000 ஆவது இடுகை. உங்கள் அனைவரின் அன்புக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன். !!!!!

வியாழன், 2 ஜூன், 2016
துண்டு:-
துண்டு:-
மேட்டிமையாய்த்
தோளிலும்
பணிவாய்
இடுப்பிலும்
கரைகளை
மாற்றி
கட்சி
சார்பாய் ஆக்கி
வியர்வை
வாசமும்
வெத்திலைக்
காவியும் சுமந்து
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)