ஒரு
கணவனின் கேள்விகள்:-
படுக்கைகள்
சுருண்டிருக்கும்
வாளிகள்
காய்ந்திருக்க
எலியை
சாக்கடை குதறவிட்டு
எங்கே
காணாமல் போனாய் நீ ?
வீட்டுக்குள்
கொசுக்கள் கும்மாளமடிக்க
எறும்புகள்
சிதறிக்கிடக்க
மனசெங்கும்
வண்டுகள் குடையவிட்டு
எங்கே
தொலைந்தாய் நீ ?
செடிகள்
கரம்முறிந்து கீழ்கிடக்க,
பூக்கள்
சோம்பலாய்க் கண்விழிக்க,
தோட்டமே
திசைமாறிப் போயிருக்கவிட்டு
நீ தொலைந்து
போனது ஏன் ?
புத்தகங்கள்
நிர்வாணித்துக் கிடக்க
உடைகள்
காயம்பட்டுக் கொள்ள
மேஜைகள்
தலைகீழாய்த் தூங்கவிட்டு
எங்கு
போனாய் நீ ?
சமையலறை
தரிசாய்க்கிடக்க
திரைகள்
திரண்டுபோக
பாத்திரங்கள்
பரப்பிக் கிடக்க
எந்தக்
கனவினும் கரைந்துபோனாய் நீ ?
சுவருக்கு
வெளியிலெல்லாம் பசுமை,
உள்ளெல்லாம்
விஷக்காற்று,
எந்தச்
சுவாசத்தில்
எந்தத்
திசையில்
மயங்கிக்
கிடக்கிறாய் நீ . ?
ஆமாம், எங்கே போனாள் அவள்?
பதிலளிநீக்கு:)))
அதான் தெரில ஸ்ரீராம் .. மர்மமா இருக்கு :) டிடெக்டிவை கூப்பிடுங்க :)!
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அவள் இல்லாவிட்டால் வீடே அலங்கோலம்தான் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்:)
பதிலளிநீக்கு